அடிச்சான் பாரு Google.. இனி YouTube நம்ம கையில.. இலவசமாக சேர்க்கப்பட்ட பிரீமியம் லைட் சந்தா!
கூகுள் ஏஐ ப்ரோ (Google AI Pro) திட்டத்தில் கூடுதல் சலுகையாக யூடியூப் பிரீமியம் லைட் (YouTube Premium Lite) தனிநபர் திட்டம் இலவசமாக வழங்கப்படுகிறது. இது வழக்கமான யூடியூப் பிரீமியம் திட்டத்தை விட குறைந்த விலையில் கிடைக்கிறது. ஆகவே, சலுகைகளும் கொஞ்சம் குறைவாக இருக்கும். இதுகுறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
யார் யாருக்கு இந்த சலுகை கிடைக்கும்?
கூகுள் ஏஐ ப்ரோ மெம்பர்களில் மாதாந்திர, வருடாந்திர (கூகுள் ஒன் 5 டிபி மற்றும் 10 டிபி உட்பட) திட்டங்களை பெறுபவர்கள் அல்லது மூன்றாம் தர சப்ஸ்கிரைபர்களுக்கு (Third-party Subscribers) இந்த யூடியூப் பிரீமியம் லைட் சலுகை பொருந்தும். ஃபேமிலி குரூப்கள் (Family Groups) இருந்தாலும், திட்ட மேலாளர்களுக்கு (Plan Managers) மட்டுமே இந்த சலுகை கிடைக்கும்.

டிரையல் ப்ரீயட்களில் (Trial Period) இருக்கும் மெம்பர்களுக்கு இந்த சலுகை பொருந்தாது. ஆகவே, திட்டத்தை பெறும் மெம்பர்களுக்கு மட்டுமே யூடியூப் பிரீமியம் லைட் கொடுக்கப்படுகிறது. அதேபோல, யூடியூப் பிரீமியம் சந்தாவில் கிடைக்கும் சில சலுகைகள் இதில் கொடுக்கப்படாது. இதை தெரிந்து கொண்டு மெம்பர்ஷிப்புக்கு செல்லுங்கள்.
யூடியூப் பிரீமியம் லைட்டில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?
இந்த திட்டத்தில் பெரும்பாலான யூடியூப் மற்றும் யூடியூப் கிட்ஸ் (YouTube Kids) வீடியோக்களை கம்மியான விளம்பரங்களுடன் பார்த்து கொள்ளலாம். ஆஃப்லைனிலும் (Offline), பேக்கிரவுண்ட் பிளேயிலும் (Background Play) வீடியோக்களை பார்த்து கொள்ள முடியும். இது முழுமையான யூடியூப் பிரீமியம் திட்டம் அல்ல என்பதால், சில கட்டுப்பாடுகள் உள்ளன.
ஆகவே, விளம்பரங்கள் வரலாம். அதாவது, யூடியூப் ஷார்ட்ஸ் (Shorts), மியூசிக் சார்ந்த வீடியோக்கள், சர்ச் ரிசல்ட்கள் (Search results) மற்றும் பிரவுஸ் செய்யும்போது விளம்பரங்கள் தோன்றலாம். இதில் யூடியூப் மியூசிக் பிரீமியம் (YouTube Music Premium) சேர்க்கப்படவில்லை. ஆகவே, யூடியூப் மியூசிக் ஆப்பில் விளம்பரமில்லாமலோ அல்லது பேக்கிரவுண்ட்டிலோ பாடல்களைக் கேட்க முடியாது.
ஷார்ட்ஸ் மற்றும் மியூசிக் கன்டென்ட்களுக்கு டவுன்லோட் மற்றும் பேக்கிரவுண்ட் பிளே கிடைக்காது. ஆகவே, அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோக்கள், கவர் சாங்ஸ், டான்ஸ் வீடியோக்கள் அல்லது பேக்கிரவுண்ட் மியூசிக் கொண்ட வ்லாக் (Vlog) வீடியோக்களை ஆஃப்லைனில் டவுன்லோட் செய்யவோ அல்லது பேக்கிரவுண்டில் பிளே செய்யவோ முடியாது.
கண்டினியூ வாட்சிங் (Continue Watching), ஜம்ப் அஹெட் (Jump Ahead), வீடியோ கியூயிங் (Queuing) மற்றும் ஹைகுவாலிட்டி ஆடியோ/வீடியோ போன்ற மேம்பட்ட பீச்சர்கள் இதில் கிடைக்காது. ஆகவே, ஓரளவு பிரீமியமாக சலுகைகளை அணுக முடிகிறது. முற்றிலும் பிரீமியமான அணுகல்கள் இதில் கிடைக்கவில்லை. இதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
முழுமையான யூடியூப் பிரீமியம் அணுகலை பெறுவது எப்படி?
எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி அனைத்து அணுகல்களையும் யூடியூப் பிரீமியம் சந்தாவில் பெற விரும்பினால், கூகுள் AI அல்ட்ரா (Google AI Ultra) திட்டத்திற்கு மாறுலாம். இந்த திட்டத்தில் யூடியூப் பிரீமியம் தனிநபர் திட்டம் எவ்வித கூடுதல் கட்டணமுமின்றி முழுமையாக கிடைக்கிறது. கூகுள் ஒன் (Google One) ஆட்-ஆன் ஆப்ஷனும் சில நாடுகளில் கிடைக்கிறது.
அதாவது, ஏற்கனவே இருக்கும் கூகுள் ஒன் திட்டத்துடன் யூடியூப் பிரீமியத்தை ஒரு ஆட்-ஆன் ஆக தள்ளுபடி விலையில் பெற்றுக் கொள்ள முடியும். தனிநபர் சந்தா அல்லது தனியாக முழுமையான யூடியூப் பிரீமியம் திட்டத்தை நீங்கள் நேரடியாக இதன் மூலம் பெற்று கொள்ளலாம். மாதத்துக்கு ரூ.1,950 விலையில் கூகுள் ஏஐ ப்ரோ திட்டம் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications