வாட்ஸ்அப் சேவை இனி இந்த ஸ்மார்ட்போன்களில் செயல்படாது! உங்க போன் இதில் இருக்கானு செக் பண்ணுங்க!

|

2020 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இயங்காது என்று வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள பட்டியலில் உங்கள் ஸ்மார்ட்போனும் உள்ளதா என்று முதலில் செக் செய்துகொள்ளுங்கள். அப்படி உங்களுடை போனும் பட்டியலில் இருந்தால், உங்கள் வாட்ஸ்அப் சாட்களை எப்படி பத்திரப்படுத்திக்கொள்வது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

வாட்ஸ்அப் சேவை இவர்களுக்கு முற்றிலுமாக துண்டிக்கப்படுகிறது

வாட்ஸ்அப் சேவை இவர்களுக்கு முற்றிலுமாக துண்டிக்கப்படுகிறது

வாட்ஸ்அப் அறிவித்துள்ள அறிவிப்பின்படி, பல ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாமல் இருக்க இன்னும் ஒரு சில வாரங்களே உள்ளது. பல ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஸ்மார்ட்போன்களில் புதிய அப்டேட்கள் செயல்படாது என்பதனால் 2020 ஆண்டு முதல், கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் சேவை முற்றிலுமாக துண்டிக்கப்படுகிறது.

உங்கள் போன் இந்த இயங்குதளத்தின் கீழ் உள்ளதா?

உங்கள் போன் இந்த இயங்குதளத்தின் கீழ் உள்ளதா?

சமீபத்திய அறிவிப்பின்படி அண்ட்ராய்டு 2.3.7 இயங்குதளத்திற்குக் கீழ் உள்ள ஸ்மார்ட்போன்கள் மற்றும் iOS 8 இயங்குதளத்திற்குக் கீழ் உள்ள வெர்ஷன் கொண்ட ஐபோன்களில் அடுத்த ஆண்டு முதல் வாட்ஸ்அப் சேவை இயங்காது என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆகையால் உங்கள் வாட்ஸ்அப் சாட்களை சேவ் செய்துகொள்ள இதுவே சரியான நேரம்.

நீயா., நானா: ஜியோ ரூ.75-க்கு 28 நாட்கள் சலுகை, ஏர்டெல், வோடபோன் ரூ.149-ல் அதிரடிநீயா., நானா: ஜியோ ரூ.75-க்கு 28 நாட்கள் சலுகை, ஏர்டெல், வோடபோன் ரூ.149-ல் அதிரடி

புதிய வாட்ஸ்அப் கணக்குகளை உருவாக்க முடியாது

புதிய வாட்ஸ்அப் கணக்குகளை உருவாக்க முடியாது

மேலும், இந்த அண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளத்தில் இயங்கும் போன்களில், வாட்ஸ்அப் சேவை பயன்படுத்தி வரும் பயனர்களின் பழைய அக்கௌன்ட் 2020ம் ஆண்டு முதல் செயல்படாது. அதேபோல் இனி இவர்களால் புதிய வாட்ஸ்அப் கணக்குகளை உருவாக்கவோ அல்லது பழைய அக்கௌன்ட்டை பயன்படுத்தவோ முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 31ம் தேதி முதல் சேவைக்கு தடை

டிசம்பர் 31ம் தேதி முதல் சேவைக்கு தடை

டிசம்பர் 31ம் தேதி முதல் அனைத்து விண்டோஸ் ஸ்மார்ட்போன்களிலும் வாட்ஸ்அப் சேவை செயல்படாது. அதேபோல் விண்டோஸ் நிறுவனம் விண்டோஸ் 10 மொபைல் OS சேவையை முற்றிலுமாக நீக்கம் செய்கிறது. அதேபோல் KaiOS 2.5.1பிளஸ், ஜியோபோன் மற்றும் ஜியோ போன் 2 ஆகிய போன்களில் மட்டும் வாட்ஸ்அப் சேவை தடையின்றி செயல்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.

அனைவரும் பயன்படுத்தும் இந்த சேவை நிறுத்தப்படுகிறது: டிராய் அறிவிப்பு.! எந்த சேவை?அனைவரும் பயன்படுத்தும் இந்த சேவை நிறுத்தப்படுகிறது: டிராய் அறிவிப்பு.! எந்த சேவை?

