வாட்ஸ்ஆப்பில் போட்டோக்களை அனுப்புவதில் புதிய அம்சம்; இது நல்லா இருக்கே.!

வாட்ஸ்ஆப்பில் வெறுமனே 'சாட்' செய்ய மிக வேகமான இணைய இணைப்பு தேவையில்லை, குறைந்தபட்ச இன்டர்நெட் வேகமே போதுமானது என்பதை நாம் அறிவோம்.

|

வாட்ஸ்ஆப்பில் வெறுமனே 'சாட்' செய்ய மிக வேகமான இணைய இணைப்பு தேவையில்லை, குறைந்தபட்ச இன்டர்நெட் வேகமே போதுமானது என்பதை நாம் அறிவோம்.

வாட்ஸ்ஆப்: போட்டோக்களை அனுப்புவதில் புதிய அம்சம்; இது நல்லா இருக்கே.!

ஆனால், அதே வாட்ஸ்ஆப்பின் வழியாக மீடியா பைல்களை பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றால், நிச்சயமாக ஒரு நல்ல வேகத்திலான இன்டர்நெட் மிகவும் அவசியம் என்பதையும் அறிவோம். இல்லையெனில் அப்லோடிங் என்பது மணிக்கணக்கில் நடக்கும். குறிப்பாக புகைப்படங்களை ஷேர் செய்கிறோம் என்றால் சத்திய சோதனையாக இருக்கும்.

என்ன அம்சம்.?

என்ன அம்சம்.?

இப்படியாக வாட்ஸ்ஆப்பில், பயனர்கள் சந்திக்கும் அப்லோடிங் வேதனையை புரிந்து கொண்ட பேஸ்புக் நிறுவனம் (வாட்ஸ்ஆப்பின் தாய் நிறுவனம்) ஒரு புத்தம் புதிய அப்டேட்டை களமிறக்கி உள்ளது. 'ப்ரெடிக்டட் அப்லோட்ஸ்' என்று அழைக்கப்படும் இந்த புதிய அப்டேட் ஆனது மிக விரைவில் உருட்டப்படும் என்று கருதப்படுகிறது.

என்ன பயன்.?

என்ன பயன்.?

இந்த அம்சத்தின் அடிப்படை வேலையே வாட்ஸ்ஆப்பின் அப்லோடிங் வேகத்தை அதிகரிப்பது தான். இந்த 'ப்ரெடிக்டட் அப்லோட்ஸ்' எப்படி உள்ளூர வேலை செய்யம் என்பதை புரிந்து கொள்வது மிகவும் சிக்கலானது என்றாலும் கூட, மேலோட்டமாக இது எப்படி வேலை செய்யும் என்பதை மிகவும் எளிமையான முறையில் புரிந்துகொள்ள முடியும்.

எப்படி வேலை செய்யும்.?

எப்படி வேலை செய்யும்.?

இன்னும் எளிமையாக கூற வேண்டும் எனில், ஒருபக்கம் வாட்ஸ்ஆப் வழியாக அனுப்ப வேண்டிய பைல்களை உங்கள் போன் மெமரியில் இருந்து தேர்ந்தெடுக்கும்போதே, மறுப்பக்கம் பின்னணியில் குறிப்பிட்ட படங்கள் அப்லோட் ஆகத் தொடங்கும். இந்த இடத்தில புகைப்படத்தில் எந்தவொரு எடிட்டிங் மாற்றமும் இன்றி, பயனர் அதை அப்படியே அனுப்புவார் என்று வாட்ஸ்ஆப் முடிவெடுத்துக்கொள்ளும். அதனை தொடர்ந்து சர்வரில் புகைப்படத்தை பதிவேற்றத் தொடங்கும்.

ஒருவேளை எடிட் செய்தால்.? என்னவாகும்.?

ஒருவேளை எடிட் செய்தால்.? என்னவாகும்.?

குறிப்பிட்ட படத்தில் மாற்றங்களை நிகழ்த்தும் பட்சத்தில், அதாவது வாட்ஸ்ஆப் வழியிலான எடிட்டிங் டூல்ஸ்களை பயன்படுத்தும் பட்சத்தில், தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் பதிவேற்றப்பட்ட புகைப்படம் தானாக சர்வரில் இருந்து நீக்கப்படும். அதாவது எடிட் செய்யப்படாத படங்களை மட்டுமே இது வேகமாக பதிவேற்றப்படுவதை உறுதி செய்யும் என்று அர்த்தம்.

சென்ட் செய்யும் முன்னரே போய் விடுமா.?

சென்ட் செய்யும் முன்னரே போய் விடுமா.?

கிடையாது. பயனர்கள் பெறுநருக்கு அனுப்பும் படங்களைத் தேர்ந்தெடுக்கும்போதே, ​வாட்ஸ்ஆப் உடனடியாக அதை பெறுநருக்கு அனுப்பி விடாது. அதற்கு பதிலாக, படங்கள் முதலில் வாட்ஸ்ஆப் சேவையகத்திற்கு அனுப்பப்படும், பின்னர் அனுப்புநர் சென்ட் பட்டனை அழுத்தினால் மட்டுமே அது பெறுநருக்கு அனுப்பி வைக்கப்படும்.

