MIUI 11 அப்டேட் கிடைக்கும் ஸ்மார்ட்போன் பட்டியல்! உங்க போன் இதில் இருக்கானு பாருங்க!

|

சியோமி நிறுவனம், நேற்று தனது MIUI 11 இயங்குதளத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய MIUI 11 ஃபெர்ம்வேர் அப்டேட் கிடைக்கும் அனைத்து சியோமி ஸ்மார்ட்போன்களின் முழு பட்டியல் மற்றும் அவை எப்போது கிடைக்கும் என்ற அடிப்படையிலான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உங்கள் ஸ்மார்ட்போன் உள்ளதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

 MIUI 11 அப்டேட்

MIUI 11 அப்டேட்

இந்த புதிய MIUI 11 அப்டேட், தற்பொழுது நான்கு கட்டங்களாக வெளியிடப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. சியோமி நிறுவனத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் இந்த புதிய MIUI 11 அப்டேட்டை சியோமி நிறுவனம் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

நான்கு பேஸ்களாக அப்டேட்

நான்கு பேஸ்களாக அப்டேட்

புதிய MIUI 11 அப்டேட் கிடைக்கப் போகும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் மற்றும் அவை கிடைக்கும் தேதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த அப்டேட்கள் அனைத்தும் நான்கு பேஸ்களாக அக்டோபர் முதல் துவங்கி டிசம்பர் வரை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரியான நேரம் பார்த்து டபுள் டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் வழங்கிய வோடாபோன்.! ஜியோ ஓரம்போ.

பேஸ் 1 கீழ், புதிய MIUI 11 கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்

பேஸ் 1 கீழ், புதிய MIUI 11 கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்

  • சியோமி ரெட்மி 7
  • சியோமி ரெட்மி Y3
  • சியோமி ரெட்மி நோட் 7
  • சியோமி ரெட்மி நோட் 7s
  • சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ
  • சியோமி ரெட்மி K20
  • போக்கோ F1

இந்த அப்டேட் அக்டோபர் 22 மற்றும் 31 தேதிகளுக்கு இடையில் வழங்கப்படும்.

பேஸ் 2 கீழ், புதிய MIUI 11 கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்

பேஸ் 2 கீழ், புதிய MIUI 11 கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்

  • சியோமி ரெட்மி K20 ப்ரோ
  • சியோமி ரெட்மி 4
  • சியோமி ரெட்மி 5/ 5A
  • சியோமி ரெட்மி 6/ 6A/ 6 ப்ரோ
  • சியோமி ரெட்மி நோட் 4
  • சியோமி ரெட்மி நோட் 5 / 5 ப்ரோ
  • சியோமி ரெட்மி Y1/ Y1 லைட்
  • சியோமி மி மிக்ஸ் 2
  • சியோமி மி மேக்ஸ் 2

இந்த அப்டேட் நவம்பர் 4 முதல் 12 தேதிகளுக்கு இடையில் வெளியிடப்படும்.

வியூ 100-இன்ச் சூப்பர் டிவி இந்தியாவில் அறிமுகம்: பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை கேட்க வேண்டாம்.

பேஸ் 3 கீழ், புதிய MIUI 11 கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்

பேஸ் 3 கீழ், புதிய MIUI 11 கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்

  • சியோமி ரெட்மி 7A
  • சியோமி ரெட்மி 8/ 8A
  • சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ
  • சியோமி ரெட்மி நோட் 8

இந்த அப்டேட் நவம்பர் 13 முதல் 29 தேதிகளுக்கு இடையில் வெளியிடப்படும்.

பேஸ் 4 கீழ், புதிய MIUI 11 கிடைக்கும் ஸ்மார்ட்போன்

பேஸ் 4 கீழ், புதிய MIUI 11 கிடைக்கும் ஸ்மார்ட்போன்

இறுதியாக 4 ஆம் கட்ட அப்டேட், சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று சியோமி தெரிவித்துள்ளது. இந்த புதிய MIUI 11 அப்டேட், டிசம்பர் 18 முதல் 26 ஆம் தேதிக்கு இடையில் எந்த நேரத்திலும் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Xiaomi Phone will Receive the MIUI 11 Update : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more