ஆண்ட்ராய்டு: வாட்ஸ்ஆப் செயலியில் வருகிறது பிக்சர்-இன்-பிக்சர் மோட்.!
மேலும் பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த வாட்ஸ்ஆப்இ இந்தியாவில் பேமெண்ட் சேவையை அறிமுகப்படுத்த பணியாற்றி வருவதாக கூறியுள்ளது.
தொடர்ந்து வாட்ஸ்ஆப் நிறுவனம் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வந்த வண்ணம் உள்ளது, அதன்படி இந்த ஆண்டு துவகத்தில் ஐபோன் இயங்குதளங்களுக்கு வழங்கப்பட்ட பிக்சர்-இன்-பிக்சர் மோட் ஆண்ட்ராய்டு பீட்டா அப்டேட் வெர்ஷனலி சோதனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் இந்த பிக்சர்-இன்-பிக்சர் மோட் சிறப்பம்சம் என்னவென்றால் யூடியூப் வீடியோக்களை வாட்ஸ்ஆப் செயலியில் இருந்தபடியே பார்த்து ரசிக்க முடியும். பின்பு யூடியூப் வீடியோ திரை அளவை மற்றிக் கொள்ளும் வசதி கூட இந்த செயலியில் உள்ளது.

பிக்சர்-இன்-பிக்சர் மோட்:
பொதுவாக வாட்ஸ்ஆப் செயலியில் ஒருவர் யூடியூப் லிங்க் அனுப்பும் போது, அந்த வீடியோவை வாட்ஸ்ஆப் விட்டு வெளியேறாமல் பார்க்க உதவுகிறது இந்த பிக்சர்-இன்-பிக்சர் மோட்.

வாட்ஸ்ஆப் ஐஒஎஸ்
தற்சமயம் வரை வாட்ஸ்ஆப் ஐஒஎஸ் தளத்தில் பிக்சர்-இன்-பிக்சர் மோட் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற செயலிகளுக்கு வேலை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பேமெண்ட்
மேலும் பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த வாட்ஸ்ஆப்,இந்தியாவில் பேமெண்ட் சேவையை அறிமுகப்படுத்த பணியாற்றி வருவதாக கூறியுள்ளது. தற்போது இந்நிறுவனம் இந்திய பயனர்களுக்கு இச்சேவையை வழங்குவதற்காக இந்திய அதிகாரிகளிடம் இருந்து கீரீன் சிக்னலுக்காக காத்திருக்கிறது. வாட்ஸ்ஆப் நிறுவனம் இந்த புதிய பேமெண்ட் வசதியை கடந்த சில மாதங்களாக பரிசோதனை செய்து வந்த நிலையில், தற்போது பரிசோதனை கட்டம் முடிவடைந்துள்ளதாக தெரிகிறது.

அரசு
இந்த சேவைக்கான ஒப்புதலை பெற வாட்ஸ்ஆப் நிறுவனம் இந்திய அரசின் தேசிய பேமெண்ட் ஆணையத்துடன்(NPCI -National Payment Corporation of India) இணைந்து பணியாற்றி வருகிறது. ஆனால் இந்திய அரசு இந்த பேமெண்ட் சேவையைப் பற்றி சிறிது கணிக்க இயலாமல் இருப்பது போல தெரிகிறது.

மெசேஜிங் செயலி
வதந்திகளால் இந்தியா முழுவதும் நடைபெறும் ஏராளமான குழுப் படுகொலைகள் பற்றி வாட்ஸ்ஆப் நிறுவனம் அதிக கவனம் செலுத்த வேண்டும் அரசு விரும்புகிறது.மேலும் இந்த மெசேஜிங் செயலி, வைரலாகும் மெசேஜ்களின் உண்மைதன்மையை வெளிப்படையாக்கும் வகையில் 'பார்வேர்டேடு'( 'forwarded') என்னும் குறியீட்டை சேர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications