Home
Apps

WhatsApp வெப் பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ்: இனி அதை ஈஸியா அனுப்பலாம்.! வருகிறது புதிய வசதி.!

வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களுக்குத் தொடர்ந்து புதிய புதிய அம்சங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு ஒரு அசத்தலான அம்சத்தைக் கொண்டுவர உள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்

ஓரிஜனல் தரத்தில்..

அதாவது வாட்ஸ்அப் வெப் பயனர்கள் கூடிய விரைவில் புகைப்படங்களை அதன் ஓரிஜனல் தரத்தில் மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். குறிப்பாக மற்ற சோஷியல்-ஷேரிங் செயலிகளுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் வாட்ஸ்அப் இந்த புதிய வசதியை வழங்க உள்ளது. குறிப்பாக இந்த புதிய வசதிமிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.

WhatsApp வெப் பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ்: இனி அதை ஈஸியா அனுப்பலாம்!

பீட்டா பதிப்பு

அதேபோல் இந்த புதிய வசதி ஆண்ட்ராய்டு மற்றும் வெப் வெர்ஷன்களின் பீட்டா பதிப்புகளில் வழங்கப்பட உள்ளது. மேலும் இதுகுறித்து WABetaInfo வெளியிட்டுள்ள தகவல் என்னவென்றால், இந்த புதிய வசதி தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது என்றும், இந்த வசதியைக் கொண்டு பயனர்கள் புகைப்படங்களை அதன் ஒரிஜனல் ரெசல்யூஷனில் ஷேர் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த புதிய வசதி மூலம் மற்றவர்களுக்குப் புகைப்படங்களைத் தரம் குறையாமல் அனுப்ப முடியும். அதேசமயம் அப்லோடு நேரத்தைக் குறைக்கவும், அதிக ஸ்பேஸ் எடுக்கப்படுவதைத் தவிர்க்கவும், தற்போது இருக்கும் கம்ப்ரெஸ்டு வெர்ஷன் தொடர்ந்து வழங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp வெப் பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ்: இனி அதை ஈஸியா அனுப்பலாம்!

இன்னும் 2 அம்சங்கள்

இதுதவிர வாட்ஸ்அப் நிறுவனம் இன்னும் 2 அம்சங்களைக் கொண்டுவர உள்ளது. அதாவது வாட்ஸ்அப் கால்களை செடியூல் (நேரத்தைத் திட்டமிடும்) செய்யும் அம்சம்,வாய்ஸ் மெசேஜ்களை எழுத்துக்களாக மாற்றும் அம்சம் போன்றவற்றை விரைவில் கொண்டுவர உள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.

இது தொடர்பாக WaBetaInfo தளத்தில் ஸ்கிரீன்ஷாட்டுகளும், சில விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இப்போது அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது செடியூல் செய்யும் வசதி எப்படி என்றால், நீங்கள் ஒருவருக்குக் கால் செய்யும் போது, ஒரு அட்டவணை ஆப்ஷன் காட்டப்படும். அதை கிளிக் செய்யும் போது நீங்கள் எப்போது கால் செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிடலாம். பின்பு இதில் தலைப்பு, தேதி, நேரம் போன்ற ஆப்ஷன்களை பயன்படுத்தி கால் செய்யும் விவரத்தைக் குறித்து வைத்துக் கொள்ளலாம்.

WhatsApp வெப் பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ்: இனி அதை ஈஸியா அனுப்பலாம்!

அலுவலக வேலை பார்ப்பவர்களுக்கு கால் செடியூல் அம்சம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம். பின்பு மீட்டிங்கில் பங்கேற்பவர்களுக்கு வாட்ஸ்அப் ஒரு ரிமைன்டர் அனுப்பும். குறிப்பாக கால் தொடங்கும் போது பயனர்களுக்கு அறிவிக்கப்படும். ஒருவேளை யாராவது கால் செய்ய மறந்துவிட்டால் கூட, இந்த அம்சம் அவர்களுக்கு ஞாபகப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் வாட்ஸ்அப் கொண்டுவரும் இன்னொரு அம்சம் என்னவென்றால், வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ்களை அப்படியே எழுத்துக்களாக மாற்றிப் படிக்க முடியும். இருந்தபோதிலும் இந்த அம்சம் முதலில் ஆங்கில மொழிக்கு மட்டும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp வெப் பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ்: இனி அதை ஈஸியா அனுப்பலாம்!

தற்போதைக்கு வேறு மொழியில் வாய்ஸ் மெசேஜ் வந்தால் அது வேலை செய்யாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அம்சம் வாட்ஸ்அப் செயலியின் ஐஓஎஸ் பீட்டா பதிப்பில் காணப்பட்டது. குறிப்பாக கால் செடியூல் அம்சம் மற்றும் வாய்ஸ் மெசேஜ்களை எழுத்துக்களாக மாற்றும் அம்சம் தற்போது சோதனை முயற்சியில் உள்ளது. விரைவில் இந்த புதிய அம்சங்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த புதிய அம்சங்கள் மிகவும் பயனுள்ள வகையில்
இருக்கும் என்றே கூறலாம்.

Best Mobiles in India

English summary
WhatsApp Web will now allow you to send high-resolution photos: Full details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X