Home
Apps

கலக்கிடீங்க சுந்தர்.. YouTube-க்கு வந்த புது ஷார்ட்கட்.. இனி Subscribe பண்ண சேனல்களை? Google அசத்தல் அப்டேட்!

கூகுள் டிவியில் (Google TV) உள்ள யூட்யூப் ஆப் (YouTube TV) ஆனது மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சைட் பாருடன் ஒரு பெரிய மாற்றத்தை பெறுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு வெளியிடப்படும் இந்த அப்டேட், லைப்ரரி மற்றும் சப்ஸ்கிரிப்ஷன்ஸ் போன்ற அடிக்கடி பயன்படுத்தப்படும் பிரிவுகளுக்கு எளிதான அணுகலை வழங்குவதன் மூலம் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த புதிய வடிவமைப்பு, விரைவான நேவிகேஷனுக்காக சமீபத்தில் பார்க்கப்பட்ட சேனல்களையும் முன்னிலைப்படுத்துகிறது.

அடுத்த லெவலுக்கு செல்லும் யூசர் எக்ஸ்பீரியன்ஸ்: கூகுள் நிறுவனம் ஆனது புதுப்பிக்கப்பட்ட சைட் பார், சப்ஸ்கிரிப்ஷன்ஸ் மற்றும் லைப்ரரிக்கான புதிய பிரிவை சேர்க்கிறது. இதன்கீழ் யூட்யூப் ஆப்பின் புதுப்பிக்கப்பட்ட சைட் பார், சேர்ச் மற்றும் ஹோம் பேஜை மேலே தக்கவைத்துக்கொண்டு, சப்ஸ்கிரிப்ஷன்ஸ் மற்றும் லைப்ரரிக்கான புதிய பிரிவை சேர்க்கிறது.

கலக்கிடீங்க சுந்தர்.. YouTube-க்கு வந்த புது ஷார்ட்கட்!

இது சமீபத்தில் பார்க்கப்பட்ட அல்லது அல்காரிதம் மூலம் தீர்மானிக்கப்பட்ட சேனல்களுக்கான இரண்டு நேரடி சேனல் ஷார்ட்கட்களையும் (two direct channel shortcuts) கொண்டுள்ளது. இந்த அப்டேட், இந்த பிரபலமான பிரிவுகளை அணுக தேவையான கிளிக்குகளின் எண்ணிக்கையை குறைத்து, பயனர்களுக்கு நேவிகேஷனை மிகவும் திறமையானதாக மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கூடுதல் அம்சங்கள்: செய்திகள், நேரலை, பாட்காஸ்ட்கள், இசை, கேமிங், ஸ்போர்ட்ஸ்களுக்கான ஷார்ட்கட்களும் கொண்டுவரப்பட்டுள்ளன புதிய சைட் பார் வடிவமைப்பில் செய்திகள் (News), நேரலை (Live), பாட்காஸ்ட்கள் (Podcasts), இசை (Music), கேமிங் (Gaming) மற்றும் விளையாட்டுகளுக்கான (Sports) ஷார்ட்கட்களும் அடங்கும்.

இருப்பினும், இந்த விருப்பங்கள் பயன்படுத்தப்படும் டிவி மாடலை பொறுத்து மாறுபடலாம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கூடவே பயனர்கள் தங்கள் யூட்யூப் ஆப் எக்ஸ்பீரியன்ஸை கட்டுப்படுத்த, சைட் பாரின் கீழே ஒரு 'செட்டிங்ஸ்' (Settings) பட்டன் தக்கவைக்கப்பட்டு உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த அப்டேட் யாருக்கெல்லாம் கிடைக்கும்? யூட்யூப்பிற்கான இந்த புதிய சைட் பார் டிசைனின் வெளியீடு நடைபெற்று கொண்டே இருக்கிறது. கூகுள் டிவியில் (Google TV) உள்ள யூட்யூப் ஆப்பிற்கான இந்த மேம்படுத்தப்பட்ட சைட் பார் டிசைன் ஆனது, ஒரு சர்வர் சைட் மாற்றமாக தெரிகிறது.

சாம்சங் டிவிகளை பயன்படுத்துபவர்கள் உட்பட, சில பயனர்கள் ஏற்கனவே தங்கள் ஸ்மார்ட் டிவிகளில் இந்த அப்டேட்டை கண்டதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும், எல்லா பயனர்களுக்கும் இந்த அப்டேட் இன்னும் கிடைக்கவில்லை, இது யூட்யூப்பால் இன்னும் வெளியிடப்படும் செயல்பாட்டிலேயே தான் உள்ளது என்பதை குறிக்கிறது.

கூகுள் வெளியிட்ட மற்ற சமீபத்திய அப்டேட்களை பொறுத்தவரை, இந்நிறுவனம் தனது ஜிமெயில் ஆப்பில் (Gmail App) உள்ள நேவிகேஷன் பாரில் (Navigation Bar) ஒரு புதிய ஏஐ இன்பாக்ஸை (AI Inbox) அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) ஆகிய இரண்டு ஆப்ரேட்டிங் சிஸ்டம்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

9டூ5கூகுள் (9to5Google) வழியாக கிடைத்துள்ள அறிக்கையின்படி, இந்த புதிய அம்சம் ஏஐ-பவர்டு டாஸ்க் மேனேஜ்மென்ட்டிற்கு (AI-powered task management) நேரடி அணுகலை வழங்குகிறது. இந்த அம்சம், ஜிமெயிலின் கவனத்தை பாரம்பரியமான மெசேஜ்-பர்ஸ்ட் அமைப்பிலிருந்து டாஸ்க்-பர்ஸ்ட் அணுகுமுறைக்கு மாற்றுகிறது, இது பயனர்கள் இமெயில்களை அதிகம் பார்ப்பதை விட, அவர்கள் செய்ய வேண்டிய செயல்களுக்கு முன்னுரிமை அளிக்க அனுமதிக்கிறது.

ஏஐ இன்பாக்ஸ் ஆனது பாட்டம் பாரில் உள்ள மெயில் (Mail), சாட் (Chat) மற்றும் மீட் (Meet) ஆகியவற்றுடன் வைக்கப்பட்டுள்ளது. இதை திறக்கும்போது, ​​டெஸ்க்டாப் அனுபவத்தை போலவே, செய்ய வேண்டியவை மற்றும் தெரிந்துகொள்ள வேண்டியவை என்கிற தலைப்புகளின் சுருக்கத்தை பார்க்க முடியும். அதாவது இமெயில்களின் பட்டியலை காண்பிப்பதற்கு பதிலாக, ஜிமெயில் இன்பாக்ஸ் ஆனது பயனர்கள் செய்யக்கூடிய பணிகள் மற்றும் அது தொடர்பான சுருக்கங்களை (Summaries) முன்னிலைப்படுத்துகிறது; தேவையற்றவற்றை நீக்கி, உற்பத்தித்திறனையும் சீரமைக்கிறது.

Best Mobiles in India

English summary
YouTube app on Google TV Redesigned With sidebar Now Shows New Sections Latest Channel Shortcuts and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X