Home
Apps

என்ன சொல்றிங்க வாட்ஸ் ஆப் குரூப் இல் "ஸிரி(SIRI)"யா..!

2016 இல், வாட்ஸ் ஆப் உங்கள் குரலை பயன்படுத்தி ஸிரி மூலம் தனிப்பட்ட செய்திகளை அனுப்பும் திறனை வெளியிட்டது.

By Sharath

சமீபத்தில், வாட்ஸ் ஆப் பல புதிய அம்சங்களைப் பெற்று வருகிறது ஆனால் பெரும்பாலான அம்சங்களின் பயன்பாட்டை அண்ட்ராய்டு பயனாளர்கள் மட்டுமே பெற்று வந்த நிலையில். இப்போது, ஐபோன் க்கான வாட்ஸ் ஆப் அப்டேட் 2.18.80 ஒரு புதிய அம்சம் பெற்றுள்ளது, இதில் நீங்கள் நேரடியாக ஸிரி பயன்படுத்தி குழு செய்திகளை அனுப்ப முடியும். அத்துடன் ஸிரி ஒருங்கிணைப்பு சேவையும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

2016 இல், வாட்ஸ் ஆப் உங்கள் குரலை பயன்படுத்தி ஸிரி மூலம் தனிப்பட்ட செய்திகளை அனுப்பும் திறனை வெளியிட்டது. அண்மையில் புதுப்பித்தலுடன், ஸிரி செயலியின் வழி குழு செய்திகளை உங்கள் வாட்ஸ் ஆப் இல் அனுப்ப முடியும். ஸிரி ஒருங்கிணைப்புடன் இணைந்து புதுப்பிக்கப்பட்ட அப்டேட்டில், படங்கள் மற்றும் கிஃப்(GIF) செய்திகளை நேரடியாக நோட்டிபிகேஷன் அறிவிப்பில் காண்பிக்கும் திறன் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

சுவாரஸ்யமான விஷயம்

சுவாரஸ்யமான விஷயம்

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், குழுகளுக்கு செய்திகளை அனுப்ப உங்கள் ஐபோன் இல் பயன்பாட்டைத் திறக்கத் தேவையில்லை. உங்கள் குரலைப் பயன்படுத்தி வாட்ஸ் ஆப் குழுகளுக்கு நீங்கள் அனுப்ப விரும்பும் செய்தியைத் தட்டச்சு செய்ய ஸிரி-க்கு கட்டளையிட்டால் போதும்.

வாட்ஸ் ஆப் இல் ஸிரி

வாட்ஸ் ஆப் இல் ஸிரி

வாட்ஸ் ஆப் இல் ஸிரி-ஐ பயன்படுத்தி எப்படி குழு செய்திகளை அனுப்புவது. ஒரு குழு செய்தியை அனுப்புவதற்காக, "ஹே, ஸிரி!" என்று முதலில் கட்டளையிட்டு ஸிரி ஐ திறக்க வேண்டும் அல்லது முகப்பு பொத்தானை அழுத்தி பிடித்து. பின்னர், உங்கள் "வாட்ஸ் ஆப் குழு [பெயர்]" சொல்லி செய்தி அனுப்பு என்று ஸிரி க்கு கட்டளையிட வேண்டும். இதே பெயரில் பல குழுகள் இருந்தால், ஸிரி இப்போது குழுகளை பட்டியலிடும். பட்டியலில் இருந்து இப்போது உங்கள் குழுவை தேர்வு செய்து செய்தியைச் சொல்லவும். அது முடிந்தவுடன், நீங்கள் குழுவிற்கு செய்தியை அனுப்புமாறு ஸிரி க்கு சொன்னால் போதும்.

 ஆட்டோ டவுன்லோட்

ஆட்டோ டவுன்லோட்

இனி நோட்டிபிகேஷன் அறிவிப்புகளில் இருந்து கிஃப்(GIF) கள் மற்றும் புகைப்படங்களைக் காணலாம் மற்றும் டவுன்லோட் செய்யலாம். இந்த அம்சத்துடன் கூடுதலாக, உங்கள் வாட்ஸ் ஆப் திறக்காமலே கிஃப்(GIF) களை பார்வையிட பீக் மற்றும் பாப் சைகைகளைப் பயன்படுத்தலாம் என்று வாட்ஸ் ஆப் பீட்டா தகவல்(WABetaInfo) தெரிவிக்கிறது. இருப்பினும், உங்கள் ஆட்டோ டவுன்லோட் விருப்பத்தை முடக்கம் செய்தால் சாத்தியமாகும்.

iOS 10

iOS 10

இந்த சேவை iOS 10 மற்றும் அதற்கு மேல் செயல்படும் அறிக்கைகளுக்கு மட்டுமே என்று தெரிவிக்கிறது. மேலும் iOS 10 மற்றும் அதற்கு முந்தைய பதிப்புகள் உள்ள அனைத்து iOS பயனர்களுடனும் இன்னும் இந்த சேவை இணைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
You can now use Siri to send WhatsApp group messages : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X