இது தெரியம போச்சே! வாட்ஸ்அப் இல் 'GB' அளவு பெரிய சைஸ் ஃபைல்களை அனுப்புவது எப்படி?

|

வாட்ஸ்அப் பயன்பாட்டில் அனைவரும் சந்திக்கக் கூடிய ஒரு பொதுவான சிக்கல் என்னவென்றால் பெரிய சைஸ் ஃபைல்களை ஷேர் செய்வது தான். வாட்ஸ்அப் பயன்பாடு தனது பயனருக்கு ஷேரிங் அம்சத்திற்கான ஒரு வரம்பை வைத்துள்ளது, இந்த வரம்பின் அளவுக்குள் இருக்கும் ஃபைல்களை மட்டுமே நம்மால் ஷேர் செய்ய முடியும். பெரிய சைஸ் ஃபைல்களை வாட்ஸ்அப் மூலம் ஷேர் செய்ய ஒரு எளிய வழி உள்ளது. அதை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.

100 எம்பி அளவு

100 எம்பி அளவு கொண்ட ஃபைல்களை மட்டுமே ஷேர் செய்ய வாட்ஸ்அப் அனுமதிக்கிறது. வாட்ஸ்அப் பயன்பாட்டைப் பயன்படுத்திப் பதிவுசெய்யப்பட்ட வீடியோக்களுக்கான இந்த வரம்பு அதை விடக் குறைவு, இதன் வரம்பு என்பது வெறும் 16 எம்பி மட்டும்தான்.

error மெசேஜ்

இந்த வரம்பை விட பெரிய அளவு ஃபைல்களை வாட்ஸ்அப் மூலம் யாரும் அனுப்ப முயன்றால், குறிப்பிட்ட ஃபைலின் அளவு வரம்பை விட அதிகமாக உள்ளது என்று கூறி ஒரு error மெசேஜ் அவர்களுக்கு அனுப்பப்படும். இந்த error மெசேஜ்ஜை நம்மில் பலரும் நிச்சயம் பார்த்திருக்க வாய்ப்புள்ளது.

சரியான நேரத்தில் நல்ல முடிவை எடுத்த சுந்தர் பிச்சை.! 2021 ஜூன் வரை நீட்டிப்பு.!சரியான நேரத்தில் நல்ல முடிவை எடுத்த சுந்தர் பிச்சை.! 2021 ஜூன் வரை நீட்டிப்பு.!

வாட்ஸ்அப் இல் ஷேர் செய்யமுடியாதா

அப்படியானால் 100 எம்பி மற்றும் 16 எம்பி அளவுக்கு மேலான ஃபைல்களை நம்மால் வாட்ஸ்அப் இல் ஷேர் செய்யமுடியாதா என்ற கேள்வி எழுந்திருக்கும், கவலைப் படாதீர்கள் அதிர்ஷ்டவசமாக இந்த சிக்கலை எளிதாகக் கையாளுவதற்கு நிமிடம் ஒரு வழி இருக்கிறது. வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி 100 எம்பி அளவை விடப் பெரிய ஃபைல்களை நம்மால் ஷேர் செய்ய முடியும். இதற்கு உங்களுக்குக் கூகிள் டிரைவின் (Google Drive) உதவி தேவைப்படும்.

கூகிள் டிரைவ்

வாட்ஸ்அப் பயன்பாட்டில் பெரிய சைஸ் ஃபைல்களை அனுப்புவதற்கான எளிய தந்திரம் என்னவென்றால், நீங்கள் ஷேர் செய்ய விரும்பும் பெரிய சைஸ் பைல்களை கூகிள் டிரைவில் முதலில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர் பதிவேற்றம் செய்த ஃபைலுக்கான லிங்க்-ஐ வாட்ஸ்அப் மூலம் பில் நீங்கள் அனுப்ப வேண்டியவருக்குப் பகிர்ந்தால் போதும்.

இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர், ஸ்டீபன் ஹாக்கிங் இறுதியாக சமர்ப்பித்த இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர், ஸ்டீபன் ஹாக்கிங் இறுதியாக சமர்ப்பித்த "மர்மம்" அவிழ்க்கப்பட்டது.!

எப்படிப் பயன்படுத்துவது

இந்த முறையைப் பின்பற்றி எவ்வளவு பெரிய ஃபைளாக இருந்தாலும் நீங்கள் எளிதில் ஷேர் செய்துகொள்ளலாம். இதை எப்படிப் பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

 • உங்கள் ஸ்மார்ட்போனில் கூகிள் டிரைவ் பயன்பாட்டை திறக்கவும்
 • டிஸ்பிளேயின் கீழ் வலது மூலையில் உள்ள + பிளஸ் ஐகானைத் கிளிக் செய்யவும்
 • பின்னர் Upload File கிளிக் செய்யவும்
 • அதன் பிறகு Open விருப்பத்தைக் கிளிக் செய்யவும்
 • Copy Link விருப்பம்
  • ஃபைல் பதிவேற்றப்பட்டதும், ஃபைலின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளியை கிளிக் செய்யவும்
  • பின்னர் அதில் காணப்படும் Copy Link விருப்பத்தைக் கிளிக் செய்யவும்
  • இப்பொழுது உங்களுடைய வாட்ஸ்அப் பயன்பாட்டை ஓபன் செய்யவும்
  • நீங்கள் இந்த ஃபைலை ஷேர் செய்ய விரும்பும் நபரின் சாட் பாக்ஸ் சென்று Paste செய்யவும்
  • டவுன்லோட் கூட செய்துகொள்ளலாம்

   பிறகு எப்பொழுதும் போல் Send பட்டனைக் கிளிக் செய்யுங்கள்.அவ்வளவு தான் உங்களுடைய ஃபைலுக்கான இணைப்பு லிங்க் அவர்களுக்கு அனுப்பப்பட்டுவிடும். இதை அவர்கள் ஒருமுறை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளலாம் அல்லது விருப்பப்பட்டால் டவுன்லோட் செய்துகொள்ளலாம் .

Best Mobiles in India

English summary
WhatsApp Tricks: How to Send Large Files Through WhatsApp Easily : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X