Home
Apps

வாட்ஸ்ஆப்பில் சத்தமின்றி "PIP MODE" எனும் கனவு அம்சம் இணைப்பு.!

பிப் மோட் என்றால் என்ன.? அதன் விரிவாக்கம் தான் என்ன.? அதன் நன்மை என்ன.? இந்த அம்சம் யாருக்கெல்லாம் அணுக கிடைக்கும்.?

By Muthuraj

நேற்று காலையில் தான், வாட்ஸ்ஆப் ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. அதாவது, புதிய டொமைன் ஒன்றை ரிஜிஸ்டர் செய்ததின் விளைவாக, ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்ஆப் செயலியை திறக்காமலேயே மெசேஜ் செய்யும் வழிமுறையை அறிவித்தது. அதனை தொடர்ந்து நேற்று மாலையில், பிப் மோட் எனும் அதன் புதியதொரு அம்சத்தையும் அறிவித்துள்ளது.

வாட்ஸ்ஆப்பில் சத்தமின்றி

பிப் மோட் என்றால் என்ன.? அதன் விரிவாக்கம் தான் என்ன.? அதன் நன்மை என்ன.? இந்த அம்சம் யாருக்கெல்லாம் அணுக கிடைக்கும்.?

தற்போது வரையிலாக யாருக்கெல்லாம் கிடைக்கும்.?

தற்போது வரையிலாக யாருக்கெல்லாம் கிடைக்கும்.?

பிப் மோட் எனும் புதிய மேம்படுத்தல் ஆனது, தற்போது வரையிலாக ஐபோன் பயனர்களுக்கு உருட்டப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு தளத்தையும் எட்டும் என்பதில் சந்தேகம் வேண்டாம். ஏனெனில் வாட்ஸ்ஆப் நிறுவனம் ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் என எந்த பாரபட்சமும் பார்ப்பதில்லை.

வெளியாகியுள்ள பிப் மோட் எனப்படும் அம்சத்தின் நன்மை என்ன.?

வெளியாகியுள்ள பிப் மோட் எனப்படும் அம்சத்தின் நன்மை என்ன.?

பிப் என்பது பிக்சர்-இன்-பிக்சர் (Picture-in-Picture) என்பதின் சுருக்கமாகும். சில மாதங்களுக்கு முன் பரிசோதனை தளத்தில் காணப்பட்ட இந்த பிக்சர்-இன்-பிக்சர் மோட் ஆனது, இறுதியாக ஐஓஎஸ் தளத்தின் வாட்ஸ்ஆப் அப்டேட்டில் உருட்டப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம் ஆனது, வாட்ஸ்ஆப்பில் இருந்தபடியே, அதாவது வாட்ஸ்ஆப்பை விட்டு வெளியேறாமலேயே பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்களை அணுகும் ஆதரவை வழங்கும்.

அதெப்படி சாத்தியம்.?

அதெப்படி சாத்தியம்.?

அதாவது, வாட்ஸ்ஆப் சாட் வழியாக, பகிரப்படும் பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் இணைப்புகளை வாட்ஸ்ஆப்பில் இருந்தபடியே பிளே செய்யலாம் அல்லது திறக்கலாம் அல்லது அணுகலாம். அதுமட்டுமின்றி பிளே ஆகி கொண்டிருக்கும் வீடியோவை பார்த்துக்கொண்டே (க்ளோஸ் செய்யாமலேயே) மற்றொரு வாட்ஸ்ஆப் சாட்டிற்கு செல்வது மட்டுமின்றி, வழக்கம் போல மெசேஜ்களை பரிமாறிக்கொள்ள முடியும்.

ஆண்ட்ராய்டில் எப்போது கிடைக்கும்.?

ஆண்ட்ராய்டில் எப்போது கிடைக்கும்.?

வாட்ஸ்ஆப்பின் ஐஓஎஸ் பதிப்பின் மிக முக்கியமான அம்சமாக பார்க்கப்படும் பிப் மோட் ஆனது கூடிய விரைவில் ஆண்ட்ராய்டு தளத்திலும் உருட்டப்படும் என்று எதிர்பார்க்கலாம். அடு சார்ந்த தகவலை உடனுக்குடன் அறிந்து கொள்ள தமிழ் கிஸ்பாட் தளத்தின் ஆப்ஸ் பிரிவுடன் இணைந்திருக்கவும். இதற்கிடையில் வருகிற ​மே 25 ஆம் தேதி அன்று, வாட்ஸ்ஆப்பில் சில பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறைகளும் (General Data Protection Regulation - GDPR) நிகழவுள்ளன.

குறைந்தபட்சம் 16 வயது இருக்க வேண்டும்.!

