WHATSAPP இல் அடுத்து களமிறங்க தயாராகும் 2 சக்திவாய்ந்த அம்சங்கள் இவைதான்!
வாட்ஸ்அப் நிறுவனம் பல புதிய அம்சங்களைத் தனது பயனர்களுக்காக அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. இன்னும் பல வகையான புதிய அம்சங்களை வாட்ஸ்அப் சோதனை செய்து வருகிறது. அதேபோல், தற்பொழுது வாட்ஸ்அப் தனது பீட்டா வெர்ஷனில் சோதனை செய்து வரும் மிரட்டலான 2 அம்சங்கள் அடுத்து வெளிவர தயாராகிக்கொண்டுள்ளது , இந்த அம்சங்கள் எதற்காக? என்ன வேலையைச் செய்யும் என்று பார்க்கலாம்.

வாட்ஸ்அப் பல சிறப்பான அம்சங்களைக் குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டும் தனது வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் மூலம் வழங்கி முதற்கட்ட சோதனையைச் செய்து வருகிறது. இப்பொழுது வாட்ஸ்அப் சோதனை செய்து வரும் இந்த இரண்டு முக்கியமான அம்சங்களை வாட்ஸ்அப் விரைவில் வெளியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அடுத்து அனைவருக்கும் கிடைக்கவிருக்கும் அம்சம் என்ன தெரியுமா?
வாட்ஸ்அப் பல சிறப்பான அம்சங்களைக் குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டும் தனது வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் மூலம் வழங்கி முதற்கட்ட சோதனையைச் செய்து வருகிறது. இப்பொழுது வாட்ஸ்அப் சோதனை செய்து வரும் இந்த இரண்டு முக்கியமான அம்சங்களை வாட்ஸ்அப் விரைவில் வெளியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அடுத்து அனைவருக்கும் கிடைக்கவிருக்கும் அம்சம் என்ன என்று பார்க்கலாம்.

வாட்ஸ்அப் self-destructing messages அம்சம்
வாட்ஸ்அப் 'self-destructing messages' செல்ஃப் டெஸ்ட்ரக்டிங் மெசேஜஸ் என்ற புதிய சேவையைச் சோதனை செய்து வருகிறது. இந்த self-destructing messages அம்சமானது பயனர் அனுப்பும் மெசேஜ்களை குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் தானாக அழித்துவிடும். நீங்கள் அனுப்பும் மெசேஜிற்கான ஆட்டோமேட்டிக் அழிக்கும் நேரத்தையும் நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

சோதனையில் உள்ள டெலீட் மெசேஜ் அம்சம்
வாட்ஸ்அப் இந்த டெலீட் மெசேஜ் அம்சத்தைச் சிறிது காலமாகச் சோதனை செய்து வருகிறது என்பதை நாங்கள் ஏற்கனவே அறிவோம். இந்த சோதனை அம்சம் எப்போது அனைவருக்கும் கிடைக்கும், எந்த வடிவத்தில் அனைவருக்கும் கிடைக்கும் என்பது இன்னும் தெளிவாக நமக்குத் தெரியவில்லை. ஆனால், சோதனை செய்து வரும் மும்முரத்தைப் பார்த்தால் நிச்சயம் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

