WhatsApp பயனர்களே உஷார்! வாட்ஸ்அப்பை செயலிழக்கச் செய்யும் டெக்ஸ்ட் பாம்!

|

வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, பயனர்களின் தொலைபேசிகளில் பல அசாதாரண பிழைகள் மற்றும் ஹேக்கர்களின் தாக்குதல் இலக்காக வாட்ஸ்அப் உள்ளது. சில ஹேக்கர்கள் தகவல்களைத் திருட முயல்கின்றனர், வித்தியாசமான பிழைகள் மூலம் பயன்பாட்டைச் செயலிழக்கச் செய்கின்றனர். இந்த வரிசையில் வாட்ஸ்அப்பை செயலிழக்கச் செய்யும் டெக்ஸ்ட் பாம் என்ற பிழை தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதிய யோசனை

சமீபத்தில், WABetaInfo புதிய யோசனைகளைப் பகிருமாறு வாட்ஸ்அப் பயனர்களைக் கேட்டுக்கொண்டது, இதற்காக அதன் டிவிட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட்டைப் பகிர்ந்து கொண்டது. இதில் @ Ian_Oli_01 என்ற பயனர் சில ஸ்கிரீன் ஷாட்களை கிண்டலாகப் பகிர்ந்து கொண்டார், WABetaInfo ஐ முதலில் மாற்றியமைக்கப்பட்ட வாட்ஸ்அப் பதிப்புகள் கொண்ட சரியான "க்ராஷ்கோட் பாதுகாப்பு" வடிவமைக்குமாறு அவர் கமெண்ட் செய்திருந்தார்.

ஆன்டி-கிராஷ்

வாட்ஸ்அப்பில் ஆன்டி-கிராஷ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, வாட்ஸ்அப்பை உறைய வைக்க அல்லது செயலிழக்க வடிவமைக்கப்பட்ட பக்குகள் ஏராளமாக உள்ளன, பெரிய யூனிகோட் தரவுத்தளத்தைப் போன்ற 'க்ராஷ்கோட் பாதுகாப்பு' கொண்ட மாற்றியமைக்கப்பட்ட வாட்ஸ்அப் பதிப்புகளும் உள்ளன, இதிலிருந்து பயனர்களைப் பாதுகாக்க அதிகாரப்பூர்வ பயன்பாட்டில் பாதுகாப்பு அம்சங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

ஏர்டெல் அறிவித்த அன்லிமிடெட் டேட்டா? பயனர்கள் மகிழ்ச்சி.!ஏர்டெல் அறிவித்த அன்லிமிடெட் டேட்டா? பயனர்கள் மகிழ்ச்சி.!

WABetaInfo

இதற்கு WABetaInfo பதிலளித்துள்ளது, சில வாரங்களுக்கு முன்பு இந்த பிரச்சினையை கவதிவிட்டோம், இதைப் "பினாரியோ (Binario)" என்றும், " காண்டாக்ட் பாம்ஸ் (Contact bombs)" என்றும், "டிராவா ஜாப் (Trava Zap)" என்றும், "க்ராஷர்ஸ் (Crashers)" என்றும் அல்லது வெறுமனே "message/vcard crash" என்றும் இதைக் குறிப்பிடுகின்றனர்.

விளக்குவது

இதைப் பற்றி விளக்குவது மிகவும் சிக்கலானது, ஆனால் ஒவ்வொரு முறையும் நீங்கள் பயன்பாட்டைத் திறக்கும்போது இந்த செய்திகள் வாட்ஸ்அப்பை செயலிழக்கச் செய்யலாம். இந்த பிழையை டெக்ஸ்ட் பாம்ஸ் என்றும் குறிப்பிடுகின்றனர், இந்த பிழை ஆகஸ்ட் நடுப்பகுதியில் பிரேசிலில் தோன்றியது.

சிப் பொருத்தி நூதன முறையில் பெட்ரோல் பங்க்கில் மோசடி! இனி ரீடிங் மீட்டரையும் நம்ப முடியாது போல?சிப் பொருத்தி நூதன முறையில் பெட்ரோல் பங்க்கில் மோசடி! இனி ரீடிங் மீட்டரையும் நம்ப முடியாது போல?

பிரேசிலுக்கு வெளியே

பின்னர் பிரேசிலுக்கு வெளியே அதன் அண்டை நாடுகளுக்குப் பரவியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதில் தொடர்ச்சியான சிறப்பு எழுத்துக்கள் உள்ளன, அவை எதையும் குறிக்கவில்லை, ஆனால் அவை திரையில் காண்பிக்கப்பட்ட உடன் உங்கள் வாட்ஸ்அப் பயன்பாடு செயலிழந்துவிடுகிறது.

கிராஷ்

வாட்ஸ்அப் இது கிராஷ் செய்ததும், பயனர் வாட்ஸ்அப் பயன்பாட்டை மூடிவிட்டு மீண்டும் திறக்க முயற்சிக்கும் போது திறக்க மறுக்கிறது. இதற்குத் தற்காலிக தீர்வாக அறியப்படாத எண்களால் அனுப்பப்படும் எந்த செய்திகளையும் திறக்க வேண்டாம் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

பாதுகாத்துக்

உங்களைப் பாதுகாத்துக் கொள்ள நீங்கள் செய்யக்கூடிய மற்றொரு விஷயம் Settings -> Privacy -> Groups ->"Everyone"-லிருந்து "My Contacts"-க்கு மாற்றிக்கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
WhatsApp Users Beware Of New Text Bomb Crash Issue : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X