இனி ஒருத்தனும் சந்தேகப்பட கூடாது; வாட்ஸ்ஆப்பின் "ரெக்வஸ்ட்" அம்சம் உருட்டல்.!

அதனை தொடர்ந்து வாட்ஸ்ஆப்பும் பயனர்களின் டேட்டாவை திருடுவதாக குற்றசாட்டுகள் எழுந்தன.

|

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா மற்றும் பேஸ்புக் நிறுவனத்தின் "டேட்டா திருட்டு" குற்றச்சாட்டுகள் வெளியான நாளில் இருந்து, பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் மீதான ஒரு சந்தேக பார்வை தானாகவே கிளம்பியது. அதனை தொடர்ந்து வாட்ஸ்ஆப்பும் பயனர்களின் டேட்டாவை திருடுவதாக குற்றசாட்டுகள் எழுந்தன.

இனி ஒருத்தனும் சந்தேகப்பட கூடாது; வாட்ஸ்ஆப்பின்

வாட்ஸ்ஆப் அதன் மீது சுமற்றப்பட்ட அத்துணை குற்றச்சாட்டுகளுக்கும் தெளிவான மற்றும் சுத்தமான முறையில் விளக்கத்தை அளித்தது மட்டுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறையின் கீழ் அதன் கொள்கைகளையும் மேம்படுத்தி உள்ளது. அது மே 25 ஆம் தேதி தொடங்கி நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் வாட்ஸ்ஆப் அதன் பயனர்களின் டேட்டாவை விற்கவில்லை என்பதையும், வாட்ஸ்ஆப் செய்திகளானது எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ட்ட் என்பதையும் உறுதிசெய்தது.

உலகம் முழுவதும் உள்ள எல்லா பயனர்களுக்கும்.!

உலகம் முழுவதும் உள்ள எல்லா பயனர்களுக்கும்.!

நடைமுறைக்கு வரும் புதிய கொள்கைகளோடு சேர்த்து, Request Account info என்கிற ஒரு அம்சமும் இடம் பெற உள்ளது. வாட்ஸ்ஆப் பயன்பாட்டின் அடுத்த பதிப்பானது, மே 25-ல் வெளியானால், இந்த அம்சத்தினை அனைவராலும் பார்க்க முடியும். இந்த அம்சமானது வாட்ஸ்ஆப் மூலம் சேகரிக்கப்படும், பயனர் ஒருவரின் சிறிய அளவிலான டேட்டாவை டவுன்லோட் செய்ய உதவும். இந்த அம்சமானது, உலகம் முழுவதும் உள்ள எல்லா பயனர்களுக்கும் உருட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு முறை ரெக்வஸ்ட் செய்த பின்னர்.!

ஒரு முறை ரெக்வஸ்ட் செய்த பின்னர்.!

"ரெக்வஸ்ட் அக்கவுண்ட் இன்ஃபோ" என்கிற இந்த புதிய அம்சமானது, வாட்ஸ்ஆப்பின் செட்டிங்ஸ்-ல் காணப்படும். அதை கிளிக் செய்து பின்னர் 'அக்கவுண்ட்' என்கிற விருப்பத்தை கிளிக் செய்ய "ரெக்வஸ்ட் அனுப்பட்டது" என்கிற நோட்டிபிகேஷன் கிடைக்கும். கோரிக்கை நிகழ்த்தப்பட்ட தேதியிலிருந்து அடுத்த மூன்று நாட்களுக்குள் வந்து சேரும். ஒரு முறை ரெக்வஸ்ட் செய்த பின்னர் நடுவில் ரத்து செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அக்கவுண்ட்டை டெலிட் செய்ய வேண்டும்.!

அக்கவுண்ட்டை டெலிட் செய்ய வேண்டும்.!

ஒருவேளை கண்டிப்பாக அனுப்பிய ரெக்வஸ்ட்டை கேன்சல் செய்ய வேண்டும் என்றால், ஒன்று உங்களின் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை டெலிட் செய்ய வேண்டும் அல்லது, வாட்ஸ்ஆப் நம்பரை மாற்ற வேண்டும். இந்த இரண்டில் ஒன்றை செய்வதின் விளைவாக, அனுப்பட்ட கோரிக்கையை ரத்து செய்யலாம்.

சேவையகங்ளில் இருந்து குறிப்பிட்ட தகவல்கள் நீக்கப்படும்.!

சேவையகங்ளில் இருந்து குறிப்பிட்ட தகவல்கள் நீக்கப்படும்.!

உங்கள் அக்கவுண்ட் சார்ந்த விவரங்கள் டவுன்லோட் செய்ய திறந்து விடப்பட்டுள்ளது என்கிற தகவலை வாட்ஸ்ஆப் உங்களுக்கு அனுப்பி வைக்கும். அந்த அறிவிப்பு கிடைத்த அடுத்த சில வாரங்களுக்குள் அதை நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டும். இல்லையெனில் அது வாட்ஸ்ஆப் சேவையகங்ளில் இருந்து குறிப்பிட்ட தகவல்கள் நீக்கப்படும்.

சுவாரசியம் என்னவெனில்.!

சுவாரசியம் என்னவெனில்.!

மேற்குறிப்பிட்ட அதே வழிமுறைகளை பின்பற்ற இறுதியாக "டவுன்லோட் ரிப்போர்ட்" என்கிற ஒரு விருப்பம் உங்களுக்கு கிடைக்கும். அதை டாப் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும். டவுன்லோட் செய்யப்பட்ட டேட்டா ஆனது ஸிப் பைல் வடிவத்தில் அணுக கிடைக்கும் என்பது குறிப்பிடத் தக்கது. சுவாரசியம் என்னவெனில், டவுன்லோட் செய்த ரிப்போர்ட்டை நிரந்தரமாக டெலிட் செய்யும் ஒரு அம்சத்தையும் வாட்ஸ்ஆப் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
WhatsApp Will Now Allow Users to Download their Data. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X