Home
Artificial intelligence

Apple ஒரே போடு.. மாதம் ரூ.399 மட்டுமே.. புதிய AI பீச்சர்களுடன் ஆப்பிள் கிரேயேட்டர் ஸ்டூடியோ அப்டேட்!

ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் கிரேயேட்டர் ஸ்டூடியோ (Apple Creator Studio) ஆப்புக்கான புதிய அப்டேட்களை அறிவித்துள்ளது. ஏற்கனவே, சந்தாதாரர்களாக உள்ளவர்களுக்கு நவம்பர் மாதம் முதல் ப்ரீ அப்டேட்டாக வழங்கப்பட உள்ளன. வீடியோ எடிட்டிங் (Video Editing), மியூசிக் கிரியேஷன், போட்டோ எடிட்டிங் மற்றும் பிரசன்டேஷன் ஆப்களில் ஏஐ (AI) பீச்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

மேக் (Mac) மாடல்களுக்கு பைனல் கட் ப்ரோ (Final Cut Pro) ஆப்பில் இப்போது மோஷன் விஎப்எக்ஸ் (MotionVFX) அணுகலும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான டெம்ப்ளேட்கள், கிராபிக்ஸ், டைட்டில்கள் மற்றும் கலர் கிரேடிங் (Color Grading) டூல்களை ஆப்பிள் யூசர்கள் எளிதாக பயன்படுத்தி கொள்ள முடியும்.

Apple ஒரே போடு.. மாதம் ரூ.399 மட்டுமே.. ஆப்பிள் கிரேயேட்டர் ஸ்டூடியோ!

மேலும், கன்டென்ட் ஹப் (Content Hub) மற்றும் பிக்சல்மெடார் ப்ரோ (Pixelmator Pro) இன்டிகிரேஷனும் இதில் நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, டெக்ஸ்ட் பேஸ்டு ப்ராம்ப்ட்கள் மூலம் போட்டோக்களை உருவாக்கும் இமேஜ் ஜெனரேஷன் (Image Generation), அனிமேஷன் கண்ட்ரோல்ஸ் (Animation Controls) மற்றும் டைம்லைன் எடிட்டிங் (Timeline Editing) மட்டுமல்லாமல்,

23 மூன்று கூடுதல் மொழிகளுக்கான டிரான்ஸ்கிரிப்ஷன் (Transcription) வசதிகளும் பைனல் கட் ப்ரோவில் இணைக்கப்பட்டுள்ளன. அதேபோல, மோஷன் (Motion) மற்றும் கம்ப்ரசர் (Compressor) ஆப்களிலும் புதிய எடிட்டிங் பீச்சர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பிக்சல்மெடார் ப்ரோ ஆப்பில் புதிதாக ஜெனரேட் ஃபில் (Generate Fill) என்ற பீச்சர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

போட்டோவில் குறிப்பிட்ட பகுதியை தேர்ந்தெடுத்து, நேச்சுரல் வாய்ஸில் ப்ராம்ப்ட்களை கொடுத்து மாற்றங்களை செய்ய இது உதவுகிறது. மேலும், போட்டோக்களின் ஷார்ப்னஸை அதிகரிக்கும் சூப்பர் ரெசல்யூஷன் (Super Resolution), லேயர் எடிட்டிங் (Layer Editing) மற்றும் இண்டலிஜெண்ட் மாஸ்க்கிங் (Intelligent Masking) போன்ற பீச்சர்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

Apple ஒரே போடு.. மாதம் ரூ.399 மட்டுமே.. ஆப்பிள் கிரேயேட்டர் ஸ்டூடியோ!

லாஜிக் ப்ரோ (Logic Pro) ஆப்பில் புதிய லிக்விட் கிளாஸ் (Liquid Glass) டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் மற்றும் ஓப்பன்ஏஐ (OpenAI) டெக்னாலஜிகளுடன் இயங்கும் இண்டலிஜெண்ட் அசிஸ்டெண்ட் (Intelligent Assistant) வசதியும் இதில் உள்ளது. அத்துடன் மியூசிக் அண்டர்ஸ்டாண்டிங் (Music Understanding), ஸ்டெம் ஸ்பிளிட்டர் (Stem Splitter) உள்ளன.

கூடவே, வாய்ஸ் மெமோ ஸ்டூடியோ சவுண்ட் (Voice Memo Studio Sound) பீச்சர்களும் வந்துள்ளன. கீநோட் (Keynote), பேஜஸ் (Pages) மற்றும் நம்பர்ஸ் (Numbers) ஆப்களிலும் ஏஐ அசிஸ்டெண்ட் வசதி அறிமுகமாகியுள்ளது. மற்ற ஏஐ டூல்களையும் இணைத்து பயன்படுத்தும்படியான கான்டெக்ஸ்ட் புரோட்டோகால் (Model Context Protocol) ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஃப்ரீஃபார்ம் (Freeform) ஆப்பில் புதிய டெக்ஸ்ட் ஸ்டைல்கள் (Text Styles) மற்றும் பேக்கிரவுண்ட் கலர்களை மாற்றும் வசதிகளும் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளன. ஆப்பிள் கிரேயேட்டர் ஸ்டூடியோவின் மாதாந்திர சந்தா விலை ரூ.399 ஆகவும், வருடாந்திர சந்தா ரூ.3,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் சிலருக்கு சலுகையிலும் கிடைக்கிறது.

அதாவது, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான எஜுகேஷன் பிளான் (Education Plan) மாதம் ரூ.199 அல்லது வருடத்திற்கு ரூ.1,999 என்ற விலையில் கிடைக்கிறது. புதிய சந்தாதாரர்களுக்கு ஒரு மாத இலவச டிரையல் (Free Trial) மற்றும் ஃபேமிலி ஷேரிங் (Family Sharing) வசதியும் கொடுக்கப்பட்டு உள்ளது. புதிய மேக் அல்லது ஐபேட் (iPad) மாடல்களுடன் மூன்று மாத சந்தா ப்ரீயாக கிடைக்கும்.

சந்தா இல்லாமல், ஒருமுறை கட்டணமாக ஆப் ஸ்டோர் (App Store) வழியாக பைனல் கட் ப்ரோவை ரூ.29,900 விலையிலும், லாஜிக் ப்ரோவை ரூ.19,900 விலையிலும், பிக்சல்மெடார் ப்ரோவை ரூ.999 விலையிலும், மெயின்ஸ்டேஜ் (MainStage) ஆப்பை ரூ.2,999 விலையிலும் தனியாக வாங்கிக் கொள்ள முடியும். ஆகவே, கிரியேட்டர்களுக்கு பக்கா அப்டேட்டாக இது கிடைத்துள்ளது.

Best Mobiles in India

English summary
Apple Creator Studio Adds New AI Features More Creative Tools Including Built-in MotionVFX Content
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X