Home
Apps

சோதனையில் உள்ள புதிய வாட்ஸ்அப் அப்டேட்.. என்ன செய்யும் இந்த அப்டேட்.?

WABetaInfo இன் சமீபத்திய அறிக்கையின்படி, அடுத்து வரவிருக்கும் வாட்ஸ்அப் அப்டேட்களில் பயனர்கள் இன்னும் பல புதிய அம்சங்களை பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. WABetaInfo அப்டேட் டிராக்கர், வாட்ஸ்அப்பின் சமீபத்திய பீட்டா APK அப்டேட்டில் வளர்ச்சியில் உள்ள புதிய அம்சங்களின் ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

சோதனையில் உள்ள புதிய வாட்ஸ்அப் அப்டேட்.. என்ன செய்யும் இந்த அப்டேட்.?

இந்த முறை, ஜாயின் மிஸ்டு கால் அம்சம் என்று அழைக்கப்படும் Join Missed Call அம்சத்தை சோதனை சேது வருகிறது. இதன் பெயர் குறிப்பிடுவது போல, இந்த அம்சம் பயனர்களை, அவர்கள் முன்பு தவறவிட்ட குரூப் வீடியோ அல்லது வாய்ஸ் அழைப்பில் மீண்டும் சேர அனுமதிக்கிறது.

சோதனையில் உள்ள புதிய வாட்ஸ்அப் அப்டேட்.. என்ன செய்யும் இந்த அப்டேட்.?

அழைப்பு ஆக்டிவில் தொடர்ந்து இருந்தால் மட்டுமே இந்த அம்சத்தை பயனர்கள் பயன்படுத்த முடியும். அழைப்பு முடிந்துவிட்டால், அழைப்பில் சேருவதற்கான விருப்பம் தோன்றாது.

வளர்ச்சியின் கீழ் உள்ள மற்றொரு அப்டேட் பயோமெட்ரிக் அங்கீகாரம் ஆகும். தற்போது, ​​Android வாட்ஸ்அப்பில், நீங்கள் செக்யூரிட்டி விருப்பத்தை இயக்கியிருந்தால், பயன்பாட்டைத் திறப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கையாகக் கைரேகை லாக்கிங் பாதுகாப்பு உங்களுக்கு பயன்படுத்தக் கிடைக்கிறது. அதேபோல் இப்போது, ​​இனி கைரேகையுடன் வாட்ஸ்அப்பைத் திறக்க முக அங்கீகாரம் போன்ற பிற பாதுகாப்பு மோடுகளையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

சோதனையில் உள்ள புதிய வாட்ஸ்அப் அப்டேட்.. என்ன செய்யும் இந்த அப்டேட்.?

இந்த இரண்டு அம்சங்களும் தற்போது எக்ஸ்பயிரிங் மீடியா பியூச்சர் (Expiring Media feature), பிசினஸ் அனுபவத்திற்கான ஷார்ட்கட், புதிய கால் பட்டன் மற்றும் பல புதிய அம்சங்களுடன் சோதனையில் உள்ளது.

சோதனையில் உள்ள புதிய வாட்ஸ்அப் அப்டேட்.. என்ன செய்யும் இந்த அப்டேட்.?

இவை முழுமையாக வளர்ச்சி அடைந்த பின்பு புதிய வாட்ஸ்அப் அப்டேட் வெர்ஷனில் வெளியிடப்படும் என்று WABetaInfo தெரிவித்துள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து புதிய அம்சங்களும் தற்போது வளர்ச்சியில் உள்ளன, இவை எப்போது அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.

Best Mobiles in India

English summary
WhatsApp working on a 'Join Missed Call' feature along with Biometric authentication improvements : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X