சீக்ரெட் AI வொர்க்.. இது நமக்கு வேண்டாம் பாஸ்.. 600 Google ஊழியர்கள் Sundar Pichai-க்கு அனுப்பிய பகீர் கடிதம்!
கூகுள் (Google) நிறுவனத்தில் பணியாற்றும் 600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (Chief Executive Officer) ஆன சுந்தர் பிச்சைக்கு (Sundar Pichai) "முக்கிய கடிதம்" ஒன்றை எழுதி உள்ளனர். என்ன பிரச்சனை? என்ன கடிதம்? இது ஏன் முக்கியம்?
600-க்கும் மேற்பட்ட கூகுள் ஊழியர்கள், இரகசிய செயற்கை நுண்ணறிவு பணிகளை (Classified artificial intelligence work) உள்ளடக்கிய எந்தவொரு பென்டகன் ஒப்பந்தத்தையும் (Pentagon deal) ஆதரிக்க மறுப்பதாக கூறி, கூகுள் சிஇஓ-வான சுந்தர் பிச்சைக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

இது, செயற்கை நுண்ணறிவின் இராணுவ பயன்பாடு (Military use of AI) தொடர்பாக, கூகுள் நிறுவனத்திற்குள் ஒரு புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு முகமைகள் ஆனது வணிகரீதியான செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை (commercial AI systems) சார்ந்திருப்பதை ஆழப்படுத்தி வரும் வேளையில் இந்த கடிதம் வந்துள்ளது.
ஏற்கனவே, மேம்பட்ட டூல்களை (Advanced tools) நாடும் அரசாங்கங்களிடம் இருந்தும், நெறிமுறை வரம்புகளை (Ethical limit) கோரும் ஊழியர்களிடமிருந்தும் கூகுள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகின்றன. இதற்கிடையில் வந்துள்ள இந்த கடிதம், அழுத்தத்தை இன்னும் அதிகரிக்கும்படி உள்ளது.
ஊழியர்கள் சுந்தர் பிச்சைக்கு எழுதிய கடிதத்தில் என்ன உள்ளது? கூகுள் டீப்மைண்ட் உறுப்பினர்கள் உட்பட 600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கையெழுத்திட்ட இந்தக கடிதத்தில், இரகசிய சூழல்களில், தங்கள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த அனுமதிக்கும் ஒப்பந்தங்களில் நிறுவனம் ஈடுபடுவதை அவர்கள் விரும்பவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர் என வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
அவர்களின் கவலை, வெளிப்படைத்தன்மையை மையமாக கொண்டுள்ளது. இரகசிய பணிகள், தங்கள் தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை நிறுவனம் அறிந்துகொள்வதை தடுக்கும் என்றும், அதன் மூலம் மேற்பார்வையை திறம்பட நீக்கிவிடும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். அது, தன்னாட்சி ஆயுதங்கள் (autonomous weapons) மற்றும் பெருங்கண்காணிப்பு (mass surveillance) உள்ளிட்ட, அவர்கள் தீங்கு விளைவிப்பதாக கருதும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.
"செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்திற்கு பயனளிப்பதையே நாங்கள் காண விரும்புகிறோம்; அது மனிதாபிமானமற்ற அல்லது மிகவும் தீங்கு விளைவிக்கும் வழிகளில் பயன்படுத்தப்படுவதை காண விரும்பவில்லை. இதில் கொடிய தானியங்கி ஆயுதங்கள் மற்றும் பெருங்கண்காணிப்பு ஆகியவை அடங்கும், ஆனால் இது அதையும் தாண்டி விரிகிறது," என்று கூகுள் ஊழியர்கள் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
"கூகுள் இதுபோன்ற தீங்குகளுடன் தொடர்புபடுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரே வழி, எந்தவொரு இரகசிய பணிச்சுமைகளையும் நிராகரிப்பதே ஆகும். இல்லையெனில், அத்தகைய பயன்பாடுகள் நமது அறிவோ அல்லது அவற்றை நிறுத்தும் சக்தியோ இல்லாமல் நிகழக்கூடும்," என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
OPINION: கூகுள் ஊழியர்களின் இந்த கடிதம், நீண்டகாலமாக நிலவிவரும் உள்ளக அதிருப்தியின் வரலாற்றையும் சுட்டிக்காட்டுகிறது. 2018 இல், இதேபோன்ற ஊழியர்களின் அழுத்தம், பென்டகனின் ட்ரோன் படமெடுக்கும் திட்டத்திலிருந்து கூகுள் விலகவும், போர் மற்றும் கண்காணிப்பில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை கட்டுப்படுத்தும் கொள்கைகளை அறிமுகப்படுத்தவும் வழிவகுத்தது. அந்த உறுதிமொழிகள் இப்போது சிதைக்கப்பட்டு வருவதாக கூகுள் ஊழியர்கள் அஞ்சுவது போல் தெரிகிறது.
இல்லையென்றால் "நாங்கள் உருவாக்குவதில், முக்கிய பங்கு வகிக்கும் தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடுகளால், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மனித உயிர்கள் ஏற்கனவே இழக்கப்பட்டு, குடிமை உரிமைகள் ஆபத்தில் உள்ளன" என்று கூகுள் ஊழியர்கள் தாங்கள் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருக்க மாட்டார்கள்.இந்த இடத்தில் அவர்கள் எந்த "தொழில்நுட்பத்தை" குறிப்பிடுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை; பெரிதாக என்னவோ நடந்திருக்கிறது என்பதை மட்டும் புரிந்துகொள்ள முடிகிறது!


Click it and Unblock the Notifications