டெலிகிராம் செயலிக்குப் போட்டியாக WhatsApp கொண்டுவரும் புதிய அம்சம்.! அப்படியென்ன அம்சம்?

|

டெலிகிராம் செயலிக்கு போட்டியாக வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

மேலும் வாட்ஸ்அப் நிறுவனம் பாதுகாப்பு விஷயத்தில் அதிக கவனம் செலுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம் அதாவது வாட்ஸ்அப் குழுவிற்குள் POLL எனும் வாக்கெடுப்பை அனுமதிக்கும் புதிய அம்சத்தை வெளியிட உள்ளது வாட்ஸ்அப் நிறுவனம். இப்போதுஇது சார்ந்த தகவலை விரிவாகப் பார்ப்போம்.

உங்கள் போனை எப்படிப் பிடித்துப் பயன்படுத்துகிறீர்கள்? உங்களைப் பற்றிய உண்மை இது தான்.. தெரிஞ்சுக்கோங்க..உங்கள் போனை எப்படிப் பிடித்துப் பயன்படுத்துகிறீர்கள்? உங்களைப் பற்றிய உண்மை இது தான்.. தெரிஞ்சுக்கோங்க..

வாக்கெடுப்பு நடத்தும் அம்சம்

வாக்கெடுப்பு நடத்தும் அம்சம்

அதாவது வாட்ஸ்அப் பயனர்கள் தங்களுக்குப் பொருத்தமான தலைப்புகளில் குழுவிற்குள் கருத்துக்கணிப்புகளை உருவாக்க அனுமதிக்கும் வகையில் புதிய அப்டேட் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் டெலிகிராம் செயலியில் ஏற்கனவே இந்த POLL அம்சம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் அறிமுகம் செய்த மூன்று ஏர்டெல் அறிமுகம் செய்த மூன்று "ஆல் இன் ஒன்" திட்டம்- இணையம், ஓடிடி அணுகல், டிவி சேனல் சேவை!

டெலிகிராம்

டெலிகிராம்

எனவே தற்போது டெலிகிராம் செயலிக்கு போட்டியாக வாட்ஸ்அப் நிறுவனம் POLL எனும் வாக்கெடுப்பு நடத்தும் அம்சத்தை பயனர்களுக்கு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.

அவர் நல்லவரா?., கெட்டவரா?- அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் குறித்து எலான் மஸ்க் அளித்த சுவாரஸ்ய பதில்!அவர் நல்லவரா?., கெட்டவரா?- அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் குறித்து எலான் மஸ்க் அளித்த சுவாரஸ்ய பதில்!

ஐஓஎஸ் பயனர்கள்

ஐஓஎஸ் பயனர்கள்

அதேபோல் வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டுவரும் இந்த புதிய அப்டேட் முதலில் ஐஓஎஸ் பயனர்களுக்கும் கிடைக்கும் என்றும், அதற்குபின்பு தான் ஆண்ட்ராய்டு மற்றும் டெஸ்க் டாப் வெர்சனுக்கு கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஏன் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவது சிறந்ததில்லை.. இவ்வளவு காரணம் இருக்கிறதா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்கஇந்தியாவில் ஏன் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவது சிறந்ததில்லை.. இவ்வளவு காரணம் இருக்கிறதா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க

 முழுவதுமாக என்கிரிப்டட் செய்யப்பட்டது

முழுவதுமாக என்கிரிப்டட் செய்யப்பட்டது

குறிப்பாக வாக்கெடுப்பை அனுமதிக்கும் புதிய அம்சம் வாட்ஸ்அப் குழுக்களில் மட்டுமே உருவாக்க முடியும் என்று கூறப்படுகிறது. பின்பு
கேள்விகளும், பதில்களும் முழுவதுமாக என்கிரிப்டட் செய்யப்பட்டது என்றும் வாக்கெடுப்பு நடத்தப்படும் குறிப்பிட்ட குழுவில் உள்ளவர்கள் மட்டுமே வாக்கெடுப்பு மற்றும் முடிவுகள் பார்க்க முடியும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது நடந்தால்., அது நடக்கும்: இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலை எப்போது வரும்?- மஸ்க் வைத்த நிபந்தனை!இது நடந்தால்., அது நடக்கும்: இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலை எப்போது வரும்?- மஸ்க் வைத்த நிபந்தனை!

காலண்டர் ஐகான்

காலண்டர் ஐகான்

மேலும் சில நாட்களுக்கு முன்பு WABetaInfo அறிவித்த தகவலின்படி, விரைவில் ஐஒஎஸ் பயனர்களுக்கு காலண்டர் ஐகான் அறிமுகம் செய்யப்பட உள்ளது எனவும், பின்பு முதற்கட்டமாகச் சோதனை அடிப்படையில் செயல்படுத்த அறிமுகம் செய்யப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீனி-டைனி ரோபோ நண்டு: விரைவில் மனித உடலுக்குள் சுற்றித் திரியுமா? இது புதிய சாதனை படைப்பு..டீனி-டைனி ரோபோ நண்டு: விரைவில் மனித உடலுக்குள் சுற்றித் திரியுமா? இது புதிய சாதனை படைப்பு..

 பழைய மெசேஜ்

பழைய மெசேஜ்

இந்த புதிய அம்சம் வாட்ஸ்அப் ஐஓஎஸ் பயனர்களுக்கு முதலில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த புதிய அம்சம் என்னவென்றால், பழைய மெசேஜ்களை திரும்ப எடுத்து படிப்பதற்கு வசதியாகத் தேதி குறிப்பிட்டுத் தேடும் வகையில் 'காலண்டர் ஐகான்' அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ரெட்மி நோட் 11டி ப்ரோ, ரெட்மி நோட் 11டி ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!ரெட்மி நோட் 11டி ப்ரோ, ரெட்மி நோட் 11டி ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

எப்படி பயன்படுத்துவது?

எப்படி பயன்படுத்துவது?

அதாவது நீங்கள் உங்களது நண்பர்களுக்கு முன்பு அனுப்பிய மெசேஜை பார்க்க விரும்பினால், முதலில் அவர்களது சாட் பக்கத்திற்கு செல்ல வேண்டும். அடுத்து அங்கு இருக்கும் காலண்டர் ஐகான் கிளிக் செய்தவுடன், காலண்டர் காண்பிக்கப்படும். அதன்பின்பு நீங்கள் எந்த தேதியில் பேசிய மெசேஜ் வேண்டுமோ, அந்த தேதியை சரியாக குறிப்பிட்டு செலக்ட் செய்யலாம். அதேபோல் இந்த காலண்டர் வேண்டாம் என்று நீங்கள் நினைத்தால், அதே சாட் பக்கத்தில் scroll செய்தால் போதும் காலண்டர்மறைந்துவிடும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
WhatsApp will soon bring the facility to create polls in the chat: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X