Zoom செயலி.! 23லட்ச ரூபாய்க்கு பயனர்களின் தகவல்கள் விற்பனை? ஹேக்கர் போட்டுடைத்த உண்மை!

|

கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த உலகெங்கிலும் பல நாடுகளில் நடந்து வரும் ஊரடங்கினால் வீடியோ சாட்டிங் பயன்பாடு செயலியான ஜூம் பயன்பாட்டின் பதிவிறக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் பயனர்களின் எண்ணிக்கையை போல், ஜூம் பயன்பாட்டினால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. என்ன பாதிப்பு என்று கேட்கிறீர்களா? வாங்கச் சொல்கிறோம்.

ஜூம் பயன்பாட்டால் அபாயம்

ஜூம் பயன்பாட்டால் அபாயம்

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்து வரும் இந்நிலையில், ஜூம் பயன்பாட்டால் சைபர் பாதுகாப்பின்மை அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சரியாகச் சொன்னால் பலரின் இணையப் பாதுகாப்பு பறிபோய்விட்டது மற்றும் உங்கள் தனியுரிமை தகவல்கள் இந்த பயன்பாட்டின் மூலம் ஓட்டை போட்டு வெளியுலகிற்கு அம்பலமாகிவிட்டது.

டார்க் வெப் சந்தையில் விற்பனையாகும் தகவல்கள்

டார்க் வெப் சந்தையில் விற்பனையாகும் தகவல்கள்

சமீபத்திய, ​​ஒரு புதிய அறிக்கை, ஜூம் பயன்பாட்டை ஹேக்கிங் செய்வதிலிருந்து கிடைக்கும் தகவல்களை ஹேக்கர்கள் இப்போது இணையத்தில் விற்பனை செய்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளது. இணையத்தின் இருண்ட பகுதியான டார்க் வெப் பகுதியில் பல பயனர்களின் தகவல்கள் வெளிப்படையாக விற்பனைக்கு வந்துள்ளது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பெருங்கடலில் மிதக்கும் உலகின் மிகப்பெரிய ராட்சஸ உயிரனம் கண்டுபிடிப்பு! வியப்பில் ஆழ்த்திய உருவம்!பெருங்கடலில் மிதக்கும் உலகின் மிகப்பெரிய ராட்சஸ உயிரனம் கண்டுபிடிப்பு! வியப்பில் ஆழ்த்திய உருவம்!

ஹேக்கர் போட்டுடைத்த உண்மை

ஹேக்கர் போட்டுடைத்த உண்மை

ஜூம் பயன்பாட்டின் மூலம் அனைத்து விதமான தகவல்களும் சுரண்டப்பட்டுள்ளன, குறிப்பாகப் பயனர்களின் வெப்கேமில் துவங்கி, மைக்ரோஃபோன், பயனரின் கடவுச்சொற்கள், மின்னஞ்சல்கள் மற்றும் பயனர் சாதனத்தின் தகவல்கள் உட்படக் கருவியுடன் இடையில் உள்ள அனைத்து ஒருங்கிணைந்த தரவுகளும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. சமீபத்திய மதர்போர்டு நேர்காணலின் போது இந்த அதிர்ச்சி தகவல் ஒரு ஹேக்கரால் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பர்சேஸிற்கு வந்தது பயனர்களின் தகவல்கள்

பர்சேஸிற்கு வந்தது பயனர்களின் தகவல்கள்

இப்போது டார்க் வெப் சந்தையில் இந்த பயனர்களின் தகவல்கள் விற்கப்படுகின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டினார், அதேபோல், ஹேக்கர் வர்த்தகத்தின் ஒரு பகுதியாக அவர் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அந்த நேர்காணலின் தகவல் படி, அந்த ஹேக்கர் டார்க் வெப் சந்தையில் தாமே சில zoom பயனர்களின் தகவல்களை வாங்கியுள்ளதாகவும் உண்மையைப் போட்டுடைத்திருக்கிறார்.

ரூ.200-க்கு அட்டகாச ஆஃபர்.! ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்களின் சூப்பர் திட்டங்கள்.!ரூ.200-க்கு அட்டகாச ஆஃபர்.! ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்களின் சூப்பர் திட்டங்கள்.!

ஜூம் பயனர்களின் தகவல்களுக்கு இதுதான் விலையா?

ஜூம் பயனர்களின் தகவல்களுக்கு இதுதான் விலையா?

டார்க் வெப் சந்தையில் கிடைக்கும் இத்தகைய ஜூம் குறைபாடு தகவல்கள் பொதுவாக $ 5,000 (ரூ. 3.8 லட்சம்) முதல் $ 30,000 வரை (ரூ. 22.8 லட்சம்) விற்கப்படுகின்றன என்றும் ஹேக்கர் விலையுடன் பகிர் உண்மையை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். இருப்பினும், டார்க் வெப் சந்தையில் விற்கப்படும் வேறு சில சுரண்டல் தகவல்களுக்கான விலையைக் காட்டிலும் இந்த தகவல்களுக்கான செயலற்ற விலை இது அல்ல என்றும் கூறியுள்ளார்.

விண்டோஸ் மற்றும் macOS பயனர்களின் தரவுக்கு நேர்ந்த கதி

விண்டோஸ் மற்றும் macOS பயனர்களின் தரவுக்கு நேர்ந்த கதி

ஜூம் அண்மையில் ஜூம்பாம்பிங் செய்தது என்றும் தெரிகிறது, சீரற்ற பயனர்கள் ஒரு வீடியோ கான்பிரென்ஸ் மூலம் சேர்ந்தது பயனர்களின் அனுமதியின்றி பேஸ்புக்கிற்கு அதன் பயனர் தரவை விற்றதோடு, விண்டோஸ் மற்றும் macOS பயனர்களின் தரவு மற்றும் கடவுச்சொல்லை ஹேக்கர்கள் திருட உதவும் வகையில் ஒரு மிகப் பெரிய பிணைக்கப்படாத பிழை பக்-ஐ கொண்டிருந்தது என்பதும் இப்பொழுது கண்டறியப்பட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Whatsapp சாட்களை மறைப்பது எப்படி? உங்கள் ரகசிய சாட்களை இனி யாரும் பார்க்க வேண்டாம்.!Whatsapp சாட்களை மறைப்பது எப்படி? உங்கள் ரகசிய சாட்களை இனி யாரும் பார்க்க வேண்டாம்.!

வழக்கு விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

வழக்கு விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

ஜூம் நிறுவனம் இப்போது கலிபோர்னியாவின் வடக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கை எதிர்கொள்கிறது, இதில் ஜூம் பயன்பாட்டில் எண்டு-டு-எண்டு என்கிரிப்ஷன் மற்றும் மற்றும் அதன் பயனர்களின் தனியுரிமை தகவல்களைக் கசியச் செய்து பாதுகாப்பில்லாமல் இருந்தது தொடர்பான குற்றங்களுக்குப் பதில் அளிக்க நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

தடைவிதித்த கூகிள்

தடைவிதித்த கூகிள்

தனியுரிமை தகவல் திருட்டு மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக இந்த ஜூம் பயன்பாட்டு செயலியை மக்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று கூகிள் நிறுவனம் அண்மையில் தெரிவித்தது. அதேபோல்,இந்த ஜூம் பயன்பாட்டைக் கூகிள் நிறுவனம் தனது ஊழியர்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று கண்டிப்புடன் கூறி, இந்த பயன்பாட்டை தனது ஊழியர்கள் பயன்படுத்ததடையையும்விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Zoom Video App Hacked Data Is Being Sold On Dark Web : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X