இதற்காகவே ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் ஓலா தங்களது செயலியின் மெமரியை குறைக்க வேண்டும்.!

சமீபத்தில் கால் டாக்ஸி சேவையை வழங்கும் ஓலா தனது ஓலா லைட் செயலியை வெறும் 1 எம்பி அளவில் வெளியிட்டது.

|

அமேசான், ப்ளிப்கார்ட் மற்றும் ஓலா போன்ற ஆன்லைன் வர்த்தகர்கள் தங்களது மொபைல் செயலிகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. இந்தியாவின் நகர்ப்புறம் மற்றும் சிறு நகரங்களில் தங்களது வியாபாரத்தை அதிகரிக்க இந்நிறுவனங்கள் தங்களது செயலிகளை குறைந்த மெமரி அளவில் சீரற்ற இன்டர்நெட் கொண்ட பகுதிகளிலும் வேலை செய்யும் படி உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

ப்ளிப்கார்ட், அமேசான், ஓலா தங்கள் செயலி மெமரியை குறைக்க வேண்டும்.!

சமீபத்தில் கால் டாக்ஸி சேவையை வழங்கும் ஓலா தனது ஓலா லைட் செயலியை வெறும் 1 எம்பி அளவில் வெளியிட்டது. இந்த செயலி 2ஜி வேகத்திலும் வேலை செய்யும் படி உருவாக்கப்பட்டிருந்தது. புதிய செயலி வெளியானது முதல் ஓலா வியாபாரம் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் அதிகரித்திருக்கிறது.

இந்திய மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் பயன்பாடு, மொபைல் நெட்வொர்க்களின் குறைந்த வேகம் உள்ளிட்டவற்றை வைத்து பார்க்கும் போது, ஆப் டெவலப்பர்கள் லைட் வெர்ஷன் செயலிகளை உருவாக்குவது சிறப்பான திட்டமாக இருக்கும் என ஓபன்சிக்னல் நிறுவன ஆய்வாளர் பீட்டர் போலாண்ட் தெரிவித்தார்.

ப்ளிப்கார்ட், அமேசான், ஓலா தங்கள் செயலி மெமரியை குறைக்க வேண்டும்.!

மேலும் இவ்வாறு செய்யும் போது செயலியை முற்றிலுமாக மாற்றியமைக்க வேண்டிய அவசியம் இருக்காது. செயலியில் பயன்படுத்தப்படும் கிராஃபிக்ஸ் அல்லது வீடியோ தரவுகளை மட்டும் குறைத்தாலே போதுமானது என அவர் மேலும் தெரிவித்தார்.

ஆன்லைன் வர்த்தகரான அமேசான் இந்தியாவின் 65% ஆர்டர்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் தற்சமயம் இரண்டாம் நிலை நகரங்களில் இருந்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக 2 எம்பி அளவில் அந்நிறுவனம் வெளியிட்ட மைக்ரான் செயலி தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் போட்டியாளரான ப்ளிப்கார்ட் தனது லைட் வெர்ஷன் செயலி சீரற்ற இன்டர்நெட் வசதி கொண்ட பகுதிகளில் வசிக்கும் பயனர்களையும் பெற முடிந்ததாக தெரிவித்துள்ளது.

ப்ளிப்கார்ட், அமேசான், ஓலா தங்கள் செயலி மெமரியை குறைக்க வேண்டும்.!

மைக்ரான் இந்திய சந்தைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது என அமேசான் இந்தியா செயதி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். இந்திய மொபைல் போன் பயன்பாடு வேகமாக அதிகரித்த நிலையிலும், பலர் இன்னமும் குறைந்த விலையிலான ஸ்மார்ட்போன்களை தான் பயன்படுத்துகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

ப்ளிப்கார்ட் லைட் செயலி 2ஜி இணைப்பு மற்றும் ஆஃப்லைன் மோடிலும் வேலை செய்யும் என்பதால் நெட்வொர்க் கோளாறு ஏற்படும் பகுதிகளில் தொழில்நுட்ப பிரச்சனைகளை தீர்க்க வழி செய்கிறது என ப்ளிப்கார்ட் நிறுவன துணை தலைவர் அமர் நகாரம் தெரிவித்தார்.

ஓலா செய்தி தொடர்பாளர் இது குறித்து கூறும்போது, ஓலா லைட் செயலி 1 எம்பி அளவில் இருப்பதால் ஓலா வியாபாரம் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் தொடர்ந்து அதிகரித்திருக்கிறது. ஒவ்வொருத்தர் மொபைலிலும் டேட்டா வேகம் குறைவாகவும், மெமரி பிரச்சனைகள் இருப்பதால் லைட் செயலி பயனர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

ப்ளிப்கார்ட், அமேசான், ஓலா தங்கள் செயலி மெமரியை குறைக்க வேண்டும்.!

இந்தியாவில் நெட்வொர்க் வேகம் மிகவும் குறைவாக இருப்பதால் குறைந்த மெமரி கொண்ட செயலிகளை உருவாக்க அதிக தேவை ஏற்பட்டுள்ளது என போலாண்ட் தெரிவித்திருக்கிறார். ஐரோப்பிய அல்லது கிழக்காசிய நெட்வொர்க்களில் சீராக இயங்காத செயலி இந்திய நெட்வொர்க்கில் முற்றிலும் வேலை செய்யாது என அவர் மேலும் தெரிவித்தார்.
Best Mobiles in India

English summary
Why Amazon, Flipkart, Ola and other apps have to 'shed weight' in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X