Zoom பயன்படுத்தும் மக்களே உஷார்! உங்களுக்கே தெரியாமல் நடக்கும் ஆபத்து இதுதான்!

|

வீடியோ கான்பரன்சிங் பயன்பாடான ஜூம் (ZOOM) பயன்பாட்டை மக்கள் அதிகம் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். குறிப்பாக வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்கள் மற்றும் தொலைவில் இருக்கும் அன்பானவர்களுடன் தற்பொழுது இந்த ஜூம் ஆப் தான் இணைக்கும் பாலமாக இருந்து வருகிறது. ஆனால், இதன் பின்னால் உள்ள பெரும் ஆபத்தைப்பற்றி மக்களுக்கு இன்னும் தெரியவில்லை, அப்படி என்ன ஆபத்தை இந்த பயன்பாடு உங்களுக்குச் செய்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கும் மக்களுக்கு உதவும் தொழில்நுட்பம்

வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கும் மக்களுக்கு உதவும் தொழில்நுட்பம்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அனைவரும் வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் மக்களை ஒருவருக்கொருவர் நெருக்கமாக வைத்திருக்க மொபைல் போன்கள் உதவியாக உள்ளது. இன்டர்நெட் பயன்பாடு மற்றும் ஸ்மார்ட்பஹோனே இல்லை என்றால் மக்களின் நிலை என்னவாகி இருக்கும் என்பது உங்கள் கற்பனைக்கே தெரியும்.

வீடியோ கால் அழைப்பு மூலம் இணையும் மக்கள்

வீடியோ கால் அழைப்பு மூலம் இணையும் மக்கள்

இன்னும் சரியாக சொன்னால், சமூக ஊடகங்கள் மற்றும் வீடியோ அழைப்பு பயன்பாடுகள் தான் மக்களை கிறுக்குப்பிடிக்காமல் பார்த்துக்கொள்கிறது. வீடியோ கால் அழைப்பு மூலம் தான் இந்த ஆபத்தான நேரத்திலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்த நேரத்திலும்பலரும் தங்களின் அன்பானவர்களுடன் இணைந்திருந்துநேரத்தைக் கடத்தி வருகின்றனர் என்பதே உண்மை.

மனிதர்களின் நடமாட்டம் குறைந்ததால் பூமியில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்!மனிதர்களின் நடமாட்டம் குறைந்ததால் பூமியில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்!

ஜூம் (ZOOM) பின்னால் உள்ள ஆபத்தை அறியாத மக்கள்

ஜூம் (ZOOM) பின்னால் உள்ள ஆபத்தை அறியாத மக்கள்

இந்த நேரத்தில் தான் வீடியோ கான்பரன்சிங் பயன்பாடான ஜூம் (ZOOM) பயன்பாடு பிரபலம் அடைத்தது, குழு அழைப்பிற்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஜூம் (ZOOM) பயன்பாட்டின் பின்னால் தனிநபர் தகவல்கள் கசியும் ஆபத்து உள்ளதென்று முகவர் நிறுவனங்கள் எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் நடந்து வரும் ஊரடங்கு உத்தரவால் வீடியோ கான்பரன்சிங் பயன்பாட்டிற்காக ஜூம் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இது குறித்துப் பாதுகாப்பு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

சைபர் ஆபத்து

சைபர் ஆபத்து

ஜூம் பயன்பாட்டின், பயன்பாடு தொடர்பாக சைபர் ஆபத்து குறித்து தேசிய சைபர் பாதுகாப்பு நிறுவனம் பேசியுள்ளது. உண்மையில், இந்த ஊரடங்கு காலத்தில் பெரும்பாலான மக்கள் இந்த ஜூம் பயன்பாட்டைப் பயன்படுத்தி வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள். ஜெர்மனி உட்பட பல நாடுகளில் இந்த பயன்பாட்டை மக்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி.! தரமான சலுகை அறிவிப்பு.!வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி.! தரமான சலுகை அறிவிப்பு.!

