WhatsApp: ஒரே நேரத்தில் 4 சாதனங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்தலாம்! களமிறங்கும் புதிய சேவை!

|

வாட்ஸ்அப் செயலி ஆனது உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும், குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய புதிய வசதிகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

பேஸ்புக்

அதன்படி பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ செயலியில் அவ்வப்போது பயனர்களின் வசதிக்காக புதிய அம்சங்கள் இணைக்கப்படும். சமீபத்தில் ஞசு கோடு மூலம் புதியவர்களை உள்ளே இணைக்கும் அம்சம் கொண்டுவரப்பட்டது. பின்பு அனைவரும் எதிர்பார்க்கப்படும் பணப்பரிமாற்றம் செய்யும் வசதியும் விரைவில் கொண்டுவரப்பட இருக்கிறது

ஒரே வாட்ஸ்அப்

முன்னதாக பல சாதனங்களில் ஒரே வாட்ஸ்அப் கணக்கைப் பயன்படுத்துவதற்கான சாத்தியம் குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் பல காலமாக யோசனை செய்து வருகிறது. குறிப்பாகப் பயனர்களின் பாதுகாப்பிற்குப் பாதிப்பு இல்லாமல் இந்த அம்சத்தை எப்படிக் கையாளுவது என்பதைத் தான் வாட்ஸ்அப் அதிகம் யோசித்து வந்தது. தற்பொழுது ஒருவழியாக இவர்களின் யோசனை செயலில் களமிறங்கியுள்ளது.

WABetaInfo

வாட்ஸ்அப் நிறுவனத்தின் WABetaInfo அறிக்கையின் படி, வாட்ஸ்அப் நிறுவனம் தற்பொழுது அதன் பயன்பாட்டை மல்டிபிள் டிவைஸ் உடன் இணைக்க தயாராகிவிட்டது என்று தெரிவித்துள்ளது. WABetaInfo அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போல், இனி வாட்ஸ்அப் பயனர்கள் 4 சாதனங்களுடன் இணைத்துக்கொள்ளும் ஒரு புதிய அம்சத்தை நிறுவனம் தற்பொழுது சாத்தியமாக்கியுள்ளது.

நான்கு வெவ்வேறு சாதனங்களில் வாட்ஸ்அப்

நீங்கள் ஒரே நேரத்தில் நான்கு வெவ்வேறு சாதனங்களில் வாட்ஸ்அப்பை இனி பயன்படுத்த முடியும். இந்த நான்கு சாதனங்களிலும் மீண்டும் மீண்டும் நீங்கள் உள்நுழைய வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 'What a App! WhatsApp' என்று அனைவரின் வாயையும் பிளக்க வைத்திருக்கும் இந்த புதிய அம்சம் விரைவில் அனைவரின் பயன்பாட்டிற்கு வரும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இணைக்கப்பட்ட

இதற்கிடையில், அனைத்து இணைக்கப்பட்ட சாதனங்களையும் நிர்வகிக்க ஒரு பிரத்தியேகமான UI பயன்முறையை வாட்ஸ்அப் உருவாக்கியுள்ளது. இந்த புதிய யூஐ பிரிவு பயனருக்கு புதிய சாதனத்தைச் சேர்க்க உதவும், மேலும் தற்போதைய வாட்ஸ்அப் வெப் / டெஸ்க்டாப் பிரிவைப் போலவே, இது இணைக்கப்பட்ட எல்லா சாதனங்களையும் உங்கள் வாட்ஸ்அப் கணக்கில் காண்பிக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
WHATSAPP WILL ALLOW YOU TO USE THE SAME ACCOUNT ON MULTIPLE DEVICE : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X