இந்த அம்சங்கள் வெளியானால் வாட்ஸ்ஆப் வேற லெவலுக்கு செல்லும்.!

Written By:

வாட்ஸ்ஆப் அதன் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், மற்ற செய்தி தளங்களில் இணையாக இருப்பதை அறிவோம். சமீபத்திய காலம் வரை, வாட்ஸ்ஆப் அதன் மேடையில் புதிய அம்சங்களை மெல்ல மெல்ல உருட்டிக்கொண்டு தான் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படியாக வாட்ஸ்ஆப் புதிய செயல்பாடு சார்ந்த சோதனை ஒன்றை நிகழ்த்துவதாக தெரிகிறது மற்றும் அந்த புதிய அம்சத்தை பெரும்பாலான பயனர்கள் வரவேற்க்கும் வண்ணம் உள்ளது என்பது கூடுதல் தகவல். அதென்ன அம்சம்.? எப்போது உருட்டபப்டும்.? என்ற உங்களின் கேள்விகளுக்கு இதோ பதில்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கோப்பு வகைகள்

கோப்பு வகைகள்

டபுள்யூஏபீட்டாஇன்போ (WABetaInfo) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி வாட்ஸ்ஆப் ஒரு புதிய அம்சத்தை பரிசோதிக்கிறது, இது உங்கள் தொடர்புகள் அல்லது குழுக்களுடன் பகிரும் கோப்பு வகைகள் பற்றிய அம்சமாகும்.

பெரிய முன்னேற்றமாகும்

பெரிய முன்னேற்றமாகும்

இது பயன்பாட்டின் தற்போதைய திறனுக்கான ஒரு பெரிய முன்னேற்றமாகும். இந்த பயன்பாட்டில் இப்போது வேர்ட் டாக்குமெண்ட்ஸ், ஸ்லைடர்கள், ஸ்ப்ரெட்ஷீட் மற்றும் பிடிஎப்-கள் போன்ற குறிப்பிட்ட கோப்பு வகைகளை ஆதரிக்கிறது.

பரிசோதனை வெற்றி

பரிசோதனை வெற்றி

இப்போதைய பரிசோதனை வெற்றிபெற்று உருட்டப்பட்டால், எந்த கட்டுப்பாடும் இன்றி பயனர்களை அனைத்து வகையான கோப்புகளையும் பகிர அனுமதிக்கும். அதாவது இந்த புதிய அம்சத்தின் வழித்தோன்றலின் கீழ் நீங்கள் csv, doc, docx, pdf, ppt, pptx, rtf, txt, xls, xlsx போன்ற பல கோப்பு வகைகளை பகிர்ந்து கொள்ளலாம்.

அதிகபட்ச கோப்பு அளவு

அதிகபட்ச கோப்பு அளவு

எனினும், இந்த திறனை வாட்ஸ்ஆப் எப்போது வெளியேற்றும் என்பது இப்போது தெளிவாக இல்லை. மேலே குறிப்பிட்டுள்ளபடி, இந்த அம்சம் இப்போது சோதனைக்கு உட்பட்டுள்ளது. ஆதாரத்தின் படி, அனுமதிக்கப்படும் அதிகபட்ச கோப்பு அளவு ஆண்ட்ராய்டுக்கு 100எம்பி, ஐஓஎஸ்-க்கு 128எம்பி மற்றும் வாட்ஸ்ஆப் வெப் மூலம் 64எம்பி என்ற புள்ளியில் அளவுகள் நிர்ணயிக்கப்படலாம்.

4கே வீடியோ ஆதரவு

4கே வீடியோ ஆதரவு

இப்போது, இந்த அம்சம் வரையறுக்கப்பட்ட துணைக்குழு பயனர்களால் மட்டுமே சோதனை செய்யப்படுகிறது. வாட்ஸ்ஆப் நிறுவனம் 4கே வீடியோ ஆதரவு அம்சத்தையும் விரைவில் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மில்லியன் கணக்கான பயனர்கள் வாட்ஸ்ஆப் வழியாக அவற்றை பகிர்ந்து கொள்ளும் போது அதன் சர்வர்கள் திணறலாம் என்றவொரு சிக்கல் இருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
You can soon share any type of file via WhatsApp. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot