ஆன்லைனில் இருப்பவர்களை அறிந்து கொள்ளும் வசதியை தந்த இன்ஸ்டாகிராம்.!

இன்ஸ்டாகிராமில் பச்சை நிற டாட் ஒருவருடைய புரொபைல் பிக்சர் அருகில் இருந்தால் ஆன்லைனில் தற்போது அந்த நபர் இருக்கின்றார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

|

உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் பயனாளிகளின் பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும், அதில் நீங்கள் ஆன்லைனில் இருக்கின்றீர்களா? உங்கள் நண்பர்கள் ஆன்லைனில் இருக்கின்றார்களா? என்பது குறித்து தெரிந்து கொள்ளும் வசதி இல்லாமல் இருந்தது. இது ஒரு மிகப்பெரிய பின்னடைவாக இந்த செயலிக்கு இருந்த நிலையில் தற்போது இந்த வசதியை இன்ஸ்டாகிராம் தனது பயனாளிகளுக்கு வழங்கியுள்ளது.

ஆன்லைனில் இருப்பவர்களை அறிந்து கொள்ளும் வசதியை தந்த இன்ஸ்டாகிராம்.!

தற்போது இந்த வசதி ஒரு பச்சை நிற டாட் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பச்சை நிற டாட் ஒருவருடைய புரொபைல் பிக்சர் அருகில் இருந்தால் ஆன்லைனில் தற்போது அந்த நபர் இருக்கின்றார் என்பதை புரிந்து கொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் உங்கள் நண்பர் ஆன்லைனில் இருக்கின்றார் என்பதை தெரிந்து கொள்வது மட்டுமின்றி உடனடியாக அந்த நபருக்கு புகைப்படங்களையோ போஸ்ட்களையோ அனுப்பி அவரது கருத்துக்களை பெறலாம்

ஒரு பயனாளி தன்னை ஃபாலோ செய்கின்றவர்கள் ஆன்லைனில் இருக்கின்றார்களா? என்பதை தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வத்தில் இருப்பார்கள். அதேபோல் தங்களிடம் அடிக்கடி தொடர்பில் இருக்கின்றவர்களின் ஆன்லைன் ஸ்டேட்டஸை அறிந்து கொள்வதில் விருப்பம் இருக்கும். இந்த வசதி குறித்து இன்ஸ்டாகிராம் நிர்வாகிகள் கூறியபோது, 'இந்த புதிய வசதி மூலம் ஆன்லைனில் ரியல் டைமில் நேரடியாக கருத்துக்களை பரிமாறி கொள்பவர்களுக்கும் புகைப்படங்களை ஷேர் செய்பவர்களுக்கும் உதவியாக இருக்கும். அதேபோல் இனிமேல் தாங்கள் ஆன்லைனில் இல்லை என்று ஒளிந்து கொள்ள முடியாது.

ஆன்லைனில் இருப்பவர்களை அறிந்து கொள்ளும் வசதியை தந்த இன்ஸ்டாகிராம்.!

மேலும் ஒரு நபர் இன்ஸ்டாகிராமில் எவ்வளவு நேரம் இருக்கின்றார் என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். அதாவது ஒருவர் 30 நிமிடங்கள் இருக்கின்றாரா? அல்லது தற்போது அவர் ஆக்டிவ்வில் இருக்கின்றாரா? என்பதையும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் இந்த வசதியை பெற நீங்கள் உங்கள் இன்ஸ்டாராம் செயலி செட்டிங்கில் மெனுவில் செட் செய்திருக்க வேண்டும். ஆனால் பொதுவாக பச்சை நிற டாட் இருந்தாலே நீங்கள் இன்ஸ்டாகிராமில் இருக்கின்றீர்கள் என்பதே இன்ஸ்டாகிராமின் புதிய வசதி ஆகும்.
ஆன்லைனில் இருப்பவர்களை அறிந்து கொள்ளும் வசதியை தந்த இன்ஸ்டாகிராம்.!

ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்த இன்ஸ்டாகிராம் செயலியில் கடந்த சில நாட்களாகவே புதுப்புது வசதிகளை கொண்டு வந்து கொண்டிருக்கின்றது. ஏற்கனவே இந்த செயலி மூலம் வீடியோ சேட் செய்யும் வசதி உள்ளது. இதன் மூலம் ஒருவர் தனிப்பட்ட ஒருவருடனோ அல்லது ஒரு குழுவாகவோ வீடியோ சேட்டிங் செய்ய முடியும். அதுமட்டுமிறி இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் இசை கேட்கவும், கேள்விகளை கேட்டு பதில் பெறும் வசதியும் இதில் உள்ளது.
ஆன்லைனில் இருப்பவர்களை அறிந்து கொள்ளும் வசதியை தந்த இன்ஸ்டாகிராம்.!

கடந்த மாதம் இந்த செயலியில் ஐஜிடிவி என்னும் வசதியை கொண்டு வந்து அதன்மூலம் வீடியோ கால் வசதியை அளித்தது. இதன் மூலம் இண்டர்நெட் பிரபலங்கள், நட்சத்திரங்கள், கலைஞர்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் மில்லியன் கணக்கானோர்களின் மனதில் இருப்பவர்களுடன் நேரடியாக பேசும் வசதி கிடைத்துள்ளது

Best Mobiles in India

English summary
You will now be able to see when your friends are online on Instagram : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X