Home
Apps

Whatsapp: நாளை முதல் இந்த போன்களில் வாட்ஸ்ஆப் கிடையாது! இறுதிநேரமும் முடிந்தது!

வாட்ஸ்அப் நிறுவனம் மீண்டும் தனது பயனர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை நினைவுபடுத்தியுள்ளது. அண்மையில் வாட்ஸ்அப் விண்டோஸ் போன்களுக்கான அதன் சேவையை முடக்கிவிட்டது. இதன்படி இனி விண்டோஸ் போன்களில் வாட்ஸ்அப் சேவை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நாளை முதல் இன்னும் சில ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் வாட்ஸ்அப் செயல்படாது என்று தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் ஆதரவு நிறுத்தப்படுகிறது

வாட்ஸ்அப் ஆதரவு நிறுத்தப்படுகிறது

இதற்கு முன்பும் வாட்ஸ்அப் நிறுவனம் சில ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் ஐபோன்களுக்கான ஆதரவையும் நிறுத்துகிறது. சில பயனர்களின் அக்கௌன்ட்டையும் முடக்கம் செய்தது. அதேபோல் தற்பொழுது அந்த பட்டியலின் கீழ் வாட்ஸ்அப் நிறுவனம் இன்னும் சில போன்களை சேர்த்துள்ளது. பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள போன்களில் நாளை முதல் வாட்ஸ்அப் இயங்காது.

சில ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் இனி வாட்ஸ்அப் இல்லை

சில ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் இனி வாட்ஸ்அப் இல்லை

வாட்ஸ்அப் நிறுவனம் சில ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் தங்கள் சேவையை முடித்துக்கொள்ள நினைத்ததற்குக் காரணம், தற்பொழுது வெளியிடபட்ட மற்றும் அடுத்து வெளியிடப்படவுள்ள புதிய அப்டேட்கள் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சங்கள் பழைய வெர்ஷன்களில் செயல்படாது என்பதனால் வாட்ஸ்அப் தனது சேவையை கீழே குறிப்பிட்டுள்ள போன்களில் நிறுத்திக்கொள்ள முடிவுசெய்துள்ளது.

உங்கள் போன் எந்த வெர்ஷனில் உள்ளது?

உங்கள் போன் எந்த வெர்ஷனில் உள்ளது?

வாட்ஸ்அப்-ன் அறிவிப்பின்படி அண்ட்ராய்டு 2.3.7 இயங்குதளத்திற்குக் கீழ் உள்ள ஸ்மார்ட்போன்கள் மற்றும் iOS 8 இயங்குதளத்திற்குக் கீழ் உள்ள ஐபோன்களில் நாளை முதல் வாட்ஸ்அப் சேவை இயங்காது என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த இயங்குதளத்தில் உங்கள் போன் உள்ளது என்றால் உடனே உங்கள் வாட்ஸ்அப்-ஐ அப்டேட் செய்யுங்கள்.

 நாளை முதல் இவர்களுக்கு வாட்ஸ்அப் கிடையாது

நாளை முதல் இவர்களுக்கு வாட்ஸ்அப் கிடையாது

இந்த வெர்ஷன் கீழ் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்களுக்கு, அப்டேட் செய்ய முடியவில்லை என்றால் நாளை முதல் உங்கள் வாட்ஸ்அப் அக்கௌன்ட் செயல்படாது. உங்களால் இனி இந்த வெர்ஷன் கீழ் இயங்கும் போன்களில் புதிய வாட்ஸ்அப் கணக்கையும் திறக்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி நேரமும் முதிந்தது

இறுதி நேரமும் முதிந்தது

இந்த அறிவிப்பை வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஆண்டே வெளியிட்டது. குறிப்பிடப்பட்டுள்ள வெர்ஷனில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்களுக்கு சாட்களை சேவ் செய்துகொள்ள கால ஆவகாசமும் வழங்கப்பட்டிருந்தது. அதன்படிஇந்த வாட்ஸ்அப் பயனர்கள் தங்களின் சாட்களை சேவ் செய்துகொள்ள இன்னும் 24 மணி நேரம் மட்டுமே அவகாசம் மிச்சம் உள்ளது. இதற்கு பின் உங்களால் பேக்கப் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை இருந்து நாள்!

நாளை இருந்து நாள்!

அதேபோல் KaiOS 2.5.1 பிளஸ், ஜியோபோன் மற்றும் ஜியோ போன் 2 ஆகிய போன்களில் மட்டும் வாட்ஸ் ஆப் சேவை தடையின்றி செயல்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் நாளை முதல் மேலே குறிப்பிடப்பட்டுள்ள போன்களில் வாட்ஸ் ஆப் சேவை செயல்படாது என்று வாட்ஸ்அப் உறுதிபட அறிவித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Whatsapp Will Not Work On These Android And iPhones From Tomorrow : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X