'தந்திரமாக செயல்படுகிறது வாட்ஸ்அப்' என்று நீதிமன்றத்தில் புதிய புகார்.. என்ன சொல்கிறது அரசாங்கம்?

|

வாட்ஸ்அப் நிறுவனம் தனது புதிய தனியுரிமைக் கொள்கை இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டதிலிருந்து பெரிய சர்ச்சைக்குரிய தலைப்பாகவே இருந்து வருகிறது. புதிய தனியுரிமை கொள்கைகளை ஏற்காவிட்டால் வாட்ஸ்அப்பின் சில அம்சங்களுக்கான அணுகலை மட்டுப்படுத்துவதாக பயனர்களை நிறுவனம் எச்சரித்தது. இந்த புதிய கொள்கையை ஏற்றுக்கொள்ள மே 15 வரை காலக்கெடு கொடுத்திருந்தது.

வாட்ஸ்அப் விஷயத்தில் இந்திய அரசாங்கத்தின் தலையீடு

வாட்ஸ்அப் விஷயத்தில் இந்திய அரசாங்கத்தின் தலையீடு

சமீபத்தில் இந்த விஷயத்தில் இந்திய அரசாங்கத்தின் தலையீடு உள்வந்தது, இந்த நடவடிக்கையை நிறைவேற்றுவதற்கான நிறுவனத்தின் திட்டத்தை இந்திய அரசாங்கம் தற்காலிகமாகத் தடை செய்து வாட்ஸ்அப்பின் செயலை நிறுத்தி வைத்தது. புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத பயனர்களுக்கான எந்த அம்சங்களையும் வாட்ஸ்அப் கட்டுப்படுத்தாது என்று சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியிருந்தது. இந்த புதுப்பிப்பை நடைமுறைப்படுத்த நிறுவனம் வேறு விதத்தில் செயல்படக்கூடும் என்று சந்தேகிக்கப்பட்டது.

புதிய தனியுரிமைக் கொள்கையை ஏற்க இந்தியப் பயனர்களை வாட்ஸ்அப் ஏமாற்றுகிறதா?

இந்திய அரசாங்கம் தற்பொழுது பேஸ்புக்கிற்குச் சொந்தமான செய்தி சேவைக்கு எதிராக நீதிமன்றத்தில் புதிய புகாரைத் தொடர்ந்துள்ளது. புதிய தனியுரிமைக் கொள்கைக்குப் பயனரின் ஒப்புதலைப் பெற வாட்ஸ்அப் சில தந்திரங்களைப் பயன்படுத்துவதாகக் கூறி அரசாங்கம் இப்போது டெல்லி உயர் நீதிமன்றத்தில் புதிய பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வாக்குமூலம் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று ANI வழியாக ஒரு அறிக்கையை வெளியாகியுள்ளது.

அம்பானியை கூட மன்னிச்சுடலாம் ஆனால் இந்த சுல்தானை?!அம்பானியை கூட மன்னிச்சுடலாம் ஆனால் இந்த சுல்தானை?!

உண்மையில், தந்திரமாக தான் செயல்படுகிறதா வாட்ஸ்அப்?

உண்மையில், தந்திரமாக தான் செயல்படுகிறதா வாட்ஸ்அப்?

அறிக்கையின்படி, அரசாங்கத்தின் புதிய பிரமாணப் பத்திரத்தில் பேஸ்புக்கிற்குச் சொந்தமான உடனடி செய்தியிடல் தளமான வாட்ஸ்அப், பயனர்களின் எதிர்ப்பு நடைமுறைகளை 'தந்திரமாகச் சம்மதத்திற்கு' பயன்படுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், நிறுவனம் தனது டிஜிட்டல் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துவதால், தற்போதுள்ள பயனர்கள் புதிய தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டின் தனியுரிமைக் கொள்கை

புதுப்பிக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டின் தனியுரிமைக் கொள்கை

அந்த வாக்குமூலத்தில், "வாட்ஸ்அப் அதன் டிஜிட்டல் வலிமையை ஏற்கனவே உள்ள பயனர்களின் மீது கட்டவிழ்த்துவிட்டது என்றும், புதுப்பிக்கப்பட்ட 2021 தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தும் செயல்களைச் செய்தும், தனிப்பட்ட தரவு பாதுகாப்பு (பி.டி.பி) மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கைக்கு உறுதியளித்திருக்கும் பயனர் தளத்தை இது மாற்றும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

120 ஆண்டு இளமையோடு சாகாமல் உயிர் வாழ ஆசையா? 'சாகா வரத்திற்கான' விடையை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்..120 ஆண்டு இளமையோடு சாகாமல் உயிர் வாழ ஆசையா? 'சாகா வரத்திற்கான' விடையை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்..

'புஷ் நோட்டிபிகேஷன்' மூலம் தொடரும் சிக்கல்

'புஷ் நோட்டிபிகேஷன்' மூலம் தொடரும் சிக்கல்

புதிய தனியுரிமைக் கொள்கையில் பயனரின் சம்மதத்தைப் பெற எந்தவொரு 'புஷ் நோட்டிபிகேஷனையும்' நிறுவனம் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று இந்திய அரசாங்கம் தாக்கல் செய்த வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் கூற்றுப்படி, ''நிறுவனம் அனுப்பும் புஷ் நோட்டிபிகேஷன்கள் நெறிமுறையாக இல்லை, மேலும் சம்மதத்தைப் பெறுவதற்கான இந்த தந்திரம் "மார்ச் 24, 2021 தேதியிட்ட இந்தியப் போட்டி ஆணையத்தின் உத்தரவின் முதன்மையான கருத்துக்கு எதிரானது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் இது பற்றி என்ன சொல்கிறது?

வாட்ஸ்அப் இது பற்றி என்ன சொல்கிறது?

இந்த விஷயத்தில் வாட்ஸ்அப் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரசாங்கம் புகார் அளித்துள்ளதால், நிறுவனம் விரைவில் சில பதில்களை அளிக்க வேண்டியிருக்கும். இதைப் பற்றி நிறுவனம் எடுக்கும் நடவடிக்கை என்ன என்பது எங்களுக்குத் தெரியவில்லை.

தற்போது வரை வாட்ஸ்அப் அம்சங்களில் எதுவும் கட்டுப்படுத்தப்படவில்லை

தற்போது வரை வாட்ஸ்அப் அம்சங்களில் எதுவும் கட்டுப்படுத்தப்படவில்லை

ஆனால், தனியுரிமை வழிகாட்டுதல்கள் நிச்சயமாகப் பெரிய சிக்கலை வாட்ஸ்அப்பின் மீது கொண்டு வந்துள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது அம்சங்களைக் கட்டுப்படுத்துவதை நிறுத்திவிட்டது. ஆனால் இது எப்போது மாற்றப்படும் என்பது நிச்சயமற்றது.

Best Mobiles in India

English summary
WhatsApp Tricking Indian Users To Accept New Privacy Policy New Affidavit Filed In Delhi High Court : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X