யாருக்கு எப்போது கிடைக்கும்.?

யாருக்கு எப்போது கிடைக்கும்.?

வாட்ஸ்ஆப்பீட்டாஇன்ஃபோவின் (WABetaInfo) படி, இந்த 'ப்ரெடிக்டட் அப்லோட்ஸ்' அம்சம் ஆனது, ஐஓஎஸ் (v2.18.61) மற்றும் ஆண்ட்ராய்டு (v2.18.156) பதிப்பில் காணப்பட்டுள்ளது. இருந்தாலும் கூட பொதுத்தளத்தில் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்கள் இந்த மேம்பாட்டைப் பெற சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கலாம் என்றும் வாட்ஸ்ஆப்பீட்டாஇன்ஃபோ அறிவித்துள்ளது. ஆகமொத்தம் வாட்ஸ்ஆப் ஒரு சிறப்பான சர்வர்-மேம்படுத்தலை செய்ய போகிறது என்பது மட்டும் உறுதி.

மென்ஷனை (@) மிக எளிதாக சரி பார்க்க அனுமதிக்கிறது.!

மென்ஷனை (@) மிக எளிதாக சரி பார்க்க அனுமதிக்கிறது.!

இதற்கு முன்னதாக ஒரு க்ரூப் மெம்பருக்கு ஒரு மேலோட்டமான மற்றும் கூர்மையான பார்வையை வழங்குமொறு அம்சம் பற்றிய தகவல் வெளியானது.அது க்ரூப்பில் ஒருவரின் பெயரின் கீழ் நிகழ்ந்துள்ள மென்ஷனை (@) மிக எளிதாக சரி பார்க்க அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது. இது எப்படி வேலை செய்யும் என்பது பற்றிய விளக்கம் இல்லை, குறிப்பிட்ட மென்ஷன்களை ஸ்க்ரோலிங் செய்யும் பட்டன் எதாவது இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"தேடல்" விருப்பம் வழியாக.!

அல்லது சாட் விண்டோவில் மிதக்கும் "@" விருப்பத்தை அணுகுவதின் வழியாக, ஒருவர் மிக எளிமையாக க்ரூப் மெசேஜ்களில் உள்ள மென்ஷன்களை அணுக முடியும். இதனுடன் சேர்த்து, க்ரூப்பிற்குள் கிடைக்கும் "தேடல்" (சேர்ச்) விருப்பம் வழியாக, எந்தவொரு பயனரின் ப்ரொபைல் விவரத்தையும் அணுக முடியும் அம்சம் ஒன்று அறிமுகமாகவுள்ளது. வாட்ஸ்ஆப் க்ரூப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த பொதுவான அப்டேட்ஸ்களை தவிர, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு அம்சமும் இணைக்கப்பட்டுள்ளது.

ஸ்டாப் ரீஅடிக்ஷன் திறன்.!

ஸ்டாப் ரீஅடிக்ஷன் திறன்.!

அதாவது, க்ரூப்பை விட்டு வெளியேற்றப்பட்ட நபர்களை மீதும் சேர்ப்பது சார்ந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. மிக நீண்ட காலமாக காணாமல் போன ஒரு அம்சமாக இருந்த இந்த ஸ்டாப் ரீஅடிக்ஷன் திறன் ஆனது ஸ்பேமர்களுக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும். இது எப்படி செயல்படும் என்பது பற்றிய வார்த்தைகள் இல்லை. அதே சமயம், இது எவ்வளவு விரைவாக நமக்கு கிடைக்கும் என்பது சார்ந்த தகவலும் இல்லை.

நேர்மையான பயனர்களை ஈர்க்கும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.!

நேர்மையான பயனர்களை ஈர்க்கும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.!

சமீப காலமாக வாட்ஸ்ஆப் சில கடுமையான அம்சங்களை கொண்டு வருவது, பார்ப்பதற்கும் சரி, பயன்படுத்துவதற்கும் சரி மிகவும் நன்றாக இருக்கிறது. இது வாட்ஸ்ஆப் தளத்தின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் என்பதோடு சேர்த்து நேர்மையான பயனர்களை ஈர்க்கும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம். பேஸ்புக் நடத்திய சமீபத்திய டெவெலப்பரின் மாநாட்டில், க்ரூப் வீடியோ சாட் அம்சம் அறிவிக்கப்பட்டதும். அது பொது தளத்தில் மிக விரைவாக உருட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எட்டு நிமிடங்கள் மற்றும் 16 விநாடிகள் என்று குறைக்கப்பட்டுள்ளது.!

எட்டு நிமிடங்கள் மற்றும் 16 விநாடிகள் என்று குறைக்கப்பட்டுள்ளது.!

