இனி YuppTV கூட ஐபிஎல் 2020 போட்டிகளை பார்க்க முடியும்.! கூடுதல் முயற்சி.!

|

ட்ரீம் 11 இந்தியன் பிரீமியர் லீக் 2020 போட்டியின், உரிமையை தெற்காசிய உள்ளடக்கத்திற்கான ஓவர்-தி-டாப் (OTT) வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூப் டிவி (YuppTV), வாங்கியுள்ளதாக இன்று அறிவித்துள்ளது. மொத்தம் 60 போட்டிகளுக்கான உரிமையை யூப் டிவி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்த போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே நடைபெறவுள்ளது.

LIVE போட்டி

ஸ்ட்ரீமிங் தளம் 10க்கும் மேற்பட்ட பிராந்தியங்களில் LIVE போட்டிகளை ஒளிபரப்பும். பூட்டுதலுக்கு மத்தியில், ஏராளமான விளையாட்டு ரசிகர்கள் ட்ரீம் 11 ஐபிஎல் 2020 போட்டியை வீட்டில் அமர்ந்து அனுபவிக்க இந்த தளங்கள் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக ரசிகர்களைப் பின்தொடரும் மற்றும் ஏராளமான பார்வையாளர்களைக் கொண்ட, ட்ரீம் 11 ஐபிஎல் 2020 போட்டிக்கான உரிமைகளை YuppTV பெற்றுள்ளது.

OTT இயங்குதளம்

இந்த OTT இயங்குதளம், ட்ரீம் 11 ஐபிஎல் 2020 போட்டியை, செப்டம்பர் 19 முதல் துவங்கி நவம்பர் 10, 2020 வரை ஒளிபரப்பவுள்ளது. மற்ற கிரிக்கெட் போட்டிகளைப் போலல்லாமல், ஐபிஎல் டி20 போட்டிகள் மிகக் குறுகிய விளையாட்டு காலங்களைக் கொண்டிருக்கின்றன, வெறும் 3 மணிநேரம் மட்டுமே ஒரு போட்டி நடைபெறும் என்பதால்,அதிகப்படியான ரசிகர்களை ஐபிஎல் கவர்ந்துள்ளது. இது மிகவும் உற்சாகத்தை அளிக்கின்றது.

ட்ரீம் 11 ஐபிஎல் 2020 போட்டி

YuppTV இம்முறை, ட்ரீம் 11 ஐபிஎல் 2020 போட்டியின் மெய்நிகர் லைவ் ஸ்ட்ரீமிங்கை ஆஸ்திரேலியா, கான்டினென்டல் ஐரோப்பா, மலேசியா, தென்கிழக்கு ஆசியா (சிங்கப்பூர் தவிர), இலங்கை, நேபாளம், பூட்டான், மாலத்தீவுகள், மத்திய ஆசியா, மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் ஒளிபரப்பவுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக தற்பொழுது அறிவித்துள்ளது.

YuppTV நிறுவனம்

14 மொழிகளில் 250க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள், 3000+ திரைப்படங்கள் மற்றும் 100+ டிவி ஷோக்களை YuppTV வழங்கி வருகிறது. இப்போது இந்த பட்டியலுடன், ட்ரீம் 11 ஐபிஎல் 2020 போட்டியின் உரிமைகளுடன் இந்த ஆண்டு கூடுதல் ரசிகர்களை ஈர்க்க திட்டமிட்டுள்ளது. மேலும் பார்வையாளர்களை மெய்நிகர் ஐபிஎல்லின் சிறந்த அனுபவத்தை அரங்கத்தின் உணர்வோடு வழங்கவும் YuppTV நிறுவனம் முயன்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
YuppTV acquires rights of Indian Premier League 2020 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X