குறைந்தபட்சம் 16 வயது இருக்க வேண்டும்.!

நிகழும் ஒழுங்குமுறையின் கீழ், வாட்ஸ்ஆப்பில் இணையும் பயனர்களுக்கு, குறைந்தபட்சம் 16 வயது இருக்க வேண்டும் என்கிற கட்டுப்பாடு ஏற்படுத்தப்படும். உடன் இந்த அப்டேட்டில் க்ரூப் அட்மின்களுக்கு, இதுவரை இல்லாத அளவிலான கட்டுப்பாடு அம்சங்கள் வழங்கப்படும். அதில் - டிஸ்மிஸ் அஸ் அட்மின், ரெஸ்ட்ரிக்ட் க்ரூப், ஆகியவைகள் குறிப்பிடத்தக்கது.

கட்டுப்படுத்தும் அதிகாரங்களை அட்மின்களுக்கு வழங்கும்.!

கட்டுப்படுத்தும் அதிகாரங்களை அட்மின்களுக்கு வழங்கும்.!

உருட்டப்பட்ட, "ரெஸ்ட்ரிக்ட் க்ரூப்" (Restrict Group) அம்சத்தினை பொறுத்தவரை, ஒரு வாட்ஸ்ஆப் க்ரூப்பின் அட்மினுக்கு, மெம்பர் ஒருவர் அனுப்பும் குறிப்பிட்ட டெக்ஸ்ட் மெசேஜை, புகைப்படங்களை, வீடியோக்களை,கிப் பைல்களை, டாக்குமெண்ட்ஸ்களை அல்லது வாய்ஸ் மெசேஜை கட்டுப்படுத்தும் சக்தியை வழங்குகிறது. எளிமையாக கூறவேண்டும் என்றால், ரெஸ்ட்ரிக்ட் க்ரூப் அம்சமானது க்ரூப்பின் மெம்பர்களை, முன் எப்போதும் இல்லாத அளவில் கட்டுப்படுத்தும் அதிகாரங்களை அட்மின்களுக்கு வழங்கும்.

புதிய டொமைன்.!

புதிய டொமைன்.!

நேற்று காலை, பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் பயன்பாடு ஆனது 'wa.me' என்கிற ஒரு புதிய டொமைன் பெயரின் கீழ் பதிவு ஆகியிருப்பதை வெளிப்படுத்தியது. வாட்ஸ்ஆப்பீட்டாஇன்ஃபோ (WAbeta Info) வழியாக வெளியான அறிக்கையின்படி, api.whatsapp.com எனும் ஒரு குறுகிய டொமைன் வழியாக, மிக விரைவில் வாட்ஸ்ஆப் செயலியை திறக்க பயன்படுத்தப்படலாம்.

இது எப்படி வேலை செய்யும்.?

இது எப்படி வேலை செய்யும்.?

ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.18.138-ல் கிடைக்கும் இந்த அப்டேட்டின் பயன் என்னவென்று கேட்டால் : குறிப்பிட்ட நபருக்கு மெசேஜ் செய்ய விரும்பும் பயனர்கள், https://wa.me/ என்கிற டொமைனை டைப் செய்தும் அதனுடன் மொபைல் எண்ணை இணைக்கவும். இதை நிகழ்த்த அவர்கள் தானாக குறிப்பிட்ட வாட்ஸ்ஆப் சாட்டிற்கு அனுப்பப்படுவார்கள். உதாரணமாக உங்கள் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களின் தொலைபேசி எண் +91-9876543210 எனில் https://wa.me/919876543210 என டைப் செய்ய வேண்டும்.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
வாட்ஸ்ஆப் செயலியை திறக்காமலேயே.!

வாட்ஸ்ஆப் செயலியை திறக்காமலேயே.!

ஒருவேளை, குறிப்பிட்ட டொமைன் உடன் தவறான வாட்ஸ்ஆப் நம்பரை டைப் செய்து சாட்டை திறக்க முயற்சித்தால், இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப் ஆனது, யூஆர்எல் வழியாக பகிரப்பட்ட தொலைபேசி எண் தவறானது என உங்களுக்கு அறிவிக்கும். இதன் அர்த்தம், நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்ஆப் செயலியை திறக்காமலேயே, குறிப்பிட்ட நபர்களுக்கு வாட்ஸ்ஆப் செய்ய முடியும் என்று அர்த்தம். இந்த இடத்தில் உங்களுக்கு சரியான தொலைபேசி எண்கள் நினைவில் இருக்க வேண்டும் என்பதை மனதிற்கொள்ளவும்.

Best Mobiles in India

English summary
WhatsApp updates iPhone app with GDPR compliance and Picture-in-Picture mode. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X