முன்னதாக, 'டெலிட் பார் எவ்ரிஒன்' அம்சம் மீதான குறிப்பிட்ட மாற்றம் அறிவிக்கப்பட்டது. இது மெசேஜை பெறுநர் காண்பதற்கு முன்னரே டெலிட் செய்யும் திறனை அனுப்புநருக்கு வழங்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆரம்பத்தில் சில நிமிடங்கள் மட்டுமே என்கிற காலக்கெடுவை கொண்டு அறிமுகமான டெலிட் அம்சம், பின்னர் 1 நாள் என்கிற மிக நீண்ட காலக்கெடுவை பெற்றது. இப்போது அது, ​​ஒரு மணிநேரம், எட்டு நிமிடங்கள் மற்றும் 16 விநாடிகள் என்று குறைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலுடன் சேர்த்து, வாட்ஸ்ஆப்பில் சாட் பில்டர்ஸ் எனும் அம்சம் பற்றிய விவரமும் வெளியாகியுள்ளது.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
சாட் பில்டர்ஸ் அம்சம்.!

சாட் பில்டர்ஸ் அம்சம்.!

இந்த தகவலானது வரப்போகும் அம்சங்களை பரிசோதிக்கும் தளமான, வாட்ஸ்ஆப்பீட்டா இன்ஃபோ வழியாக கிடைக்கப் பெற்றுள்ளது. வெளியான தகவலின் படி, கூறப்படும் புதிய சாட் பில்டர்ஸ் அம்சம் ஆனது, ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான பிஸ்னஸ் வாட்ஸ்ஆப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. பிஸ்னஸ் வாட்ஸ்ஆப்பில் இணைக்கப்பெற்றுள்ள சாட் பில்டர்ஸ் அம்சமானது, நீண்ட நெடிய சாட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட மெசேஜை மிக விரைவாக தேடி கண்டுபிடிக்க அனுமதிக்கும். அதாவது பில்டர்ஸ் ஐகானை டாப் செய்ய, மூன்று தேடல் விருப்பங்கள் கிடைக்கும், அன்ரீட் சாட்ஸ், க்ரூப்ஸ் மற்றும் பிராட்கேஸ்ட் லிஸ்டஸ். அதன் வழியாக தேவையான மெசேஜை அணுகலாம்.

வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்ஸ்.!

வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்ஸ்.!

இது தவிர 2.18.84 வெர்ஷனில், வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்ஸ்களை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இதற்கு முன்னதாக, ரெஸ்ட்ரிக் க்ரூப் அம்சம் உருட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த அம்சமானது, ஸ்மார்ட்போனில் வேறு வேலைகளை பார்க்க முடியாத அளவிற்கு, (குறிப்பாக வீடியோ ஸ்ட்ரீமிங் செய்யும் போது) கடுப்பை கிளப்பும் க்ரூப் நோட்டிபிகேஷன்களுக்கு, ஒரு முடிவை கட்டியுள்ளது. எவரையும் எரிச்சலூட்டக்கூடியதாக இருக்கும், வாட்சஆப் க்ரூப் நோட்டிபிகேஷன்களை கட்டுப்படுத்த உருட்டப்பட்டுள்ள அம்சம் தான் - ரெஸ்ட்ரிக்ட் க்ரூப் (Restrict Group) அம்சம். கடந்த சில வாரங்களாகேவ பேசப்பட்ட, இந்த அம்சமானது அட்மின்களுக்கே உரிய கூடுதல் கட்டுப்பாட்டை வழங்குகிறது. அப்படி என்ன கட்டுப்பாடுகள்.?

மெசேஜை படிக்க முடியும், ஆனால், ரிப்ளை செய்ய முடியாது.!

மெசேஜை படிக்க முடியும், ஆனால், ரிப்ளை செய்ய முடியாது.!

வாட்ஸ்ஆப்பீட்டாஇன்ஃபோ (WABetaInfo) தளம் கொடுத்துள்ள விளக்கத்தின் படி, கூறப்படும், ரெஸ்ட்ரிக்ட் க்ரூப் டூல் ஆனது, க்ரூப் அட்மின்களை மட்டுமே மெசேஜ் செய்ய அனுமதிக்கும். அதாவது, க்ரூப்பின் இதர மெம்பர்களால், அட்மினின் மெசேஜை படிக்க முடியும், ஆனால், ரிப்ளை செய்ய முடியாது. யாரேனும், க்ரூப்பில் மெசேஜ் செய்ய விரும்பினால், அவர்கள் அட்மினை தொடர்பு கொள்ள வேண்டும்.

வாட்ஸ்ஆப் 2.18.210 வெர்ஷனில் காணப்பபட்டுள்ளன

வாட்ஸ்ஆப் 2.18.210 வெர்ஷனில் காணப்பபட்டுள்ளன

இந்த புதிய ரெஸ்ட்ரிக்ட் க்ரூப் அம்சமானது, எப்போது எந்தெந்த தளங்களில் உருட்டப்படும் என்பது பற்றிய வார்த்தைபால் இல்லை. ஆனால், நிச்சயமாக நீண்ட காலம் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. வரப்போகும் இந்த அப்டேட் உடன், வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்ஸ் உட்பட பல பிரபலமான அம்சங்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அவைகள், கோவூகுள் பிளே பீட்டா பதிப்பான, வாட்ஸ்ஆப் 2.18.210 வெர்ஷனில் காணப்பபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
WhatsApp Will Now Facilitate Faster Image Uploads Thanks to This New Update. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X