வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டெலகிராம் மெசஞ்சர் செயலிகள் ஒரு பார்வை

By Siva
|

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பல இன்ஸ்டண்ட் மெசஞ்சர் செயலிகள் இண்டர்நெட்டில் உலாவி வந்தன. ஆனால் காலப்போக்கில் ஒவ்வொன்றாக மறைந்து தற்போது பெரும்பாலானோர்களால் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மெசஞ்சர் மற்றும் டெலகிராம் ஆகிய மெசஞ்சர்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது

வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டெலகிராம் மெசஞ்சர் செயலிகள் ஒரு பார்வை

இந்த நிலையில் இந்த மூன்று மெசஞ்சர்களில் உள்ள வேறுபாடுகள், ஒற்றுமைகள், நன்மை தீமைகள் குறித்து தற்போது பார்ப்போம்

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்

இன்றைய நிலையில் உலகில் அதிக நபர்களால் பயன்படுத்தப்படும் மெசஞ்சர்களில் ஒன்று. இந்த செயலியை ஆக்டிவேட் செய்ய உங்களுடைய மொபைல் எண் மட்டும் இருந்தால் போதும். இந்த வாட்ஸ் அப் மெசஞ்சர் மூலம் நீங்கள் புகைப்படம், வீடியோ, ஆடியோ, டாக்குமெண்ட் ஆகியவைகளை அட்டாச் செய்து அனுப்பலாம். ஒருமுறை இந்த செயலியை நீங்கள் இன்ஸ்டால் செய்துவிட்டால் உங்களுடைய நண்பர்களுடன் தனியாகவோ அல்லது குழுவாகவோ சேட்டிங் செய்யலாம்

சமீபத்தில் வாட்ஸ் அப் நிறுவனம் சில புதிய சேவைகளை தங்கள் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்தது. இதன்படி தற்போது வாட்ஸ் அப் மூலம் வீடியோ கால், வாய்ஸ் கால், நாம் பதிவு செய்யும் பதிவுகள் தற்காலிகமாக மட்டும் இருக்கும் வசதி போன்ற பல வசதிகளை அறிமுகம் செய்தது. மேலும் சேட் செய்யும்போது நமது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையிலும் தற்போது இதில் வசதி உண்டு

மேலும் கூகுள் டிரைவ், ஒன் டிரைவ், ஐகுளெளட் போன்றவற்றின் மூலம் ஃபைல்களை ஷேர் செய்வது, அப்லோட் செய்வது போன்ற வசதியும் சமீபத்தில் அறிமுகமானது. ஐபோனை பொருத்தவரை சிறி மூலமே வாட்ஸ் அப் செயலியை ஓப்பன் செய்து மெசேஜ் அல்லது வாய்ஸ் கால் சேவையை பெறலாம்

மேலும் ஆண்ட்ராய்ட், ஐஒஎஸ், விண்டோஸ் போன்ற அனைத்து வகை மொபைல் போன்களிலும் வாட்ஸ் அப் சப்போர்ட் செய்வது மட்டுமின்றி லேப்டாப், கம்ப்யூட்டர்களிலும் வாட்ஸ் அப்பை பயன்படுத்தலாம் என்பது கூடுதல் வசதி ஆகும்

ஃபேஸ்புக் மெசஞ்சர்

ஃபேஸ்புக் மெசஞ்சர்

வாட்ஸ் அப் மெசஞரில் உள்ள அனைத்து வசதிகளும் கிட்டத்தட்ட ஃபேஸ்புக்கிலும் இருப்பதால் இதன் வாடிக்கையாளர்களுக்கு எந்தவித அதிருப்தியும் இல்லை. வாய்ஸ் கால், வீடியோ கால், ஜிஃப் பைல் சப்போர்ட், ஸ்டிக்கர் போன்ற பல வாட்ஸ் அப் வசதிகள் இதிலும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் சமீபத்தில் செய்யப்பட்ட அப்டேட் மூலம் நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் இருக்கும் லொகேஷனையும் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் இதில் உள்ள ஒரு குறையாக பார்க்கப்படுவது உங்கள் நண்பரின் லொகேஷன்களை உங்களால் அவர் விரும்பினால்தான் பார்க்க முடியும். மேலும் இந்த மெசஞ்சரில் பதிவான பதிவுகள் தானாகவே சில குறிப்பிட்ட காலத்தில் டெலிட் செய்யப்பட்டுவிடும்

 டெலகிராம்

டெலகிராம்

பாதுகாப்பான சேட்டிங் வேண்டும் என்பவர்கள் தேர்வு செய்வது டெலகிராம் செயலியைத்தான். உயர் ரக பாதுகாப்பு அம்சங்கள் இதில் உள்ளதால் ரகசியமான தகவல்களை பயமின்றி சேட்டிங் செய்யலாம்.

அதுமட்டுமின்றி 1GB ஃபைல்கள் வரை அனுப்பும் வகையில் இந்த செயலி சப்போர்ட் செய்யும். மேலும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போலவே இந்த செயலியிலும் புகைப்படங்கல், ஆடியோ, வீடியோ உள்ளிட்ட பலவற்றை அனுப்பும் வசதி உண்டு.


Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
A few years ago, handful of IM app has changed the way of messaging with some cool updates forever. As of now, commonly used IM's are Whatsapp, Facebook Messenger and of course the Telegram.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X