லோன், பென்ஷன், இன்சூரன்ஸ் மூன்றையும் குறிவைத்த வாட்ஸ்அப்.! முழுவிவரம்.!
வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு வசதியும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக அதிகளவு மக்கள் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் வாட்ஸ்அப் இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக கடன்,மைக்ரோ இன்சூரன்ஸ், மைக்ரோ பென்ஷன் திட்டங்களை பெறுவதற்கான தளத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக,வாட்ஸ்அப் இந்தியாவின் தலைவர் அபிஜித் போஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சேவைகளை வாட்ஸ்அப் குளோபல் பின்டெக் விழாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவந்த தகவலின் அடிப்படையில் வாட்ஸ்அப் இந்த புதிய நிதியியல் சேவைகளை அறிமுகம் செய்ய ஐசிஐசிஐ வங்கி, கோட்டாக் மஹிந்திரா வங்கி, ஹெச்டிஎப்சி வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்சமயம் இந்த திட்டங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், குறிப்பிட்ட அளவிலான வர்த்தகமும், வருவாயும் இருந்தால் கூட வாட்ஸ்அப் பெரிய அளவில் முதலீடு செய்து விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அபிஜித் கூறியுள்ளார்.

இந்த திட்டம் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு, குறிப்பாக குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு, வரும் ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான வங்கிகளுடன் கையெழுத்திடுவதன் மூலம் வங்கி சேவைகளை வாட்ஸ்அப் குளோபல் பின்டெக் விழாவில் அறிமுகம் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்சமயம் பேடிஎம், போன்பே, அமேசான் போன்ற நிறுவனங்கள் சிறந்த நிதியியலல் சேவைகளை அளித்து வரும் நிலையில, இந்த ஊரடங்கு காலத்தில் அனைத்து நிறுவனங்களும் தங்களது நிதியியல் சேவைகளை விரிவாக்கம் செய்யப் பல்வேறு முதலீடுகளையும்கூட்டணியையும் உருவாக்கியது.

குறிப்பாக மேலே கூறப்பட்ட மூன்று நிறுவனங்களன் ஆதகத்தை வாட்ஸ்அப் எளிதாக தகர்த்துவிட முடியும், காரணம் இந்தியாவில் 400மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. அதில் வெறும் 10சதவிகிதம் பேர் வாட்ஸ்அப்-ன் நிதியியல் சேவையைப் பயன்படுத்தினால் கூட 4கோடி வாடிக்கையாளர்கள் எளிதாக வாட்ஸ்அப் பெற்றுவிட முடியும். கண்டிப்பாக இதில் வாட்ஸ்அப் மிகப்பெரிய வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications