யூடியூப் மொபைல் செயலியில் பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு எச்டிஆர் சப்போர்ட் வழங்கப்படுகிறது
ஸ்மார்ட்போன்களில் எச்டிஆர் வீடியோ சப்போர்ட் வழங்குவதற்கான அப்டேட்களை கூகுள் வழங்கி வருகிறது. இந்த தகவல் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் சார்ந்த தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. யூடியூப் செயலியில் எச்டிஆர் பிளேபேக் 1080 பிக்சல் ரெசல்யூஷனில் தானாக வீடியோ தரத்தை மாற்றிக் கொள்ளும்.

எவ்வித முன்னறிவிப்பும் இன்றி புதிய அப்டேட் வழங்கப்பட்ட நிலையில், ஆர்வலர்களால் இந்த அப்டேட் கண்டறியப்பட்டது.
யூடியூபில் எச்டிஆர் வீடியோக்களுக்கான சப்போர்ட் 2016 நவம்பரில் சேர்க்கப்பட்டாலும், எச்டிஆர் ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போன்களில் இந்த வசதி வழங்கப்படாமல் இருந்தது. எச்டிஆர் சப்போர்ட் பிரீமியம் மற்றும் உயர் ரக ஸ்மார்ட்போன்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. தற்சமயம் சாம்சங் கேலக்ஸி எஸ்8, நோட் 8, கூகுள் பிக்சல், எல்ஜி வி30 மற்றும் எக்ஸ்பீரியா XZ பிரீமியம் மாடல்களில் மட்டும் வழங்கப்படுகிறது.
எச்டிஆர் சப்போர்ட் கொண்ட சாதனங்களில் தொடர்ந்து உயர் ரக வீடியோக்களை சப்போரட் செய்யும் அப்டேட்களை கூகுள் தொடர்ந்து வழங்கும் என கூறப்படுகிறது.
சாம்சங் கேல்க்ஸி நோட் 8, கேல்க்ஸி எஸ் 8, எஸ் 8 பிளஸ், கூகுள் பிக்சல், எல்ஜி வி30 மற்றும் சோனி எக்ஸ்பீரியா XZ போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் எச்டிஆர் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டுள்ள எச்டிஆர் சப்போர்ட் வீடியோக்களின் தரத்தை மேம்படுத்தாது. மாறாக ஸ்மார்ட்போன்களில் உள்ள ஹை டைனமிக் ரேன்ஜ் டிஸ்ப்ளேக்கள் அதிக தரமுள்ள வீடியோக்களை பிரதிபலிக்கிறது. எச்டிஆர் டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போனில் நிறங்களை அதிக துல்லியமாகவும், இயற்கையாகவும் பிரதிபலிக்கும்.


Click it and Unblock the Notifications