வாட்ஸ்ஆப் தகவல்கள் தானாக அழியும் முன் இதை செய்யுங்கள் மக்களே.!

இதற்குமுன் கூகுள் ட்ரைவில் நீங்கள் பேக்அப் செய்திருந்தால், அதுவும் ஓராண்டு முன்னதாக செய்திருந்தால் நவம்பர் 12-க்குள்மீண்டும் பேக்அப் செய்யவேண்டும்

|

உலக நாடுகள் அதிகம் உபயோகம் செய்வது இந்த வாட்ஸ்ஆப் செயலி தான், தற்சமயம் இந்நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் வாட்ஸ்ஆப் தகவல்களால் உங்கள் போனில் மொத்த மெமரியும் நிரம்பி விடுகிறதா, இனி அந்த கவலையை கூகுள் பார்த்துக்கொள்ளும்.

வாட்ஸ்ஆப் தகவல்கள் தானாக அழியும் முன் இதை செய்யுங்கள் மக்களே.!

இப்போது கூகுள் நிறுவனத்துடன் வாட்ஸ்ஆப் செய்துகொண்டுள்ள ஒப்பந்த அடிப்படையில் வாட்ஆப் தகவல்களை எவ்வளவு , வேண்டுமானாலும் கூகுள் ட்ரைவ் மூலம் பேக்அப் செய்து கொள்ள முடியும், இதற்காக எந்த கட்டுப்பாடும் இருக்காது.

குறிப்பாக போனின் மெமரியும் மிச்சமாகும், பின்ப கூகுள் ட்ரைவில் மற்ற தகவல்களை சேமிக்க இடப் பிரச்சனையும் ஏற்படாது. இந்த வசதி பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

15ஜிபி அளவு

15ஜிபி அளவு

இப்போது வெளிவந்து தகவலின் அடிப்படையில் கூகுள் ட்ரைவில் 15ஜிபி அளவு வரையில்தான் தகவல்களை இலவசமாக சேமிக்க முடியும். அதற்கு மேல் கூகுள் ட்ரைவில் இடம்பெற கட்டணம் செலுத்த வேண்டும்.

பழைய தகவல்களை எளிமையாக மீட்டெடுக்கலாம்

பழைய தகவல்களை எளிமையாக மீட்டெடுக்கலாம்

மேலும் கூகுள் நிறுவனம் வாட்ஸ்ஆப் தகவல்களை மட்டும் எவ்வளவு வேண்டுமானாலும் சேமித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது, இதனால் போன் தொலைந்தாலோ, புதிய போன் வாங்கினாலோ அந்த போனிலும் பேக்அப் மூலம்
பழைய தகவல்களை எளிமையாக மீட்டெடுக்கலாம்.

கூகுள் ட்ரைவை பயன்படுத்துவதில் ஒரு நிபந்தனை உள்ளது:

கூகுள் ட்ரைவை பயன்படுத்துவதில் ஒரு நிபந்தனை உள்ளது:

இதற்குமுன் கூகுள் ட்ரைவில் நீங்கள் பேக்அப் செய்திருந்தால், அதுவும் ஓராண்டு முன்னதாக செய்திருந்தால் நவம்பர் 12-க்குள்
மீண்டும் பேக்அப் செய்யவேண்டும். இல்லையென்றால், பழைய தகவல்கள் தானாக நீக்கப்பட்டுவிடும்.

நவம்பர் 12

நவம்பர் 12

குறிப்பாக நவம்பர் 12-க்கு பின்னர், ஓராண்டுக்கு மேலாக கூகுள் ட்ரைவில் பேக்அப் எடுக்காமல் இருந்தாலும் பழைய தகவல்கள் முற்றிலும் அழிந்துவிடும். அடிக்கடி பேக் அப் எடுத்து சேமித்து கொள்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படங்கள், வீடியோக்கள்

படங்கள், வீடியோக்கள்

பேக்அப் கூகுள் ட்ரைவில் எடுப்பதன் பயன் என்னவென்றால், போன் மெமரியில் சேமிக்கப்படுவது தவர்க்கப்படுமே தவிர, போனில் சேமிக்கப்பட்ட வாட்ஸ் அப் படங்கள், வீடியோக்கள் நீக்கப்படாது. அவற்றை நாம்தான் நீக்க வேண்டும்.

சாட்பேக்அப்

சாட்பேக்அப்

புதிய போனில் வாட்ஸ்ஆப் செயலியை நிறுவும் போது பழைய போனில் இருந்த பேக்அப் செய்யப்பட்ட தகவல்களை இழக்காமல்
பெறலாம். குறிப்பாக வாட்ஸ் அப் செயலியை திறந்து, வலது மேல் பக்கம் உள்ள மூன்று புள்ளிகளை தேர்வுசெய்யு,செட்டிங்ஸ்-சாட்- சாட்பேக்அப் என்பதை தேர்வுசெய்தால் போதும்.

Best Mobiles in India

English summary
WhatsApp will soon delete your chat data, photos and videos: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X