கேம் லைவ்: சாம்சங் நிறுவனத்தின் புதிய லைவ் ஸ்ட்ரீம் கேம் செயலி

By Siva
|

ஸ்மார்ட்போன் உற்பத்தியில் நம்பர் ஒன் இடத்தில் உள்ள சாம்சங் தற்போது கேம்ஸ் பிரியர்களுக்காக 'கேம் லைவ்' என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி உங்களை லைவ் ஸ்ட்ரீம் முறையில் ஃபேஸுக், யூடியூப் உள்பட சமூக வலைத்தளங்களிலும் இணைக்க உதவும் என்பதால் இந்த செயலி உங்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தரத்தக்கது.

கேம் லைவ்: சாம்சங் நிறுவனத்தின் புதிய லைவ் ஸ்ட்ரீம் கேம் செயலி

இந்த செயலியில் டுவிட்டர் மூலமோ அல்லது எஸ்.எம்.எஸ் மூலமோ உங்களுடைய லைவ் ஸ்ட்ரீமை உங்களது நண்பர்களுடன் இணைத்து கொள்ளலாம். அதற்கு இதில் வசதி உள்ளது. இதை தவிர இந்த செயலியில் மேலும் பல புதிய வசதிகள் பயனாளிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த செயலியால் நீங்கள் லைவ் ஸ்ட்ரீமில் விளையாடி கொண்டே நண்பர்களுடன் மைக்ரோபோன் மூலம் பேசலாம். அதுமட்டுமின்றி விளையாடிக்கொண்டே நண்பர்களுடன் சேட்டிங்கும் செய்யலாம். மேலும் நீங்கள் விளையாடும் கேமை சேவ் செய்யும் வசதியும் இதில் உண்டு

இந்த செயலியின் வசதி குறித்து ஏற்கனவே பார்த்துவிட்ட நிலையில் தற்போது இந்த செயலிக்கு என நேரக்கட்டுப்பாடும் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 4GB வீடியோ என்றால் நீங்கள் இந்த செயலி முலம் 200 நிமிடங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் அதே நேரத்தில் குறைந்த ரெசலூசன் வீடியோவாக மாற்றி கொண்டால் அதிக நேரம் பயன்படுத்தலாம்

மேலும் இந்த செயலி சாம்சங்க் கேலக்ஸ் எஸ்8 மாடலில் மட்டுமே விளையாட முடியும் என்று கூறப்படுகிறது. சாம்சங் நிறுவனத்தின் மற்ற மாடல்களிலோ அல்லது வேறு நிறுவனத்தின் மாடல் ஸ்மார்ட்போன்களிலோ விளையாட முடியுமா? என்பது குறித்து தகவல் இதுவரை வெளிவரவில்லை.

மேலும் இந்த செயலி அதிகாரபூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால் கூகுள் ப்ளே ஸ்டோரிலோ அல்லது வேறு எதிலுமோ நீங்கள் இப்போதைக்கு தேட வேண்டாம்.

ஒருவேளை இந்த செயலியை பயன்படுத்தியே ஆகவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் ஏபிகே மிரர் மூலம் நீங்கள் டவுன்லோடு செய்து பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் வெகுவிரைவில் இந்த செயலி அறிமுகம் குறித்த அதிகாரபூர்வ செய்தி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
It seems like Samsung has made a new app called Game Live.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X