எச்சரிக்கை: உங்கள் கேட்ஜெட்டின் கேமரா, ஸ்கிரீன், மைக் அனைத்தும் உங்களை உளவு பார்க்கிறது.!

உங்கள் ஸ்மார்ட்போன் மற்றும் மொபைல் போனில் நீங்கள் பயன்படுத்தும் பல செயலிகள், உங்களுக்கே தெரியாமல் உங்களை உளவு பார்க்கின்றன.

|

உங்கள் ஸ்மார்ட்போன் மற்றும் மொபைல் போனில் நீங்கள் பயன்படுத்தும் பல செயலிகள், உங்களுக்கே தெரியாமல் உங்களை உளவு பார்க்கின்றன.

எச்சரிக்கை: உளவு பார்க்கும் உங்களின் கேட்ஜெட் கேமரா,ஸ்கிரீன் & மைக்.!

உங்கள் மொபைல் மற்றும் கேட்ஜெட்டின் கேமரா, ஸ்கிரீன் மற்றும் மைக் மூலம் உங்களையும் உங்கள் மொபைல் இல் நீங்கள் செய்யும் அணைத்து காரியங்களையும் உளவு பார்க்கிறது என்ற அதிர்ச்சி தகவலை தற்போது வெளியிட்டுள்ளனர்.

ஜிபிஎஸ் மூலம் நோட்டம்

ஜிபிஎஸ் மூலம் நோட்டம்

ஸ்மார்ட்போன் இல் உள்ள ஜிபிஎஸ் மூலம் பயனரின் இருப்பிடத்தை மற்றும் அவரின் லொகேஷன் தகவல்களை எளிதாய் கண்டறியும் பழக்கத்தை பொதுவாக அணைத்து ஆண்ட்ராய்டு செயலிகளும் பயனருக்குத் தெரியாமல் பயன்படுத்தி வருகின்றன. ஸ்மார்ட்போன் இன் பேக்கிரௌண்ட்டில் இந்த செயலிகள் உங்களின் லொகேஷனை நோட்டம்விட்டுக் கொண்டிருக்கின்றது என்பது தான் உண்மை.

ஜிபிஎஸ் சேவையை ஆஃப் செய்தாலும் ஆபத்து

ஜிபிஎஸ் சேவையை ஆஃப் செய்தாலும் ஆபத்து

பாஸ்டன் இல் உள்ள நார்த்ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், உங்களின் ஸ்மார்ட்போனில் ஜிபிஎஸ் சேவையை ஆஃப் செய்து வைத்தாலும் ஆக்சிலேரோமீட்டர், மக்னெட்டோமீட்டர் மற்றும் ஜிரோஸ்கோப் மூலம் உங்களின் லொகேஷனை கண்டறிய முடியும் என்று தெரிவித்துள்ளது.

குரூப் வீடியோ கால்லிங் பக்

குரூப் வீடியோ கால்லிங் பக்

இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஆப்பிள் ஃபேஸ்டைம் பயனர்கள், குரூப் வீடியோ கால்லிங் சேவையில் பக் இருப்பதாகத் தெரிவித்திருந்தனர். இந்த பக் மற்ற பயனரின் மைக், காலர் விபரம் மற்றும் இன்னும் சில தருணங்களில் மொபைலின் முன்பக்க கேமராகளுக்கும் அனுமதி வழங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் ஃபேஸ்டைம் இல் குரூப் காலிங் சேவையை உடனே தடை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 iOS பயன்பாட்டுச் செயலிகள் உளவு

iOS பயன்பாட்டுச் செயலிகள் உளவு

மொபைல் பாதுகாப்பு செயலி ஆய்வாளர்களின் அறிக்கைபடி எக்ஸ்பீடியா, ஹோட்டல்.காம், ஹோலிஸ்டர் மற்றும் ஏர் கனடா போன்ற பல முன்னணி பயண நிறுவனங்களின் iOS பயன்பாட்டுச் செயலிகள் இரகசியமாக செக்ஷன் ரீப்ளே தொழிற்நுட்பம் பயன்படுத்தி ஸ்மார்ட்போன் ஸ்கிரீன் இல் நடக்கும் செயல்களைக் காட்சிப் பதிவு செய்கிறது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

