Whatsapp பயனர்களே உஷார்.. ஹேக்கர்களின் புதிய வழி மோசடியில் சிக்கிக்கொள்ளாதீர்கள்..

|

வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. வாட்ஸ்அப் மெசேஜிங் செயலியாக மட்டுமின்றி ஒரு மல்டிமீடியா ஷேரிங் செயலியாகவும் செயல்பட்டு வருகிறது. இப்படி குறுகிய காலத்தில் மிகப் பிரபலமான வாட்ஸ்அப் செயலியை தற்பொழுது ஹேக்கர்கள் குறிவைத்துள்ளனர். சமீபத்தில் வாட்ஸ்அப் தொடர்பான பல முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வாட்ஸ்அப் OTP ஸ்கேம் என்றால் என்ன தெரியுமா?

வாட்ஸ்அப் OTP ஸ்கேம் என்றால் என்ன தெரியுமா?

அந்த வரிசையில் Whatsapp OTP scam என்று அழைக்கப்படும் இந்த புதிய வாட்ஸ்அப் ஓடிபி மோசடியில் நீங்களும் சிக்கிக்கொள்ளாதீர்கள், உங்கள் வாட்ஸ்அப் காண்டாக்ட்டில் இருக்கும் உங்களுடைய நண்பர் என்று கூறி, அவரின் வாட்ஸ்அப் எண்ணிலிருந்தே ஹேக்கர்கள் உங்களைத் தொடர்பு கொள்வார்கள். இது எப்படி சாத்தியம்? என்று நீங்கள் நினைக்கலாம், இதைச் செய்ய ஹேக்கர்கள் (Hackers) முதலில் உங்கள் நண்பரின் அகௌண்டை ஹேக் செய்திருப்பார்கள்.

ஹேக்கர்களின் மோசடி வலை

ஹேக்கர்களின் மோசடி வலை

உங்களை நம்ப வைத்து, ஹேக்கர்களின் மோசடி வலையில் உங்களை சிக்கவைக்க, மோசடிக்காரர்கள் ஒருவித அவசரநிலையை உங்களுக்கு விவரிப்பார்கள். உங்கள் நண்பரின் வாட்ஸ்அப் எண்ணிலிருந்து மெசேஜ் வருவதினால் நீங்களும் உங்கள் நண்பருடன் தான் உரையாடுகிறீர்கள் என உங்களை நம்பவைத்து அவர்களின் நாச வேலையை செய்ய ஆரம்பிப்பார்கள். உங்களிடம் சிறிய உதவி என்று பேச்சைத் துவங்கி.

சைலெண்டாக விலை குறைப்பை அறிவித்த ஒப்போ நிறுவனம்.. ஒப்போ ஏ 33 வாங்க சரியான நேரம் இதானா?சைலெண்டாக விலை குறைப்பை அறிவித்த ஒப்போ நிறுவனம்.. ஒப்போ ஏ 33 வாங்க சரியான நேரம் இதானா?

OTP தவறுதலாக பார்வர்ட்

OTP தவறுதலாக பார்வர்ட்

உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு OTP தவறுதலாக பார்வர்ட் செய்யப்பட்டுவிட்டதாகவும், அதை அவருக்குத் திருப்பி அனுப்புமாறு ஹேக்கர் உங்களிடம் வாட்ஸ்அப் செய்தி அனுப்புவார். மோசடிக்காரர்கள் என்பது அறியாமல் நீங்களும் உங்கள் நண்பர் தான் மெசேஜ் செய்வதாக நினைத்து உங்கள் போனிற்கு வந்த OTP எண்ணை அனுப்பி வைப்பீர்கள்.

OTP சரிபார்ப்பு மூலம் ஹேக்

OTP சரிபார்ப்பு மூலம் ஹேக்

நீங்கள் அனுப்பும் OTP எண்ணை வைத்துத் தான் ஹேக்கர்கள் OTP சரிபார்ப்பு மூலம் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை ஹேக் செய்வார்கள். மோசடிக்காரர்களுக்கு உங்கள் OTP கிடைத்த சில நிமிடங்களில் நீங்கள் உங்களின் வாட்ஸ்அப் அகௌண்டிலிருந்து லாக் அவுட் செய்யப்படுவீர்கள். அந்நேரம் முதல் உங்களின் வாட்ஸ்அப் மெசேஜ்கள், காண்டாக்ட் விபரங்கள் மற்றும் பேக்கப் செய்யப்பட்ட அனைத்து தகவலுக்கும் ஹேக்கர்களுக்கு அணுகல் கிடைத்துவிடும்.

பெண் நண்பர்களிடம் தவறுதலாகப் பேசுவது

பெண் நண்பர்களிடம் தவறுதலாகப் பேசுவது

இத்துடன் இது நின்றுவிடாது, உங்கள் வாட்ஸ்அப் எண்ணில் இருக்கும் நண்பர்களிடம் உங்களை போல் நடித்து, உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பண உதவி கேட்பது, பெண் நண்பர்களிடம் தவறுதலாகப் பேசுவது என்று பலவிதமான சிக்கல்களில் உங்களைச் சிக்க வைப்பது மட்டுமின்றி அவர்களையும் ஏமாற்றி இந்த நாச வேலையை ஒரு தொடர்ச் சங்கிலி போல எடுத்துச் செல்வார்கள். இந்த வகை மோசடியில் சிக்காமல் இருக்க two factor வெரிஃபிகேஷன் பயன்படுத்துங்கள்.

விழிப்புடன் இருப்பது நல்லது

விழிப்புடன் இருப்பது நல்லது

இந்த மாதிரியான மோசடிகளில் நீங்கள் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, உங்கள் போனிற்கு வரும் எந்த ஒரு OTP எண்ணையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள, இதுபோன்ற சிக்கலில் நீங்கள் சிக்காமல் விழிப்புடன் இருப்பது நல்லது. இந்த செய்தியை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள், பாதுகாப்பாக இருங்கள்.

Best Mobiles in India

Read more about:
English summary
WhatsApp Users Alert, Things You Need To Know About New OTP Scam Surfaced : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X