Home
Apps

WhatsApp-ல் Online-ல் இருக்கீங்களா இல்லையானு காட்டும் அம்சத்தில் மாற்றம்.. இனி ஒவ்வொரு Chat-க்கும் மேலே?

வாட்ஸ்ஆப்பில் (WhatsApp) ஒருவர் ஆன்லைனில் இருக்கிறார்களா, இல்லையா என்பதை வெளிப்படுத்தும் ஆன்லைன் அம்சத்தின் (Online Feature) முக்கிய மாற்றத்தை கொண்டு வரும் கூடுதல் அம்சம் ஒன்று, அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அது காண்டாக்ட்ஸ் ஹப் (Contacts Hub) என்று அழைக்கப்படுகிறது.

ஆப்பிள் ஐபோனுக்கான லேட்டஸ்ட் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில், யார் ஆன்லைனில் இருக்கிறார்கள் மற்றும் யார் சமீபத்தில் ஆன்லைனில் இருந்தார்கள் என்பதை ஒரே இடத்தில் பார்க்க உதவும் ஒரு புதிய அம்சம் (காண்டாக்ட்ஸ் ஹப்) காணப்பட்டுள்ளது. ஆக இது கூடிய விரைவில் அனைத்து ஐஓஎஸ் பயனர்களுக்கும், அதை தொடர்ந்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வந்து சேரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

WhatsApp Online காட்டும் அம்சத்தில் மாற்றம்.. இனி?

வாட்ஸ்ஆப்பில் சோதனை செய்யப்படும் புதிய அம்சங்களை கண்டறிந்து அறிக்கை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள WABetaInfo வழியாக கிடைத்த தகவலின்படி, யார் ஆன்லைனில் இருக்கிறார்கள் அல்லது சமீபத்தில் யார் எல்லாம் ஆன்லைனில் இருந்தார்கள் என்பதை காண்பிக்கும் ஒரு புதிய காண்டாக்ட்ஸ் ஹப்பை வாட்ஸ்அப் உருவாக்கி வருகிறது

வாட்ஸ்ஆப்பில் ஏற்கனவே மற்ற காண்டாக்ட்கள் தங்களின் ஆன்லைன் செயல்பாட்டை பார்க்கலாமா வேண்டாமா என்பதை தேர்வு செய்யும் விருப்பம் உள்ளது. அதன்படி, பயனர்கள் தங்களின் ஆன்லைன் ஸ்டேட்டஸை மற்றவர்களுக்கு தெரியும்படி வைத்தால் மட்டுமே, வாட்ஸ்அப் அவர்களை மற்றவர்களின் ஆன்லைன் ஸ்டேட்டஸை பார்க்க அனுமதிக்கிறது.

இருப்பினும், ஆன்லைன் ஸ்டேட்டஸை இயக்கி வைத்திருக்கும் பயனர்களுக்கு, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காண்டாக்ட்கள் ஆன்லைனில் இருக்கிறார்களா என்பதை சரிபார்க்க, ஒவ்வொரு சாட்டையும் தனித்தனியாக திறந்து, சாட்டின் மேற்பகுதியை பார்க்க வேண்டியுள்ளது. அங்கு, அந்த காண்டாக்ட் ஆன்லைனில் இருக்கிறாரா அல்லது கடைசியாக எப்போது ஆன்லைனில் இருந்தார் என்பதை வாட்ஸ்அப் காண்பிக்கும்.

ஆனால் புதிய காண்டாக்டஸ் ஹப் அம்சம் ஆனது இந்த செயல்பாட்டை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பயனர்கள் தங்களின் காண்டாக்ட்களில் யார் தற்போது ஆன்லைனில் இருக்கிறார்கள் என்பதை ஒரே இடத்தில் பார்க்க அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது பயனர்களின் விருப்பமான காண்டாக்ட்களை முதலில் காண்பிக்கும், அதை தொடர்ந்து தற்போது ஆன்லைனில் இருக்கும் காண்டாக்ட்களையும், பின்னர் சமீபத்தில் ஆன்லைனில் இருந்த காண்டாக்ட்களையும் காண்பிக்கும். இந்த அம்சம் தற்போது பீட்டா டெஸ்டர்களுக்கு கூட கிடைக்கவில்லை என்றாலும், அவர்களால் அதை செயல்படுத்த முடிந்தது என்று WABetaInfo தளம் குறிப்பிடுகிறது

இதோடு சேர்த்து வாட்ஸ்அப் ஒரு புதிய ப்ரைவஸி அம்சத்தை சோதித்து வருகிறது. இது, மெசேஜ்கள் அனுப்பப்பட்டதில் இருந்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மட்டும் நீக்கப்படுவதற்கு பதிலாக, அவை படிக்கப்பட்ட பிறகு தானாகவே நீக்கப்பட அனுமதிக்கிறது. முன்னதாக இந்த அம்சம் ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன்களில் காணப்பட்டது, இப்போது சில ஐபோன் பீட்டா டெஸ்ட்டர்களுக்கு வெளியிடப்படுகிறது.

சுவாரசியமாக இந்த அம்சத்தின் கீழ், ஒரு பெறுநர் மெசேஜ்களை திறந்த பிறகு, அவை எவ்வளவு நேரம் பார்வைக்கு தெரியும் (How long messages remain visible) என்பதற்கான டைம் லிமிட்டையும் அனுப்புநரால் செட் செய்ய முடியும். அதே நேரத்தில், படிக்கப்படாத மெசேஜ்கள் 24 மணி நேரத்திற்கு பிறகு தானாகவே நீக்கப்படுவதையும் இந்த அம்சம் உறுதி செய்கிறது.

வாட்ஸ்அப்பில் சோதனை செய்யப்படும் அம்சங்களை பற்றி துல்லியமான அப்டேட்களை வழங்குவதற்கு பெயர்போன WABetaInfo-வின் சமீபத்திய வலைப்பதிவின்படி, ஆப்பிளின் டெஸ்ட்ஃப்ளைட் திட்டத்தின் மூலம் ஐஓஎஸ் வெர்ஷன் 26.19.10.72-க்கான வாட்ஸ்அப் பீட்டாவை பயன்படுத்தும் சில பயனர்களுக்கு இந்த அம்சம் கிடைக்கிறது. பரவலான வெளியீட்டிற்கு முன்பு, ஆப் ஸ்டோர் வெர்ஷனில் உள்ள ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களுக்கும் இந்த விருப்பம் கிடைக்கக்கூடும்.

Best Mobiles in India

English summary
WhatsApp Working on Contacts Hub Feature Allows Users To see who is online and who was active recently
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X