பதில் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க.. இந்தியாவில் அறிமுகமான முதல் UPI ஆப் எது?
ஐந்து ரூபாயை கூட ஆன்லைன் வழியாக அனுப்பும் அளவிற்கு, இந்தியாவில் டிஜிட்டல் வழியிலான பணம் செலுத்துதல் ஒரு அன்றாட.. வெகுஜன பழக்கமாகிவிட்டது. காய்கறிகள் வாங்குவது முதல் மின்சார கட்டணம் செலுத்துவது வரை, மக்கள் தங்கள் மொபைல்களை கையில் எடுத்து சில நொடிகளில் பணம் செலுத்துகிறார்கள்.
இந்த சுமுகமான அமைப்பு யுபிஐ (UPI) என்கிற யூனிஃபைட் பேமண்ட் இன்டர்பேஸால் ((Unified Payments Interface) சாத்தியமாகிறது. இது பண பரிமாற்றத்தை மிகவும் வேகமாகவும், எளிமையாகவும் ஆக்கியுள்ளது. சரி இதெல்லாம், எல்லோருக்கும் தெரிந்த கதைதானே.. தெரியாத "கதை" எதுவென்றால் - "இந்தியாவில் அறிமுகமான முதல் யுபிஐ ஆப் எது?" என்கிற கேள்விக்கான சுவாரசியமான பதில் தான்!

இந்தியாவில் யுபிஐ சேவை எப்போது தொடங்கியது? யுபிஐ முதன்முதலில், 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி அன்று என்பிசிஐ (NPCI) ஆல் சில வங்கிகளுடன் சோதனை செய்யப்பட்டது (இதை ஒரு முன்னோட்ட வெளியீடு என்று கூறலாம்). பின்னர் 2016-ல், இது பொதுமக்களுக்காக முழுமையாக வெளியிடப்பட்டது.
யுபிஐ சேவைக்கு முன்பு, பணம் அனுப்புவது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை. இந்திய மக்கள் - பேங்க் அக்கவுண்ட் நம்பர், ஐ எப்எஸ்சி கோட் (IFSC Code) மற்றும் கிளை பெயர் (Branch Name) போன்ற பல விவரங்களை உள்ளிட வேண்டியிருந்தது. யுபிஐ எல்லாவற்றையும் வேகமாகவும் எளிதாகவும் ஆக்கியது.
சரி இந்தியாவின் முதல் யுபிஐ ஆப் எது? நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்பதை பொறுத்து, இரண்டு சரியான பதில்கள் இருப்பதால், இதற்கான பதில் சற்று சுவாரஸ்யமானது. அதாவது இந்தியாவில் அறிமுகமான முதல் தனியார் யுபிஐ ஆப்பும் உள்ளது. இந்தியாவில் அறிமுகமான முதல் அரசாங்க யுபிஐ ஆப்பும் உள்ளது.
இந்தியாவில் அறிமுகமான முதல் தனியார் யுபிஐ ஆப் - போன்பே (PhonePe) ஆகும். போன்பே தான் இந்தியாவின் முதல் மூன்றாம் தரப்பு (தனியார்) யுபிஐ ஆப் ஆக கருதப்படுகிறது. இது ஆகஸ்ட் 2016-ல் யெஸ் வங்கியுடன் இணைந்து தொடங்கப்பட்டது. இது பயனர்கள் ஆப்பை பதிவிறக்கம் செய்து, யுபிஐ மூலம் எளிதாக பணம் செலுத்த அனுமதித்தது. அந்த நேரத்தில், இது இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை நோக்கிய ஒரு பெரிய படியாக இருந்தது.
இந்தியாவில் அறிமுகமான முதல் அரசாங்க யுபிஐ ஆப் - பீம் (BHIM) ஆகும். பீம் என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் இன்டர்பேஸ் ஃபார் மணி (Bharat Interface for Money) என்பது தான் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட முதல் யுபிஐ ஆப் ஆகும்
இது 30 டிசம்பர் 2016 அன்று நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பதும், பணமில்லா பொருளாதாரத்தை நோக்கி நகர்வதும் இதன் நோக்கமாக இருந்தது. பீம் ஆப் ஆனது சாமானிய மக்களுக்கு யுபிஐ சேவையை எளிதாக்கியதுடன், நாடு முழுவதும் அதன் பயன்பாட்டை பரப்பவும் உதவியது.
யுபிஐ என்றால் என்ன? யுபிஐ என்பது ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payments Interface) என்பதன் சுருக்கமாகும். இது, மக்கள் தங்கள் மொபைல் போன்களை பயன்படுத்தி, பேங்க் அக்கவுண்ட்களில் இருந்து நேரடியாக பணத்தை அனுப்பவும் பெறவும் அனுமதிக்கும் ஒரு அமைப்பாகும். இது என்பிசிஐ (NPCI) என்கிற இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகத்தால் (National Payments Corporation of India) உருவாக்கப்பட்டது. யுபிஐ மூலம், நீங்கள் நீண்ட பேங்க் அக்கவுண்ட் நம்பர்களையோ அல்லது ஐஎப்எஸ்சி கோட்களையோ நினைவில் வைத்திருக்க தேவையில்லை. உங்களுக்கு ஒரு எளிய யுபிஐ ஐடி (UPI ID) அல்லது க்யூ கோட் (QR Code) இருந்தால் போதும்.


Click it and Unblock the Notifications