விரைவில் வெளியாகும் யூடியூப் மியூசிக் ஆப் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

கட்டணம் வசூலிக்கப்பட இருக்கும் யூடியூப் மியூசிக் பிரீமியம் சேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் மாதம் 9.99 டாலர்களை செலுத்த வேண்டியிருக்கும்.

|

யூடியூப் நிறுவனத்தின் மியூசிக் ஸ்டிரீமிங் சேவையின் புதிய பதிப்பை விரைவில் வெளியிட இருக்கிறது. புதிய சேவை யூடியூப் மியூசிக் என அழைக்கப்பட இருக்கிறது. புதிய மியூசிக் ஸ்டிரீமிங் தளம் ஸ்பாட்டிஃபை மற்றும் ஆப்பிள் மியூசிக் போன்ற சேவைகளுக்கு போட்டியளிக்கும் வகையில் வெளியாகிறது.

 விரைவில் வெளியாகும் யூடியூப் மியூசிக் ஆப் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

முதற்கட்டமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மெக்சிகோ மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் யூடியூப் மியூசிக் வெளியாகும் என்றும் அதன் பின் 14 நாடுகளில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பாட்டிஃபை போன்றே யூடியூப் மியூசிக் சேவையும் விளம்பரங்களுடன் கூடிய இலவச பதிப்பு மற்றும் விளம்பரங்கள் இல்லாமல் பிரீமியம் பதிப்பு என இருவிதங்களில் கிடைக்கிறது.

நீங்க பார்த்த யூடியூப் வரலாற்றை மறைக்க உதவும் புதிய முறை: பரிசோதிக்கிறது யூடியூப்நீங்க பார்த்த யூடியூப் வரலாற்றை மறைக்க உதவும் புதிய முறை: பரிசோதிக்கிறது யூடியூப்

கட்டணம் வசூலிக்கப்பட இருக்கும் யூடியூப் மியூசிக் பிரீமியம் சேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் மாதம் 9.99 டாலர்களை செலுத்த வேண்டியிருக்கும். யூடியூப் பிரீமியம் மியூசிக் சேவையில் எவ்வித விளம்பர இடையூறும் இருக்காது. இத்துடன் வாடிக்கையாளர்கள் மியூசிக் தரவுகளை ஆஃப்லைனில் டவுன்லோடு செய்யும் வசதியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 விரைவில் வெளியாகும் யூடியூப் மியூசிக் ஆப் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

மேம்படுத்தப்படும் புதிய சேவையும், தற்போதைய மியூசிக் சேவையை போன்ற வசதிகளை வழங்கினாலும், சில அம்சங்கள் புதிதாக சேர்க்கப்பட இருக்கின்றன. அந்த வகையில் யூடியூப் ஹிஸ்ட்ரி மற்றும் வாடிக்கையாளர் பயன்பாடுக்கு ஏற்ப பிளேலிஸ்ட்களை ஒவ்வொருத்தருக்கும் பரிந்துரைக்கும். கூகுளின் தகவல்களை பயன்படுத்தி உங்களது மியூசிக் அனுபவத்தை அதிகம் மேம்படுத்தும்.

 விரைவில் வெளியாகும் யூடியூப் மியூசிக் ஆப் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

யூடியூப் மியூசிக் சேவை பாடல்களை கேட்க விரும்புவோர் மட்டுமின்றி, வீடியோக்களாக அவற்றை பார்க்க விரும்புவோருக்கும் ஏற்றதாக இருக்கும் என கூகுள் தெரிவித்துள்ளது. இதற்கென யூடியூப் சேவையில் உள்ள மியூசிக் வீடியோக்கள் பயன்படுத்தப்படுகிறது.

யூடியூப் சேவை மியூசிக் மட்டுமின்றி வீடியோக்களுக்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது என யூடியூப் மியூசிக் சேவைக்கான மேலாளர் எலியஸ் ரோமன் தனது வலைப்பக்கத்தில் தெரிவித்தார். யூடியூப் மேடிக் கொண்டு யூடியூப் மியூசிக் சேவை அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த சேவை இசையை மிகவும் எளிமையாகவும், இதுவரை இல்லாத அளவு தனிப்பட்ட முறையிலும் அனுபவிக்க யூடியூப் மியூசிக் வழி செய்யும் என அவரது வலைப்பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

 விரைவில் வெளியாகும் யூடியூப் மியூசிக் ஆப் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

புதிய யூடியூப் மியூசிக் சேவை அந்நிறுவனத்தின் கூகுள் மியூிசிக் செயலிக்கு மாற்றாக அமையும். இதே போன்று யூடியூப் ரெட் சேவையும் மாற்றியமைக்கப்படுகிறது. கூகுள் பிளே மியூசிக் மற்றும் யூடியூப் ரெட் சேவைகளை ஒன்றிணைக்க கூகுள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

யூடியூப் ரெட் சேவை தற்சமயம் ரீபிரான்டு செய்யப்பட்டு யூடியூப் பிரீமியம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. இதற்கு வாடிக்கையாளர்கள் மாதம் 11.99 டாலர்கள் கட்டணாக செலுத்த வேண்டும். மற்ற வகையான யூடியூப் சேவைகளுக்கு 2 டாலர்களை கட்டணமாக வசூலிக்க யூடியூப் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

 விரைவில் வெளியாகும் யூடியூப் மியூசிக் ஆப் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

புதிய கட்டண முறைகளால் சந்தாதாரர் ஆகும் வசதி வழங்கப்படாது. மாற்றாக மியூசிக் ஒன்லி அல்லது மியூசிக் பிளஸ் வீடியோ என இரண்டு சேவைகள் வழங்கப்படும். யூடியூப் மியூசிக் பயன்படுத்த மாதம் 10 டாலர்களும், யூடியூப் பிரீமியம் சேவையை பயன்படுத்த 12 டாலர்கள் வரை செலுத்த வேண்டியிருக்கும். பிரீமியம் சேவையில் மியூசிக், விளம்பரங்கள் இல்லாத தரவுகள் மற்றும் பிரீமியம் வீடியோ தரவுகளை பயன்படுத்த முடியும்.
Best Mobiles in India

English summary
YouTube to Replace its Red App with Premium One, Bumps Up Subscription Costs ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X