விரைவில் : வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்ப முடியும்.!

By Prakash
|

வாட்ஸ்அப் தற்போது இந்தியாவில் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது, மேலும் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அப்டேட் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி விரைவில் நீங்கள் உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் பணம் அனுப்புவதற்கு மிகப்பெரிய வசதியை செய்யும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

தற்போது பேஸ்புக் நிறுவனம் இந்த வாரம் வெளியிடப்பட்ட ஆண்ட்ராய்டு பயன்பாட்டின் பீட்டா பதிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாட்ஸ்அப் பணம் அனுப்பும் வசதி காணப்பட்டது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த வாட்ஸ்அப்.

யுபிஐ:

யுபிஐ:

இந்த ஆண்டு யுபிஐ தொழில்நுட்பம் மூலமாக மட்டும் பல கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன, இருந்தபோதிலும் இந்த தொழில்நுட்பம் பெருவாரியான மக்களை சென்றடையவில்லை. இந்த யுபிஐ வசதியை 44 வங்கிகள் அளித்தாலும் சாதாரணமக்கள் பயன்படுத்தும் அளவுக்கு எளிதானதாக இல்லை

வாட்ஸ்அப்:

வாட்ஸ்அப்:

இப்போது இந்த யுபிஐ வசதி வாட்ஸ் மூலம் அனைத்து மக்களுக்கும் மிக எளிமையாக சென்றடையும் நிலைமை உள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணம் அனுப்பும் வசதி:

பணம் அனுப்பும் வசதி:

இந்த வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் வசதி இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் அனைத்து நேரங்களிலும் இந்த சேவைப் பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொபைல் எண்:

மொபைல் எண்:

வாட்ஸ் மூலம் பணம் அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தும் பட்சத்தில் வங்கிக் கணக்கோடு இணைந்திருக்கும் மொபைல்எண்ணை வாட்ஸ்அப்பில் பயன்படுத்த முடியும் என தகவல் வெளியாகி உள்ளது.

 200மில்லியன்:

200மில்லியன்:

ஹைக்கஸ் மெஸஞ்சர் உள்ளிட்ட பல பிரபலமான செய்தி சேவைகள் ஏற்கனவே கட்டணம் செலுத்தும் சேவைகளை ஆதரிக்கின்றன,எனினும் வாட்ஸ் சேவை இந்தியாவில் 200 மில்லியன் பயனர்கள் பயன்படுத்துகின்றனர்.

மொபைல்  ஆப்:

மொபைல் ஆப்:

இந்தியாவில் மொபைல் மூலம் பணம் அனுப்பும் வசதி மிக அதிகமாக உள்ளது, மேலும் இதற்கு தகுந்த தனித்தனிஆப்ஸ் பயன்பாடுகள் உள்ளன, இருந்தபோதிலும் வாட்ஸ்அப் சேவை மூலம் பணம் அனுப்பும் சேவையை அதிகமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Best Mobiles in India

English summary
WhatsApp UPI Payments Feature Spotted in Beta App ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X