வாட்ஸ்அப் சேவை செயலாப்டாத போன்கள்

வாட்ஸ்அப் சேவை செயலாப்டாத போன்கள்

  • அண்ட்ராய்டு 2.3.7 வெர்ஷன் மற்றும் அதற்குக் கீழ் உள்ள வெர்ஷன்கள்
  • iOS 8 வெர்ஷன் மற்றும் அதற்குக் கீழ் உள்ள வெர்ஷன்கள்
  • அனைத்து விண்டோஸ் போன்கள்
  • இனிமேல் வாட்ஸ்அப் சேவை செயல்படும் போன்கள்

    இனிமேல் வாட்ஸ்அப் சேவை செயல்படும் போன்கள்

    • அண்ட்ராய்டு 4.0.3 வெர்ஷன் மற்றும் அதற்கு மேல் உள்ள அனைத்து வெர்ஷன்கள்
    • iOS 9 வெர்ஷன் மற்றும் அதற்கு மேல் உள்ள வெர்ஷன்கள்
    • KaiOS 2.5.1 மற்றும் அதற்கு மேல் உள்ள வெர்ஷன்கள்
    • ஜியோபோன் மற்றும் ஜியோ போன் 2
    • ஜியோவிற்கு பதிலடி: வோடபோனின் இரண்டு அட்டகாசமான திட்டங்கள் அறிமுகம்.! முழுவிபரங்கள்.!ஜியோவிற்கு பதிலடி: வோடபோனின் இரண்டு அட்டகாசமான திட்டங்கள் அறிமுகம்.! முழுவிபரங்கள்.!

      உங்கள் வாட்ஸ்அப் சாட்களை சேவ் செய்ய உடனே இதை செய்யுங்கள்

      உங்கள் வாட்ஸ்அப் சாட்களை சேவ் செய்ய உடனே இதை செய்யுங்கள்

      • நீங்கள் சேவ் செய்ய விரும்பும் சாட்களை ஓபன் செய்து, குரூப் இன்போ(Group Info) கிளிக் செய்யவும்.
      • பின் எக்ஸ்போர்ட் சாட் (Export Chat) கிளிக் செய்யுங்கள்.
      • மீடியா பைல்களுடன் சேவ் செய்வதா? அல்லது மீடியா பைல்கள் இல்லாமல் சேவ் செய்வதா என்று இரண்டு விருப்பம் உங்களுக்கு வழங்கப்படும்.
      • உங்கள் விருப்பத்தைத் தேர்வு செய்துகொள்ளுங்கள்.
      • பிறகு எக்ஸ்போர்ட் சாட் கிளிக் செய்தால் உங்களுடைய வாட்ஸ்அப் சாட் சேவ் செய்துகொள்ளப்படும்.
      • வாட்ஸ்அப் ஆதரவை நீக்கம் செய்ததற்கு காரணம்

        வாட்ஸ்அப் ஆதரவை நீக்கம் செய்ததற்கு காரணம்

        இந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஆப்பிள் ஐபோன்களுக்கான வாட்ஸ்அப் சேவையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முக்கிய காரணம் புதிய பாதுகாப்பு அப்டேட்கள் தான் என்றும், இந்த போன்களில் வாட்ஸ்அப் ஆதரவை நீக்கம் செய்வது நிறையப் பயனர்களைப் பாதிக்காது என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

        வாட்ஸ்அப் இல் உங்களை யார் பிளாக் செய்துள்ளனர் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

        வாட்ஸ்அப் இல் உங்களை யார் பிளாக் செய்துள்ளனர் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

        வாட்ஸ்அப் மெசேஜிங் தளம் பல மில்லியன் பயனர்களால் உலகம் முழுதும் பயன்படுத்தப்படுகிறது. இந்த இலவச மெசேஜிங் தளத்தில் உங்களுக்குத் தெரிந்தவர்களில் யார் உங்களை பிளாக் செய்துள்ளனர் என்பதை எப்படிக் கண்டறிந்து அதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.

        வாட்ஸ்அப் தளத்தில் உள்ள பிளாக்கிங் சேவை

        வாட்ஸ்அப் தளத்தில் உள்ள பிளாக்கிங் சேவை

        வாட்ஸ்அப் தளத்தில் பயனர்களை பிளாக் செய்வதற்கான பிளாக்கிங் சேவை இருப்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே, பிளாக் சேவையைப் பயன்படுத்தி ஒருவரை பிளாக் செய்துவிட்டால் அந்த நபரிடம் இருந்து வரும் அனைத்து மெசேஜ் மற்றும் வாட்ஸ்அப் அழைப்புகள் பிளாக் செய்யப்படும்.

        பிளாக்கிங் நோட்டிபிகேஷன் அனுப்பபடமாட்டாது

        பிளாக்கிங் நோட்டிபிகேஷன் அனுப்பபடமாட்டாது

        உங்கள் நண்பரோ அல்லது உங்களுக்குத் தெரிந்த நபர் யாரேனும் உங்களை பிளாக் செய்துவிட்டால், உங்களுக்கு வாட்ஸ்அப்-பிற்கு எந்தவித பிளாக்கிங் நோட்டிபிகேஷனும் அனுப்பபடமாட்டாது. நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளதை நேரடியாக அறிய முடியாது என்றாலும் கூட, சில செயல்முறைகளின் படி நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

        பிளாக் செய்யப்பட்டுள்ளதை எப்படி உறுதிப்படுத்துவது?

