Just In
- 17 min ago
ஓடியாங்க ஓடியாங்க! ரூ.12,901 பாஸ்.. iPhone 14 மாடலை பிளிப்கார்ட்டில் இப்படியும் வாங்கலாமா?
- 57 min ago
பூமியின் அழிவு நாளை சுட்டி காட்டிய டூம்ஸ் டே கிளாக்.! இன்னும் 90 வினாடிகள் தான் மிச்சமா?
- 1 hr ago
ரூ.15,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த 5G போன்கள்: இதோ பட்டியல்.! நம்பி வாங்கலாம்.!
- 3 hrs ago
பெற்றோர்களே.! உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பிள்ளைகள் உண்டா? அப்போ இந்த போன் ரூல்ஸ் பின்பற்றனும்.!
Don't Miss
- News
திரிபுரா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 17 வேட்பாளர்களை கொண்ட பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டு உள்ளது.
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த வழிகளில் பணம் சம்பாதிப்பவர்கள் வாழும்போதே நரகத்தை அனுபவிப்பார்களாம்...!
- Movies
காலில் கட்டுடன் குஷ்பூ... என்னாச்சு என பதறிய ரசிகர்கள்... திரையுலகில் அடுத்தடுத்து அதிர்ச்சி
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய புதிய ஹூண்டாய் ஐ10... விலை இவ்ளோதானா! மாருதி, டாடா கார்களின் கதையை முடிக்க போகுது!
- Sports
கே.எல்.ராகுலிடம் செய்த அதே தவறு.. 2வது டி20க்கு முன் எடுக்க வேண்டிய நடவடிக்கை.. ஹர்திக் செய்வாரா??
- Finance
ஒரே நாளில் 8 பில்லியன் டாலர் இழப்பு.. Intel வீழ்ச்சி ஆரம்பமா..?
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
TikTok க்கு போட்டியாக Shorts மூலம் நேரடி களத்திலிறங்க YouTube முடிவு.! Shorts அப்படினா என்ன?
நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் டிக்டாக் உலகப்புகழ் பெற்ற செயலியாகத் தான் இருக்கிறது. உலகம் முழுக்க சுமார் ஒரு டன் பயனர்களைத் தன்வசம் ஈர்த்துள்ளது. ஷார்ட் வீடியோ தளமான இந்த பொழுதுபோக்கு டிக்டாக் அம்சத்திற்குப் போட்டியாகக் கூகுள் நிறுவனமும் புதிய பயன்பாட்டை அறிமுகம் செய்து இந்த போட்டியில் களமிறங்கத் தயாராகிவிட்டது.

டிக்டாக் பயன்பாட்டிற்கு போட்டியாக கூகுள்
டிக்டாக் பயன்பாட்டிற்கு போட்டியாக கூகுள் நிறுவனம் மட்டும் களத்தில் இறங்கவில்லை, முன்னிலிருந்தே பேஸ்புக் நிறுவனம் லாசோ மற்றும் ரீல்ஸ் என்ற இரண்டு ஷார்ட் வீடியோ பொழுதுபோக்கு அம்சத்தை தனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளத்தில் சோதனை செய்து வருகிறது. அதேபோல் தற்போது கூகுளின் யூட்யூப் தளத்தில் புதிதாக ஷார்ட் வீடியோ பயன்பாட்டைச் சேர்க்கத் தயாராகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஷார்ட்ஸ் (Shorts)'
ஊடகத்திற்குக் கிடைத்த தகவலின்படி யூடியூப், டிக்டாக் தளத்திற்கு போட்டியாக 'ஷார்ட்ஸ் (Shorts)' எனப்படும் புதிய பயன்பாட்டு முறையை உருவாக்கி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் அர்த்தமே இந்த பயன்பாடு ஷார்ட் வீடியோ பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்டது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. ஷார்ட்ஸ் கூடிய விரைவில் யூடியூப் பக்கத்தில் ஒரு பகுதியாகச் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூட்யூப் தளத்தில் குவிந்திருக்கும் பயனர்கள்
உலகப் புகழ்பெற்ற யூட்யூப் தளத்தில் இப்படி ஒரு அம்சம் சேர்த்து அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான பயனர்கள் யூடியுப் தளத்தைப் பாடல் கேட்பதற்கும், டுட்டோரியல் வீடியோக்களை பார்ப்பதற்கும் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே யூட்யூப் தளத்திற்குப் பெருமளவிலான பயனர்கள் குவிந்துள்ளனர்.

தேவையான பாடல்களை பதிவிறக்கம் செய்வது எளிது
ஷார்ட்ஸ் போன்ற புதிய அம்சம் வெளியிட்டால், அதன் வெற்றி டிக்டாக்-ஐ விட பல மடங்கு பெரியதாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. யூட்யூப் அறிமுகம் செய்யும் இந்த வீடியோ தளம், களத்தில் இறங்கினால் இதில் பயனர்களுக்குத் தேவையான பாடல்களும், இசையும், திரைப்படங்களின் வசனங்களும் இவர்கள் யூடியூப் தளத்திலிருந்து நேரடியாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

டிக்டாக் இல் இருக்கும் சிக்கலான காரியம்
நாம் அனைவரும் அறிந்தது போல யூட்யூபில் பாடல்களுக்கும், இசைக்கும் பஞ்சமே இல்லை. டிக்டாக் தளத்தில் பயனர்கள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சனை இசைக்கும் பாடலுக்கும் அவர்கள் பதிவிறக்கம் செய்வது ஒரு சிக்கலான காரியமாக இருக்கிறது. இந்த நிலையைப் பயன்படுத்தி யூடியூப் நிச்சயம் அதன் ஷார்ட்ஸ் சேவையை வெற்றிபெறச் செய்யும் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

டிக்டாக்-லிருந்து மாற்றமடைய ஒரு வழி
டிக்டாக், சமீபத்தில் தனது பயனர் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கு அதிகமாக உயர்த்தியுள்ளது. அதேபோல் மறுகையில் யூடியூப் தனது பயனர்களின் எண்ணிக்கையை ஒவ்வொரு மாதமும் இரண்டு மில்லியன் அதிகரித்து வருகிறது. இந்த நிலையை வைத்துப் பார்க்கும் பொழுது டிக்டாக் தளத்திற்குப் போட்டியாகக் கூகுள் எடுக்கும் நடவடிக்கை நிச்சயம் டிக்டாக் பயனர்களை டிக்டாக்-லிருந்து மாற்றமடையச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470