ஆட்டோமேட்டிக் டெலீட் மெசேஜ்
ஸ்னாப்சாட் மற்றும் டெலிகிராம் போன்ற பயன்பாடுகளில் இந்த ஆட்டோமேட்டிக் டெலீட் மெசேஜ் அம்சம் பொதுவாகவே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் பொதுவான இந்த அம்சத்தை வாட்ஸ்அப் மட்டும் இன்னும் செயல்படுத்தாமல் இருக்கிறது. ஆனால், கூடிய விரைவில் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WABetaInfo என்ன கூறுகிறது?
முதலில் இந்த அம்சத்தை வாட்ஸ்அப், கடந்த அக்டோபரிலிருந்து சோதனை செய்து வருகிறது. ஆனால், அதை குரூப் சாட் அம்சத்திற்கு மட்டுமே பயன்படுத்தி வந்தது. தற்பொழுதுள்ள நல்ல செய்தி என்னவென்றால், வாட்ஸ்அப் இப்பொழுது இந்த சேவையை சமீபத்திய பீட்டா வெர்ஷன் மூலம் தனிப்பட்ட கணக்குகளுக்கான செல்ஃப் டெஸ்ட்ரக்டிங் மெசேஜஸ் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது என்று WABetaInfo தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் இன் முடிவு என்ன?
இன்னும் இந்த சேவை பீட்டா வெர்ஷனில் சோதனையின் கீழ் உள்ளதினால், குறிப்பிட்ட குழு பயனர்களுக்கு மட்டும் கிடைக்கும் இந்த சேவை அனைவருக்கும் கிடைக்குமா என்பதைச் சோதனைக்குப் பின் வாட்ஸ்அப் முடிவு செய்யுமென்று தெரிவிக்கப்பட்டிருந்தது. வாட்ஸ்அப் இந்த அம்சத்தை நிச்சயம் வெளியிடுமா? என்ற கேள்விகள் சென்ற மாதத்தில் நமக்கு இருந்து வந்து, தற்பொழுது கிடைத்துள்ள தகவல்படி இந்த அம்சங்கள் வெளியிடப்படும் என்று உறுதியாகியுள்ளது.

உங்கள் விருப்பத்தைத் தேர்வு செய்யுங்கள்
வாட்ஸ்அப் பீட்டாவை அணுகக்கூடிய ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இப்போது இந்த சேவை பயன்படுத்தக் கிடைக்கிறது. சாட் செட்டிங்ஸ் மெனுவில் இந்த புதிய அம்சத்தை நீங்கள் காணலாம். இதில் டெலீட் மெசேஜஸ் கிளிக் செய்யுங்கள், பின் கீழ கொடுக்கப்பட்டுள்ள OFF, 1 hour, 1 day, 1 week, 1 month, and 1 year என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து உங்கள் மெசேஜ்கள் அளிக்கப்படவேண்டிய கால அவகாசத்தைத் தேர்வு செய்துகொள்ளுங்கள்.

பல நாட்களாக வாட்ஸ்அப் பயனர்கள் எதிர்பார்க்கும் அம்சம்
இரண்டாவது முக்கிய அம்சம் பல நாட்களாக வாட்ஸ்அப் பயனர்கள் எதிர்பார்க்கும் ஒரு முக்கியம் அம்சம் என்றே கூறலாம், பல சாதனங்களில் ஒரே வாட்ஸ்அப் கணக்கை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதற்கான அனுமதி தான் அது. இந்த அம்சத்தை அண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்கள் இருவரும் வாட்ஸ்அப் தயார் செய்துள்ளது. இந்த அம்சத்தை பயன்படுத்தி ஒரு சாதனத்திலிருந்து இன்னொரு சாதனத்திற்குத் தடையின்றி உங்கள் வாட்ஸ்அப் பயன்பாட்டைப் பயன்படுத்த முடியும்.

எப்பொழுது வெளியிடப்படும்?
கூடுதலாக உங்கள் வாட்ஸ்அப் கணக்கு எந்த சாதனங்களுடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது என்பதைக் காண, தனியாக பயனர் சாதனப் பட்டியலையும் வாட்ஸ்அப் தனது பயன்பாட்டில் சேர்த்துள்ளது. இந்த இரண்டு அம்சங்களும் தற்போது WABetaInfo இன் படி வளர்ச்சியில் உள்ளன, பீட்டா பதிப்புகள் தற்போது வரவிருக்கும் அம்சங்களின் ஆரம்ப கண்ணோட்டத்தைப் பெற மக்களை அனுமதிக்கின்றன. அணைத்து பயனர்களுக்கு இந்த அம்சம் வரும் வாரங்களில் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications