ChatGPT கூட ரொம்ப நேரம், ரொம்ப நீளமா Chat பண்ணுவீங்களா? அப்போ முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க!
நீங்கள் சாட்ஜிபிடி (ChatGPT) உடன் அதிக நேரம் அல்லது மிகவும் நீண்ட உரையாடல்களை மேற்கொள்ளும் பழக்கம் கொண்டவராக இருந்தால், அந்த சாட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட தகவலை கண்டறிய, சாட்ஜிபிடி உடன் நீங்கள் செய்த முழு உரையாடலையும் சல்லடை போட்டு தேட வேண்டியதாக இருக்கும். அப்படித்தானே?
ஆனால், இது விரைவில் மாறவுள்ளது. சாட்ஜிபிடி உடன் நீங்கள் எவ்வளவு நீளமாக சாட் செய்து இருந்தாலும், அதில் உங்களுக்கு தேவைப்படும் விஷயங்களை வேகமாக கண்டறிய உதவும் ஒரு புதிய அம்சம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதோடு சேர்த்து, ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனமானது மேலும் சில புதிய அம்சங்களிலும் பணியாற்றி வருவதாக தெரிகிறது.

ஆண்ட்ராய்டு அத்தாரிட்டியின் (Android Authority) சமீபத்திய அறிக்கையின்படி - ஆண்ட்ராய்டில் உள்ள சாட்ஜிபிடி ஆப்பில் (வெர்ஷன் 1.2026.146) சோதனை செய்யப்படும் சில சுவாரஸ்யமான புதிய அம்சங்கள் கண்டறியப்பட்டுள்ளது. முதலாவதாக, த்ரீ-டாட் மெனுவில் 'ஃபைண்ட் இன் சாட்' (Find in chat) என்ற புதிய விருப்பம் உள்ளது.
அந்த ஆப்ஷனை கிளிக் செய்து, சில டெக்ஸ்ட்-ஐ (சாட்ஜிபிடி உடன் நீங்கள் செய்த உரையாடலில் உங்களுக்கு நினைவில் உள்ள ஒரு டெக்ஸ்ட்-ஐ) டைப் செய்தால், குறிப்பிட்ட சாட்டில் அந்த டெக்ஸ்ட் உடனடியாக கண்டறியப்பட்டு, உங்களுக்கு காட்டப்படும். அதாவது நீங்கள் கைமுறையாக ஸ்க்ரோல் செய்து தேடாமல், குறிப்பிட்ட சாட்டில் உள்ள குறிப்பிட்ட இடத்திற்கு நேரடியாக, விரைவாக செல்ல முடியும்.
இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், இண்டர்நெட்டில் மிகவும் பிரபலமான, எப்போதும் பயனுள்ள கண்ட்ரோல் + எப் (Ctrl + F) ஷார்ட்கட்டை போலவே, சாட்ஜிபிடியின் ஃபைண்ட் இன் சாட் அம்சம் வேலை செய்கிறது. இருப்பினும் கண்ட்ரோல் + எப் போன்ற ஒரு பிரத்யேக அம்சம் இல்லாமல், ஒரு ஸ்மார்ட்போனில் விஷயங்கள் அவ்வளவு எளிதாக இருந்தது இல்லை. சாட்ஜிபிடி வழியாக அந்த குறை நிவர்த்தி செய்யப்படலாம்.
இதோடு சேர்த்து ஓப்பன்ஏஐ நிறுவனமானது சாட்ஜிபிடி ஆப்பின் யூசர் இன்டர்பேஸிலும் மாற்றங்களை செய்து வருகிறது. இதன்கீழ் - தற்போது டீப் ரிசர்ச், திங்கிங், வெப் சர்ச் மற்றும் கிரியேட் இமேஜ் (Deep Research, Thinking, Web Search, and Create Image) போன்ற நீண்ட, ஸ்க்ரோல் செய்யக்கூடிய விருப்பங்களின் பட்டியலை காட்டும் பிளஸ் ஐகான் (Plus icon) ஆனது இன்னும் சற்று ஒழுங்கமைக்கப்படலாம்.
டீப் ரிசர்ச், திங்கிங் மற்றும் பிற அம்சங்களை உள்ளடக்கிய ஒரு புதிய 'பிளகின்ஸ்' விருப்பம் (New Plugins option) மேற்குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு வெர்ஷனில் கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல புதிய லிஸ்ட் மற்றும் கிரிட் விருப்பங்கள் (New List and Grid options), லைப்ரரியில் உள்ள பல கோப்புகளை தேர்ந்தெடுப்பதற்கான ஒரு விருப்பம், அத்துடன் "@" குறியீட்டை பயன்படுத்தி சாட்ஜிபிடி லைப்ரரியில் (ChatGPT Library) இருந்து மற்ற சாட்களில் கோப்புகளை சேர்க்கும் (Add files) வசதி ஆகிய புதிய அம்சங்களும்,மாற்றங்களும் கூட கண்டறியப்பட்டு உள்ளன
இந்த கடைசி அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் லைப்ரரிக்குள் சென்று, படத்தை கண்டுபிடித்து, பின்னர் அதை ஒரு சாட்டில் இணைப்பதை விட இது நிச்சயமாக எளிதாக இருக்கும். இந்த அம்சங்கள் எப்போது பயனர்களுக்கு வெளியிடப்படும் என்பது தெளிவாக தெரியவில்லை, ஆனால் அவை கூடிய விரைவில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். மேலதிக விவரங்கள் கிடைத்தால், அதை உடனுக்கூடன் அப்டேட் செய்கிறோம்.


Click it and Unblock the Notifications