தனிப்பட்ட தகவல் கசியும் அபாயம்

தனிப்பட்ட தகவல் கசியும் அபாயம்

சைபர் பாதுகாப்பு தகவல்களின்படி, ஜூம் பயன்பாடு தனிப்பட்ட தகவல்களைக் கசியவிடுவதாகவும், மக்களை உளவு பார்த்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக உண்மையில் ஜூம் பயன்பாட்டில் எண்டு டு எண்டு என்கிரிப்ஷன் செய்யப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சகம், அதன் குடிமக்கள் மற்றும் அதிகாரிகளை ஜூம் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

கூகிள் விதித்த தடை

கூகிள் விதித்த தடை

ஜூம் பயன்பாட்டில் பதிவுகள் மற்றும் உரையாடல்கள் குறியாக்கம் செய்யப்படவில்லை என்பதனால், பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்தவரின் தனிப்பட்ட தகவல்கள் கசியும் அபாயம் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகிள் நிறுவனமும் தனது ஊழியர்களுக்கும் ஜூம் பயன்பாட்டைத் தடை செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

டெலிவரியைத் தொடங்கிய Swiggy: என்னென்ன பொருட்கள், எப்படி ஆர்டர் செய்வது?டெலிவரியைத் தொடங்கிய Swiggy: என்னென்ன பொருட்கள், எப்படி ஆர்டர் செய்வது?

ஜூம் பயன்படுத்த வேண்டாம்

ஜூம் பயன்படுத்த வேண்டாம்

கூகிள் நிறுவனம் ஜூம் பயன்பாட்டைத் தடை செய்தபின் ஜெர்மனி, தைவான், சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் தனது ஊழியர்களை ஜூம் பயன்படுத்த வேண்டாம் என்று தடை விதித்துள்ளது. ஊடக அறிக்கையின்படி, கூகிள், ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா, நாசா மற்றும் நியூயார்க்கின் கல்வி நிறுவனம் ஆகிய பல முன்னணி நிறுவனங்கள் இந்த பயன்பாட்டின் பயன்பாட்டை முற்றிலுமாக தற்பொழுது தடை செய்துள்ளது.

பயனர்களுக்கே தெரியாமல் திருட்டு

பயனர்களுக்கே தெரியாமல் திருட்டு

அதேபோல் இந்தியாவில், கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு மற்றும் தேசிய சைபர் பாதுகாப்பு நிறுவனம் ஆகியவை இந்த பயன்பாட்டின் பயன்பாடு குறித்து எச்சரித்துள்ளது. அதேபோல், பெரிய மற்றும் சிறிய தனியார் நிறுவனங்களின் தகவல்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் தகவல்களை இந்த பயன்பாடு பயனர்களுக்கே தெரியாமல் திருடி அதைத் தவறாக பயன்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது. இத்தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மணிப்பு கேட்ட தலைமை நிர்வாக அதிகாரி

மணிப்பு கேட்ட தலைமை நிர்வாக அதிகாரி

இது அனைத்தும் உண்மை தான என்று ஜூம் நிறுவனத்திடம் கேட்டபோது, அதன் தலைமை நிர்வாக அதிகாரி மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஜூம் பயன்பாட்டில் கூறப்படும் தனிநபர் பாதுகாப்பு குறைபாடுகளை விரைவில் சரி செய்வோம் என்று தலைமை நிர்வாக அதிகாரி எரிக் யுவான் தெரிவித்துள்ளார். தனி பயனரின் தனிநபர் தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர் கூறி, அதற்கான நடவடிக்கைகளை நிறுவனம் விரைவில் செய்து முடிக்கும் என்று நம்பிக்கை வார்த்தை கூறியுள்ளார்.

Best Mobiles in India

English summary
Zoom Security Warning Cyber Security Research Team Disclosing A Vulnerability In The Software : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X