“Yahoo Mail Go” - ஸ்மார்ட் போன்களுக்கான செயலி அறிமுகம் !

தொடக்க நிலை ஸ்மார்ட் போன்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஆன்ட்ராய்டு ஓரியோ செயலியின் மூலமாக யாகூ கோ பயன்பாட்டுச் செயலி இயக்கப்படுகிறது.

|

விலை குறைவான மற்றும் தொடக்க நிலை ஸ்மார்ட் மொபைல் போன்களில் யாகூ மெயில் சேவையை மேம்படுத்தும் நோக்குடன் இந்நிறுவனம் இரண்டு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. யாகூ நிறுவனம் தன்னுடைய துணை அமைப்பான வெர்ஜியன் கம்யூனிகேசன் ( Verizon Communications) நிறுவனத்தின் மூலம் இந்த இரண்டு அம்சங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒன்று, சீரமைக்கப்பட்ட மொபைல் இணைய இடைமுகம் (Web interface), மற்றொன்று, புதிய யாகூ மெயில் கோ பயன்பாட்டுச் செயலி (Yahoo Mail Go app) ஆகியவை ஆகும்.

“Yahoo Mail Go”  - ஸ்மார்ட் போன்களுக்கான செயலி அறிமுகம் !

தொடக்க நிலை ஸ்மார்ட் போன்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஆன்ட்ராய்டு ஓரியோ செயலியின் மூலமாக யாகூ கோ பயன்பாட்டுச் செயலி இயக்கப்படுகிறது. மொபைல் வழியான இணையச் சேவைக்கான யாகூ நிறுவனத்தின் இந்தப் புதிய செயலி பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ற வடிவமைப்பு, எல்லையற்ற நகர்த்தல்கள் (infinite scrolling) மற்றும் வேகமான செயல்பாடு ஆகிய அம்சங்களை இச்செயலி கொண்டுள்ளது. இது போன்ற மற்ற செயலிகளுடன் ஒப்பிடுகையில், யாகூ நிறுவனத்தின் இந்தப் புதிய செயலியை நினைவகத்தில் (RAM) சேமித்து வைக்கக் குறைவான இடம் இருந்தால் போதுமானது.

புதிய மேம்படுத்தப்பட்ட யாகூ மெயில் மொபைல் இணைய இடைமுகம் (Web interface ) பல சுருக்கச் செயல்பாட்டு (shortcuts) வசதிகளைக் கொண்டுள்ளது. வலது புறம் தேய்த்தால் மின்னஞ்சலைப் படிக்க முடியும். இடது புறம் தேய்த்தால் மின்னஞ்சலை நீக்கலாம். மின்னஞ்சல்களை வகைப்படுத்தி வைக்க ஒரு கோப்பக (Folder) வசதியையும் இந்தப் புதிய செயலி கொண்டுள்ளது. மெல்லிய மற்றும் அடர்த்தி மிகுந்த வண்ணங்களில் பின்னணி, புதிய மின்னஞ்சல்களை உருவாக்கும்போது தானாக வழிகாட்டல் (auto-suggest), இடையீடு இல்லாத நகர்த்தல் வசதி ஆகிய சிறப்புக்களை இப்புதிய செயலி கொண்டுள்ளது. மின்னஞ்சல்களை அழித்தல், பிறருக்கு பரிந்துரைத்து அனுப்புதல், மின்னஞ்சல்களுக்கு பதில் அளித்தல் ஆகிய செயல்பாடுகளை மின்னஞ்சலில் உள்ள இயக்கக் கருவிப் பகுதியில் (tool bar) உள்ள கட்டளைகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் எளிதாகச் செய்யலாம்.

“Yahoo Mail Go”  - ஸ்மார்ட் போன்களுக்கான செயலி அறிமுகம் !

விலை குறைவான மற்றும் தொடக்க நிலை ஸ்மார்ட் மொபைல் போன்களின் செயல்பாட்டை மேம்படுத்தும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள இந்த யாகூ மெயில் கோ (Yahoo Mail Go) செயலி ஆன்ட்ராய்டு ஓரியோ (Go பதிப்பு)வின் மூலமாக இயக்குவதற்கு ஏற்ற செயலியாக உள்ளது. ஒரு ஜி்.பி. மற்றும் அதற்கும் குறைவான நினைவகத் திறன் கொண்ட (RAM) மொபைல் போன்களிலும் இது சிறப்பாகச் செயல்படும். கூகுளின் இந்தப் புதிய செயலி மொபைல் போனில் உள்ள நினைவகத்தில் 50 எம்.பி. அளவு இடத்தை மட்டுமே எடுத்துக் கொள்ளும். இதனை மெபைல் போனில் பதிவிறக்கம் செய்து நிறுவுவதற்கு (Install) 10 எம்.பி. இடவசதி போதுமானது. கூகுள் பிளே ஸ்டோரில் இந்தச் செயலியின் கோப்பு அளவு 12 எம்.பி. எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆன்ட்ராய்டு மொபைலில் பதிவிறக்கம் செய்யும் பொழுது இதன் அளவு 9.74 எம்.பி.யாக இருக்கும்.

மொபைல் போனின் பயன்பாட்டுக்காக முதலில் வெளியிடப்பட்ட யாகூ மெயில் ஆன்ட்ராய்டு (Yahoo Mail Android app) செயலியைப் போலவே யாகூ மெயில் கோ (Yahoo Mail Go) செயலியும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. கோப்பகங்களுடன் (Folder) கூடிய பக்கவாட்டுப் பகுதி, தேய்த்தல் மூலமாக விரைவுச் செயல்பாட்டு வசதியைப் பயன்படுத்தல், முடிவில்லா நகர்த்தல் வசதி போன்ற வசதிகளை இந்தச் செயலி கொண்டுள்ளது.

“Yahoo Mail Go”  - ஸ்மார்ட் போன்களுக்கான செயலி அறிமுகம் !

“2025 ஆம் ஆண்டுக்குள், உலக அளவில் மொபைல் வழியாக இணைய வசதியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தற்போது உள்ள அளவில் 50 சதவிகிதம் அளவிற்குக் கூடுவதற்கு வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது. எனவே, பெருகி வரும் தேவைக்கு ஏற்பப் புதிய மொபைல் செயலிகளைஅறிமுகப்படுத்துவது அவசியம். அனைத்து வகையான ஸ்மார்ட் போன்களுக்கு ஏற்ற வகையிலும், அனைத்து இடங்களுக்கும் தகுந்த வகையிலும், மொபைல் போனின் சேமிப்புத்த திறன் மற்றும் இணையதள செயல்பாட்டு வேகம் ஆகியவை எத்தகைய தன்மை உடையதாக இருந்தாலும் அவை அனைத்தும் யாகூ மெயில் வழங்கும் தரமான சேவையைத் தடையின்றி பெறும் வகையிலும் எங்களுடைய தொழில்நுட்ப மாற்றங்கள் அமைந்திருக்கும்” எனக் கூறுகிறார், யாகூ நிறுவனத்தின் உற்பத்தி மேலாண்மைப் பிரிவின் மூத்த இயக்குநர் ஜோசுவா ஜேக்கப்சன்.

Best Mobiles in India

English summary
Yahoo Mail Go App for Entry Level Smartphones Launched : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X