மின்சார கட்டணங்களை செலுத்துவோருக்கு ரூ.300 கேஷ்பேக்: மொபிகுவிக் அதிரடி

|

மொபிகுவிக் தளத்தில் மாதந்தோரும் மின்சார கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் ரூ.300 வரை சேமிக்க முடியும்.

மின்சார கட்டணங்களை செலுத்துவோருக்கு ரூ.300 கேஷ்பேக்:  மொபிகுவிக் அதிரட

இந்த கேஷ்பேக் சலுகையை டெல்லியை சேர்ந்த BSES நிறுவனம் அறிவித்துள்ளது. BSES மற்றும் மொபிகுவிக் இணைந்து மின்சார கட்டணங்களை டிஜிட்டல் முறையில் செலுத்துவோரை உற்சாகப்படுத்தும் விதமாக கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளன. கேஷ்பேக் மட்டுமின்றி வாடிக்கையாளர்கள் மாதம் ரூ.300 வரை சேமிக்க முடியும்.

கேஷ்பேக் சலுகையை பெற வாடிக்கையாளர்கள் மின்சார கட்டணத்தினை மொபிகுவிக் வலைத்தளம் அல்லது செயலி மூலம் செலுத்த வேண்டும் என BSES வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி தெற்கு,மேற்கு, கிழக்கு மற்றும் மத்திய டெல்லியில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு 19 சதவிகிதம் கேஷ்பேக் மற்றும் மாதம் ரூ.300 வரை சேமிக்க முடியும். இந்த சலுகை செப்டம்பர் 30, 2018 வரை வழங்கப்படுகிறது.

மனதை தேற்றிக்கொள்ளுங்கள் : திகில் கிளப்பும் டைம் டிராவல் ஆதாரங்கள்.!மனதை தேற்றிக்கொள்ளுங்கள் : திகில் கிளப்பும் டைம் டிராவல் ஆதாரங்கள்.!

மொபிகுவிக் மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் 12 மாதகாலம் சலுகையை பெறமுடியும் என்பதால் ரூ.3600 வரை கேஷ்பேக் பெற முடியும். இந்த சலுகை BSES சேவையை பயன்படுத்தும் சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த சலுகையை ஆக்டிவேட் செய்ய தொடர்ச்சியாக மூன்று மாத காலம் ஒவ்வொரு காலாண்டிலும் மின்சார கட்டணத்தை மொபிகுவிக் மூலம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாதம் நிறைவுறும் போதும் வாடிக்கையாளர்களுக்கு கேஷ் கூப்பன் வழங்கப்படும், இதனை பணம் செலுத்தியதும் பயன்படுத்த முடியும்.

இ-வாலெட் மட்டுமின்றி 4000 வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ள இடங்களிலும், BSES பெட்டிகளிலும் வாடிக்கையாளர்கள் மிக எளிமையாக பணம் செலுத்த முடியும். பணம் செலுத்த வாடிக்கையாளர்கள் கிரெடிட், டெபிட், நெட் பேங்கிங், ஆட்டோ டெபிட் உள்ளட்ட சேவைகளை பயன்படுத்த முடியும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Consumers can now save up to Rs. 300 per month if they pay their electricity bills through the digital payment platform Mobikwik.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X