பாஸ்போர்ட் மற்றும் கிரெடிட் கார்டு தகவல்

பாஸ்போர்ட் மற்றும் கிரெடிட் கார்டு தகவல்

பயனர்களின் அனுமதி இல்லாமல் பயனர்களின் தகவல்களைச் செயலி நிறுவனங்கள் சேகரித்து வந்துள்ள சம்பம் பலமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் சில பயன்பாடுகள் பாஸ்போர்ட் தகவல் மற்றும் கிரெடிட் கார்டு எண்களைக் கூட பயனர்களின் அனுமதி இன்றி கைப்பற்றியுள்ளது மறுக்கப்பட முடியாத உண்மை என்று தான் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இரகசியமாக டிஸ்பிளே ரெகார்டிங் மற்றும் ஸ்கிரீன்ஷாட்

இரகசியமாக டிஸ்பிளே ரெகார்டிங் மற்றும் ஸ்கிரீன்ஷாட்

நார்த்ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் 2018 ஜூலை ஆய்வின்படி, பல ஆண்ட்ராய்டு செயலிகள் பயனர்களுக்குத் தெரியாமலே இரகசியமாக டிஸ்பிளே ரெகார்டிங் மற்றும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து, அந்த பதிவுகளை அனலிடிக்ஸ் துறைக்கு அனுப்புகிறது என்றும் தெரியவந்துள்ளது. இன்னும் அதிர்ச்சி தகவல் என்னவென்றால் உங்கள் ஸ்மார்ட்போன் இன் மைக் மூலம் பல தகவல்களை இந்த செயலிகள் ஒட்டுக் கேட்கிறது என்பது தான் கூடுதல் அதிர்ச்சி.

இரகசிய அல்ட்ராசோனிக் சிக்னல்

இரகசிய அல்ட்ராசோனிக் சிக்னல்

2018 ஆம் ஆண்டு தகவல்களின்படி, பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர் இல் உள்ள நூற்றுக்கணக்கான செயலிகள், தொலைக்காட்சி மற்றும் இணையதள விளம்பரங்களில் ஒளிபரப்பப்படும் இரகசிய அல்ட்ராசோனிக் சிக்னல்களை கேட்க ஸ்மார்ட்போனில் உள்ள மைக்ரோ ஃபோனை பயன்படுத்தி வருகின்றன என்பது தெரியவந்துள்ளது. இந்த இரகசிய அல்ட்ராசோனிக் சிக்னல்கள் இயல்பாக மனிதர்களின் காதுகளுக்கு கேட்காது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா ஹேக் செய்து உளவு

கேமரா ஹேக் செய்து உளவு

ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் இல் உள்ள கேமராகளை ரிமோட் அக்சஸ் டார்ஜான் எனப்படும் ராட் அட்டாக் முறையைப் பயன்படுத்தி பயனரின் கேமராவை ஹேக் செய்து உளவு பார்த்து வருகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது. ராட் அட்டாக் முறை பயன்படுத்தி லேப்டாப் வெப் கேமராவின் இண்டிகேட்டர் விளக்குகளை ஆஃப் செய்து ஹேக் செய்து பயன்படுத்தி வருகின்றனர் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

ஏமாற்றத்துடன் கூடிய வேதனை

ஏமாற்றத்துடன் கூடிய வேதனை

இதுமட்டுமின்றி உங்களின் ப்ளூடூத் சேவையை பயன்படுத்தி நீங்கள் மாற்றம் செய்யும் தகவலையும் அருகில் உள்ள மூன்றாம் நபர் தெரிந்துகொள்ள முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆப்களை நாம் டவுன்லோட் செய்யும் பொழுது நமக்குத் தெரிந்து நாம் வழங்கும் அனுமதிகள் குறைவு தான். ஆனால் நமக்கே தெரியாமல் நம்மை உளவு பார்த்து வருகின்றனர் என்பது ஏமாற்றத்துடன் கூடிய வேதனை.

Best Mobiles in India

English summary
Your gadgets camera screen mic can be used to snoop on you : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X