MIUI 11 அப்டேட் கிடைக்கும் ஸ்மார்ட்போன் பட்டியல்! உங்க போன் இதில் இருக்கானு பாருங்க!
சியோமி நிறுவனம், நேற்று தனது MIUI 11 இயங்குதளத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய MIUI 11 ஃபெர்ம்வேர் அப்டேட் கிடைக்கும் அனைத்து சியோமி ஸ்மார்ட்போன்களின் முழு பட்டியல் மற்றும் அவை எப்போது கிடைக்கும் என்ற அடிப்படையிலான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உங்கள் ஸ்மார்ட்போன் உள்ளதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

MIUI 11 அப்டேட்
இந்த புதிய MIUI 11 அப்டேட், தற்பொழுது நான்கு கட்டங்களாக வெளியிடப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. சியோமி நிறுவனத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் இந்த புதிய MIUI 11 அப்டேட்டை சியோமி நிறுவனம் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

நான்கு பேஸ்களாக அப்டேட்
புதிய MIUI 11 அப்டேட் கிடைக்கப் போகும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் மற்றும் அவை கிடைக்கும் தேதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த அப்டேட்கள் அனைத்தும் நான்கு பேஸ்களாக அக்டோபர் முதல் துவங்கி டிசம்பர் வரை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ் 1 கீழ், புதிய MIUI 11 கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்
- சியோமி ரெட்மி 7
- சியோமி ரெட்மி Y3
- சியோமி ரெட்மி நோட் 7
- சியோமி ரெட்மி நோட் 7s
- சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ
- சியோமி ரெட்மி K20
- போக்கோ F1
- சியோமி ரெட்மி K20 ப்ரோ
- சியோமி ரெட்மி 4
- சியோமி ரெட்மி 5/ 5A
- சியோமி ரெட்மி 6/ 6A/ 6 ப்ரோ
- சியோமி ரெட்மி நோட் 4
- சியோமி ரெட்மி நோட் 5 / 5 ப்ரோ
- சியோமி ரெட்மி Y1/ Y1 லைட்
- சியோமி மி மிக்ஸ் 2
- சியோமி மி மேக்ஸ் 2
- சியோமி ரெட்மி 7A
- சியோமி ரெட்மி 8/ 8A
- சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ
- சியோமி ரெட்மி நோட் 8
இந்த அப்டேட் அக்டோபர் 22 மற்றும் 31 தேதிகளுக்கு இடையில் வழங்கப்படும்.

பேஸ் 2 கீழ், புதிய MIUI 11 கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்
இந்த அப்டேட் நவம்பர் 4 முதல் 12 தேதிகளுக்கு இடையில் வெளியிடப்படும்.

பேஸ் 3 கீழ், புதிய MIUI 11 கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்
இந்த அப்டேட் நவம்பர் 13 முதல் 29 தேதிகளுக்கு இடையில் வெளியிடப்படும்.

பேஸ் 4 கீழ், புதிய MIUI 11 கிடைக்கும் ஸ்மார்ட்போன்
இறுதியாக 4 ஆம் கட்ட அப்டேட், சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று சியோமி தெரிவித்துள்ளது. இந்த புதிய MIUI 11 அப்டேட், டிசம்பர் 18 முதல் 26 ஆம் தேதிக்கு இடையில் எந்த நேரத்திலும் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications