சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்தான் 'வாட்ஸ்அப்'.. கடுப்பான பயனர்கள் கொடுத்த பதிலடி.. Signal-ஐ மொய்க்கும் உலகம்..

|

சும்மா இருந்த சங்க ஊதி கேடுதான் ஆண்டி என்பது போல, வாட்ஸ்அப் நிறுவனம் சும்மா இல்லாமல் தனது பயனர்களுக்கு புதிய தனியுரிமை கொள்கைகளைக் கட்டாயம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஒரு கெடுவை முன் வைத்தது. இதனால், கடுப்பான பயனர்கள் இப்போது வாட்ஸ்அப் பயன்பாட்டை நிராகரித்து, Signal என்ற புதிய மொபைல் ஆப்ஸை நாடி பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.

புதிய தனியுரிமை கொள்கை வெளியிட்டு எச்சரித்த வாட்ஸ்அப்

புதிய தனியுரிமை கொள்கை வெளியிட்டு எச்சரித்த வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் தனது பயன்பாட்டின் மூலம் புதிய தனியுரிமை கொள்கைகளை வெளியிட்டது. இதன்படி வாட்ஸ்அப் பயனர்கள் தங்களின் சுய விவரங்களை ஃபேஸ்புக் தளத்தில் பதிவிடுமாறு வற்புறுத்தி வருகிறது. இதுமட்டுமில்லாமல், அனைத்து பயனர்களும் இந்த தனியுரிமை கொள்கையைக் கட்டாயம் ஒப்புக் கொள்ள வேண்டும் எனவும், புதிய கொள்கைக்குப் பயனர் ஒப்புதல் வழங்காவிட்டால் அவர்களின் கணக்கு அழிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

வலுக்கட்டாயமாகப் பயனர்களை வற்புறுத்தும் வாட்ஸ்அப்

வலுக்கட்டாயமாகப் பயனர்களை வற்புறுத்தும் வாட்ஸ்அப்

பிப்ரவரி 8ம் தேதிக்கு முன்னர் அனைத்து வாட்ஸ்அப் பயனர்களும் இந்த ஒப்புதலை ஏற்றாக வேண்டும் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. வலுக்கட்டாயமாகப் பயனர்கள் விருப்பப்படாத ஒரு செயலை வாட்ஸ்அப் ஏன் செய்தாக வேண்டும் என்று வற்புறுத்துகிறது என்று பலரும் கேள்வி எழுப்பினர். கடுப்பான சில பயனர்கள் வாட்ஸ்அப் இனி எங்களுக்குத் தேவையில்லை என்று கூறி, வாட்ஸ்அப் பயன்பாட்டைப் புறக்கணித்துள்ளனர்.

வல்லவனுக்கு வல்லவன்: வாட்ஸ்அப்-க்கு எதிராக சிக்னல் சேவை- இதை பயன்படுத்துங்க எலான் மஸ்க்கே சொல்லிட்டாரு!வல்லவனுக்கு வல்லவன்: வாட்ஸ்அப்-க்கு எதிராக சிக்னல் சேவை- இதை பயன்படுத்துங்க எலான் மஸ்க்கே சொல்லிட்டாரு!

கடுப்பான பயனர்கள் கொடுத்த பதிலடி

கடுப்பான பயனர்கள் கொடுத்த பதிலடி

கடுப்பான இன்னும் சில பயனர்கள், நாங்கள் வேறு மெசேஜ்ஜிங் பயன்பாட்டைப் பயன்படுத்திக்கொள்கிறோம், உங்கள் புதிய கொள்கையை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று சமூக வலைத்தளத்தில் வாட்ஸ்அப்-ஐ எதிர்த்துப் பதிவு செய்துள்ளனர். எலான் மஸ்க் போன்ற பல பிரமுகர்களும் தங்களின் கருத்தை வாட்ஸ்அப்பை எதிர்த்துப் பதிவு செய்துள்ளனர். எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல மஸ்க் கொடுத்த ஐடியா அனைவரின் மனதையும் மாற்றியுள்ளது.

எலான் மஸ்க் கொடுத்த ஐடியா

எலான் மஸ்க் கொடுத்த ஐடியா

உலகத்தின் புதிய பணக்காரராக மாறியுள்ள எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில் என்னைப் போல் நீங்களும் Signal ஆப்ஸை பயன்படுத்துங்கள் என்று பதிவிட்டுள்ளார். இதேபோல், இன்னும் சில முக்கிய பிரமுகர்கள் Signal அல்லது Telegram பயன்பாடுகளைப் பயன்படுத்துங்கள் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த இரண்டு நாட்களில் ஏராளமான வாட்ஸ்அப் பயனர்கள் சிக்னல் மற்றும் டெலிக்ராம் ஆப்ஸை பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.

உலகத்தில் யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத கண்டுபிடிப்பு.! மர சாட்டிலைட்டை உருவாக்கும் ஜப்பான்!உலகத்தில் யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத கண்டுபிடிப்பு.! மர சாட்டிலைட்டை உருவாக்கும் ஜப்பான்!

சர்வர் தடுமாறி போகும் அளவிற்கு Signal-ல் புதிய பயனர்கள்

சர்வர் தடுமாறி போகும் அளவிற்கு Signal-ல் புதிய பயனர்கள்

உண்மையைச் சொல்லப் போனால், இரண்டு நாட்களில் உலகத்தில் உள்ள பலரும் சிக்னல் பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். புதிய பயனர்களின் எண்ணிக்கை இப்போது இந்த இரண்டு ஆப்ஸ்களிலும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, புதிய பயனர்களுக்கு அனுப்பப்படும் வெரிஃபிகேஷன் கோடு உருவாக்குவதில் சர்வர் சிஸ்டம்களே தடுமாறிக் கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது என்று கூறப்படுகிறது.

கடைசி தேதி பிப்ரவரி 8: 'இதை' செய்யலான உங்கள் அக்கவுண்ட்க்கு நாங்க பொறுப்பில்லை: வாட்ஸ்அப் அதிரடி.!கடைசி தேதி பிப்ரவரி 8: 'இதை' செய்யலான உங்கள் அக்கவுண்ட்க்கு நாங்க பொறுப்பில்லை: வாட்ஸ்அப் அதிரடி.!

சிக்னல் மற்றும் டெலிகிராம் டிரை செய்து பாருங்கள்

சிக்னல் மற்றும் டெலிகிராம் டிரை செய்து பாருங்கள்

சர்வர் லேக்(lag) ஆகும் அளவிற்கு புதிய பயனர்கள் சிக்னல் மற்றும் டெலிகிராம் பயன்பாடுகளைப் பதிவிறக்கம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகமே ட்ரை செய்துகொண்டிருக்கும் இந்த பயன்பாடுகளை நீங்கள் இன்னும் பதிவிறக்கம் செய்யவில்லை என்றால், ஒருமுறை பதிவிறக்கம் செய்து ட்ரை செய்து பாருங்கள். வாட்ஸ்அப் பயன்பாட்டை விட இதில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறது என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Why Everyone Talking About Signal App after WhatsApp New Policy Update : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X