        பிளாக் செய்யப்பட்டுள்ளதை எப்படி உறுதிப்படுத்துவது?

        1. ப்ரொஃபைல் பிக்சர்

        நீங்கள் ஒருவரால் பிளாக் செய்யப்பட்டிருந்தால் ஒன்று அவர்களுடைய ப்ரொஃபைல் பிக்சர் உங்களுக்குக் காண்பிக்கப்படமாட்டாது அல்லது அவர்களின் ப்ரொஃபைல் பிக்சரில் அவர்கள் மாற்றம் செய்தாலும் கூட உங்களுக்குப் பழைய ப்ரொஃபைல் பிக்சர் மட்டுமே காண்பிக்கப்படும். இப்படி ஏதேனும் நடந்தால், நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதில் சந்தேகமில்லை.

        2. லாஸ்ட் சீன் நேரம்

        2. லாஸ்ட் சீன் நேரம்

        உங்களை யாரேனும் பிளாக் செய்திருந்தால், அந்த நபரின் லாஸ்ட் சீன் நேரம் உங்களுக்குக் காண்பிக்கப்படமாட்டாது. இதை மட்டும் வைத்து நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்கள் என்று தீர்மானித்து விட முடியாது, ஏனென்றால் வாட்ஸ்அப் தளத்தில் லாஸ்ட் சீன் நேரத்தை ஹைடு செய்வதற்கான அம்சமும் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ப்ரொஃபைல் பிக்சர் மற்றும் லாஸ்ட் சீன் இரண்டும் தெரியவில்லை என்றால் நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்கள்.

        3. மெசேஜ் அனுப்பித் தெரிந்துகொள்ளலாம்

        3. மெசேஜ் அனுப்பித் தெரிந்துகொள்ளலாம்

        உங்களை இவர் பிளாக் செய்துள்ளார் என்று சந்தேகிக்கும் நபருக்கு ஒரு மெசேஜ்-ஐ அனுப்புங்கள், நீண்ட காலத்திற்கு நீங்கள் அனுப்பிய மெசேஜ் ஒரே ஒரு டிக் மார்க்குடன் மட்டும் இருந்தால், உங்கள் மெசேஜ் அந்த நபருக்கு டெலிவரி ஆகவில்லை என்பது பொருள். இதற்கான முக்கிய காரணம் ஒன்று நீங்கள் பிளாக் செய்யப்பட்டிருக்கலாம் அல்லது அந்நபரின் மொபைல் டேட்டா ஆன்னில் இல்லாமல் இருக்கலாம்.

        4. வாய்ஸ் கால் செய்யுங்கள்

        4. வாய்ஸ் கால் செய்யுங்கள்

        இன்னும் உங்களால் அந்த நபர் உங்களை பிளாக் செய்துள்ளார் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லையா? அப்போது உடனே அவர்களின் எண்ணிற்கு வாட்ஸ்அப் இல் ஒரு வாய்ஸ் கால் செய்யுங்கள். நீங்கள் வாய்ஸ் கால் செய்து உங்களுக்கு ரிங்டோன் கேட்டால், நீங்கள் பிளாக் செய்யப்படவில்லை என்று அர்த்தம். அதற்குப் பதிலாக வாய்ஸ் கால் செய்ய அனுமதி இல்லை என்று வந்தால் நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்கள் என்பது உறுதி.

        5. கிரியேட் நியூ குரூப்

        5. கிரியேட் நியூ குரூப்

        ஒரு புதிய குரூப் ஒன்றை உருவாக்குங்கள், அதில் அந்த நபரை ஆட்(add) செய்ய முயற்சியுங்கள். உங்களால் அந்த நபரை நீங்கள் உருவாக்கிய புதிய குரூப்பில் ஆட் செய்ய முடிந்தால் நீங்கள் இன்னும் பிளாக் செய்யப்படவில்லை என்று தெரிந்துகொள்ளுங்கள். அப்படி அவர்களை புதிய குரூப்பில் ஆட் செய்ய அனுமதி இல்லை என்று வந்தால், நிச்சயமாக நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

        நிச்சயம் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்கள்

        நிச்சயம் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்கள்

        மேலே கூறப்பட்டுள்ள இந்த செயல்முறைகளைப் பின்பற்றி, உங்களுக்குத் தெரிந்த நபர்களால் நீங்கள் வாட்ஸ்அப் இல் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்களா என்று தெரிந்துகொள்ளுங்கள். இந்த 5 முறைகளில் ஏதேனும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போனாலோ அல்லது அனைத்தும் ஒத்துப்போனாலோ நீங்கள் நிச்சயம் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதே உண்மை.

Best Mobiles in India

English summary
WhatsApp Will No Longer Works On These Smartphones Check Your Phone Is Also On This List : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X