யூட்யூப் அப்டேட்: என்னென்ன புதிய அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளது.?

|

கூகுள் நிறுவனத்தின் மிகவும் தரவு-திறனுள்ள வீடியோ ஸ்ட்ரீமிங் பயன்பாடான யூட்யூப் கோ, இப்போது உலகம் முழுவதும் 130-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விரிவடைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய தேடல் பொறியின் ஒரு பிரிவான யூட்யூப் ஆனது அதன் இலகுவான பயன்பாட்டை (யூட்யூப் கோ) கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பரில் அறிவித்தது. அதன் பீட்டா பதிப்பானது கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமானது.

யூட்யூப் அப்டேட்: என்னென்ன புதிய அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளது.?

இந்த லைட் வெயிட் பதிப்பின் பிரதான நோக்கமே - ஆப்லைன் வியூவிங், நியர்பை ஷேரிங் போன்ற வளர்ந்து வரும் சந்தை அம்சங்களை வழங்குவதன் மூலம் உலகெங்கிலும் உள்ள அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன் பயனர்களை அடைய வேண்டும் என்பதேயாகும்.

அனுபவத்தை மேம்படுத்த உதவுகிறது

அனுபவத்தை மேம்படுத்த உதவுகிறது

அதை இந்த உலகளாவிய விரிவாக்கத்துடன் சாத்தியப்படுத்தியுள்ள கூகுள் யூட்யூப் ஆனது சில புதிய அம்சங்களையும் பயன்ப்பாட்டினுள் கொண்டு வந்துள்ளது. இந்த அம்சங்கள் சீரற்ற அல்லது மோசமான இணைய சூழ்நிலைகளில் கூட வீடியோவை அனுபவத்தை மேம்படுத்த உதவுகிறது.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
அதிக வேக வைஃபை அல்லது தரவு நெட்வொர்க்

அதிக வேக வைஃபை அல்லது தரவு நெட்வொர்க்

மேம்படுத்தல் கண்டுள்ள யூட்யூப் கோ ஆப் ஆனது உயர் தரத்தில் உள்ள வீடியோக்களை பதிவிறக்கம், ஸ்ட்ரீம் மற்றும் பகிர்ந்து கொள்ளும் திறனை இன்னும் எளிமையாக்குகிறது. இது வீடியோவின் ஒரிஜினல் பேசிக் மற்றும் ஸ்டான்ட்டட் தரத்துடன் கூடுதலான ஒரு அணுகலாக வருகிறது. நீங்கள் அதிக வேக வைஃபை அல்லது தரவு நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டிருந்தால், இந்த புதிய திறன்களானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இடைவெளியை இது நிர்வகிக்கிறது

இடைவெளியை இது நிர்வகிக்கிறது

இந்த புதிய அம்சத்தின் கீழ் உயர் தரத்தில் ஒரு வீடியோவை தேர்ந்தெடுப்பதென்பது, ஒரிஜினல் பேசிக் மற்றும் ஸ்டான்ட்டட் வீடியோ தரத்துடன் ஒப்பிடும் போது அதிக சேமிப்பிட தேவை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய அம்சம் ஏற்கனவே யூட்யூப் பயன்பாட்டில் கிடைக்கப்பெற்றதால், நிலையான யூட்யூப் பயன்பாட்டிற்கும் யூட்யூப் கோ பயன்பாட்டிற்கும் இடையிலேயான இடைவெளியை இது நிர்வகிக்கிறது.

தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தை அணுகும் வசதி

தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தை அணுகும் வசதி

மேலும் யூட்யூப் கோ பயன்பாட்டில் அதன் முகப்புத் திரையிலேயே எளிமையான முறையில் (வெறுமென ஹோம் ஸ்க்ரீனை இழுபத்தின் வழியாக) தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தை அணுகும் வசதியும் இணைக்கப்பெற்றுள்ளது.

ஒரே நேரத்தில் பல வீடியோக்களை பகிரும் விருப்பம்

ஒரே நேரத்தில் பல வீடியோக்களை பகிரும் விருப்பம்

உடன் ஒவ்வொரு முறையும் உங்களுக்கு பிடித்த யூட்யூப் சேனல்களானது புதிய வீடியோக்களை பதிவிடும் போதெல்லாம் உங்களுக்கு அது சார்ந்த தகவலும் (அலெர்ட்) இனி கிடைக்கும். ஏற்கனவே கோ பதிப்பில் கிடைக்கும் நியர்பை ஷேரிங் அம்சமானது முன்பை காட்டிலும் எளிதான அணுகலை வழங்கும் நோக்கத்தின் கேள் ஒரே நேரத்தில் பல வீடியோக்களை பகிரும் விருப்பமானதும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

10எம்பி-க்கும் குறைவான அளவில்

10எம்பி-க்கும் குறைவான அளவில்

இந்த புதிய பதிப்பின் ஆதரவு கொண்ட நாட்டில் நீங்கள் இருந்தால், கூகுள் பிளேவிற்குள் நுழைவதின் மூலம் யூட்யூப் கோ ஆப்பை பதிவிறக்கலாம். இது 10எம்பி-க்கும் குறைவான அளவில்தான் வருகிறது என்பது மற்றும் ஜெல்லிபீன் (JellyBean) போன்ற பழைய ஆண்ட்ராய்டு பதிப்புகளில் இயங்கும் சாதனங்களை கூட ஆதரிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பல ஆப்ஸ் மற்றும் ஸ்மார்ட்போன்கள் பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
YouTube Go Now Available in Over 130 Countries Worldwide, Gets New Features. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X