முடிவுக்கு வருகிறது யாஹூ மெசஞ்சர்.!

யாஹூ மெசஞ்சரில் இன்னும் பயனாளியாக இருப்பவரகளின் கணக்குகள் அப்படியே புதிய மெசேஞ் குரூப்பான ஸ்க்யூரல் என்ற புதிய செயலிக்கு மாற்றப்பட்டுவிடும்.

|

ஜூலை 17ஆம் தேதியுடன் யாஹூ மெசஞ்சர் செயலியை முடிவுக்கு கொண்டு வர யாஹூ நிறுவனம் முடிவு செய்துள்ளது. எனவே யாஹூ மெசஞ்சரில் இன்னும் பயனாளியாக இருப்பவரகளின் கணக்குகள் அப்படியே புதிய மெசேஞ் குரூப்பான ஸ்க்யூரல் என்ற புதிய செயலிக்கு மாற்றப்பட்டுவிடும். மேலும் யாஹூ மெஞ்சரில் கடந்த ஆறு மாதங்களில் சேட் செய்த விபரங்களை டவுன்லோடு செய்து கொள்ளும் வசதியையும் யாஹூ தற்போது தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ளது.

யாஹூ மெஞ்சருக்கு பதிலாக ஸ்க்யூரல் என்ற புதிய மெஞ்சர் செயலியை யாஹூ நிறுவனம் கடந்த மாதம் பீட்டா சோதனைக்கு உட்படுத்தியது என்பது பலர் அறிந்ததே. யாஹூ மெசஞ்சர் முடிவுக்கு வந்த பின்னர் இந்த புதிய ஸ்க்யூரல் செயலி பயனாளிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது. இருப்பினும் இந்த ஸ்க்யூரல் செயலியை தற்போது சோதித்து பார்க்க விரும்புபவர்கள் பீட்டா வெர்ஷனை பயன்படுத்தி கொள்ளலாம்.

யாஹூ மெசஞ்சர்

யாஹூ மெசஞ்சர்

கடந்த 1998ஆம் ஆண்டு யாஹூ மெசஞ்சர் அறிமுகம் செய்யப்பட்டபோது, பெரும்பாலான இந்தியர்கள் அதற்கு மிகப்பெரிய வரவேற்பை அளித்தனர். இந்த பழைய முறை பயனாளிகளின் புதிய அனுபவத்தை கொடுக்க மறுத்தது. அதுமட்டுமின்றி வளர்ந்து வரும் கூகுள் டாக், சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், மற்றும் ஸ்மார்ட்போன்களில் உள்ள சேட்டிங் செயலிகளான வாட்ஸ் அப் போன்றவற்றுக்கு யாஹூவால் ஈடுகொடுக்க முடியவில்லை.

ஐஒஎஸ்

ஐஒஎஸ்

மேலும் யாஹூ தனது கடைசி முயற்சியாக யாஹூ மெசஞ்சரை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் போன்களுக்கு ஏற்ற வகையில் மாற்றம் கொண்டு வந்தது. இருப்பினும் அதனால் ஜொலிக்க முடியவில்லை.

 2015ஆம் ஆண்டு

2015ஆம் ஆண்டு

இந்த நிலையில் தான் கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யாஹூ மெசஞ்சர் புதிய வடிவில் வெளியானது. இந்த புதிய வெர்ஷனின் டிசைன் முற்றிலும் மாறுபட்டதாக இருந்ததோடு, பல புதிய வசதிகளும் இதில் இருந்தன. இந்த புதிய வெர்ஷனில் இருந்த முக்கிய வசதிகளில் அனுப்பாத மெசேஜ்களை மீட்டெடுக்கவும், அனுப்பிய மெசேஜ்களை திரும்ப பெறும் வசதியும் ஆகும்.

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப், ஐமெசேஜ், மற்றும் பேஸ்புக் ஆகியவற்றுக்கு இணையாக யாஹூ மெசஞ்சர் மொபைல் பிளாட்பாரத்தில் செயல்பட முடியவில்லை என்பது ஒரு பெருங்குறையாக இருந்தாலும், டெக்ஸ்டாப் கம்ப்யூட்டரில் செயலியாக செயல்படும் முதல் செயலி என்ற பெருமை இதற்கு உண்டு. இதனை அடுத்தே கூகுள் ஹாங்ஸ் அவுட் செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Yahoo Messenger Shutting Down on July 17 Users to be Redirected to Squirrel App : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X