விரைவில்: வாட்ஸ்ஆப் செயலியில் வரும் "இந்த" புதிய அம்சம்.!

|

வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை சேர்த்த வண்ணம் உள்ளது, அந்த வரிசையில் இந்நிறுவனம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் புதிய அம்சத்தை விரைவில் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

மீடியாக்களை எடிட் செய்யும் வசதி

மீடியாக்களை எடிட் செய்யும் வசதி

இப்போது வெளிவந்த தகவலின் அடிப்படையில் வாட்ஸ்ஆப் சாட் விண்டோவில் இருந்தபடி வாட்ஸ்ஆப்பில் வரும் மீடியாக்களை எடிட் செய்யும் வசதி வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் மீடியாக்களை எடிட் செய்ய தனியே வேறொரு செயலியை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

நேரத்தை மிச்சப்படுத்தும்

நேரத்தை மிச்சப்படுத்தும்

மேலும் இந்த அம்சம் கண்டிப்பாக பயனர்களின் நேரத்தை மிச்சப்படுத்தும், பின்பு மீடியா எடிட் செய்ய அவர்கள் பயன்படுத்தும் மூன்றாம் தரப்பு செயலிகளையும் பயனற்றதாக மாற்றும். புதிய அப்டேட் எடிட் மீடியா ஷார்ட்கட் என அழைக்கப்படுகிறது.

Mi A3 மற்றும் Mi A3 லைட் முழு விபரம்! பட்ஜெட் விலையில் அடுத்த புதிய ஆண்ட்ராய்டு ஒன் போன்!Mi A3 மற்றும் Mi A3 லைட் முழு விபரம்! பட்ஜெட் விலையில் அடுத்த புதிய ஆண்ட்ராய்டு ஒன் போன்!

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ்

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ்

வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் இந்த புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது, என்றும் விரைவில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வாட்ஸ்அப் செயலியினுள் புகைப்படம் திறக்கப்பட்டதும் எடிட் பட்டன் காணப்படுகிறது. இதனை க்ளிக் செய்தால் டெக்ஸ்ட், டூடுள் அல்லது தலைப்பை சேர்க்கும் வசதி காணப்படுகிறது.

ஸ்மார்ட்போன் மெமரியும் பாதிக்கப்படாது

ஸ்மார்ட்போன் மெமரியும் பாதிக்கப்படாது

வாட்ஸ்ஆப் மூலம் எடிட் செய்யப்படும் புகைப்படம் பயனர்களின் ஸ்மார்ட்போனில் சேமிக்கப்படுவதில்லை, எனவே ஸ்மார்ட்போன் மெமரியும் பாதிக்கப்படாது. கண்டிப்பாக இந்த புதிய அம்சம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா: ரூ.399-விலையில் அட்டகாசமான போல்ட் இயர்போன் அறிமுகம்.!இந்தியா: ரூ.399-விலையில் அட்டகாசமான போல்ட் இயர்போன் அறிமுகம்.!

ஸ்டேட்டஸ் அம்சம்

ஸ்டேட்டஸ் அம்சம்

மேலும் வாட்ஸ்அப் செயலியில் ஸ்டேட்டஸ் அம்சம் வழங்கி சிலகாலம் ஆகிவிட்டது. இதைத் தொடர்ந்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை ஃபேஸ்புக் மற்றும் இதர செயலிகளுடன் பகிர்ந்து கொள்வது எளிமையாக்கப்பட்டுள்ளது.

தற்சமயம் இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கில் இந்த அம்சம் சீராக இயங்க கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எதையேனும் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.

ஃபேஸ்புக் ஷேர்

ஃபேஸ்புக் ஷேர்

ஃபேஸ்புக் அல்லது ஃபேஸ்புக் லைட் ஆப் ஆண்ட்ராய்டு அல்லது ஐ.ஒ.எஸ். தளத்தில் ஃபேஸ்புக் செயலியை இன்ஸ்டால்
செய்திருக்க வேண்டும். பல்வேறு அப்டேட்கள் இருக்கும் பட்சத்தில் நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் அப்டேட்டை தேர்வு செய்ய வேண்டும்.

ஜீலை 15: ரூ.11,999-விலையில் விற்பனைக்கு வரும் 10.ஆர் ஜி2 ஸ்மார்ட்போன்.!ஜீலை 15: ரூ.11,999-விலையில் விற்பனைக்கு வரும் 10.ஆர் ஜி2 ஸ்மார்ட்போன்.!

ஃபேஸ்புக் செயலிகளுடன் பகிர்ந்து கொள்ள

ஃபேஸ்புக் செயலிகளுடன் பகிர்ந்து கொள்ள

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்டை ஃபேஸ்புக் மற்றும் இதர செயலிகளுடன் பகிர்ந்து கொள்வது எப்படி?
1 - ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயலியை திறக்கவும்.
2 - ஸ்டேட்டஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
3 - ஸ்டேட்டஸ் அப்டேட்டை உருவாக்க வேண்டும்.
4 - ஸ்டேட்டஸ் புதியதா அல்லது பழையதா என்பதை பொருத்து அவற்றை பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படும்.

ஃபேஸ்புக் ஸ்டோரிக்களில் பகிர்ந்து கொள்ள

ஃபேஸ்புக் ஸ்டோரிக்களில் பகிர்ந்து கொள்ள

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை ஃபேஸ்புக் ஸ்டோரிக்களில் பகிர்ந்து கொள்வது எப்படி?
புதிய ஸ்டேட்டசை ஷேர் செய்ய மை ஸ்டேட்டஸ் -- ஃபேஸ்புக் ஸ்டோரி ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

இனி திரையில் தோன்றும் ஆப்ஷனை க்ளிக் செய்தால் ஃபேஸ்புக் செயலி திறக்கும்.
ஃபேஸ்புக் செயலியில் எத்தனை பேர் என்பதை தேர்வு செய்து, ஷேர் நௌ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

இந்த சமயத்தில் வேறு டேபை திறக்கும் பட்சத்தில், ஃபேஸ்புக் ஸ்டோரி ஆப்ஷன் மறைந்துவிடும்.

 மற்ற செயலிகளுடன் ஸ்டேட்டஸ்

மற்ற செயலிகளுடன் ஸ்டேட்டஸ்

அப்டேட் மற்ற செயலிகளுடன் ஸ்டேட்டஸ் அப்டேட்டை பகிர்ந்து கொள்வது எப்படி?
வாட்ஸ்அப் செயலியை திறக்கவும்.
ஸ்டேட்டஸ் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
ஸ்டேட்டஸ் அப்டேட்டை உருவாக்க வேண்டும்.

 வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பகிர்ந்து கொள்ள

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பகிர்ந்து கொள்ள

மற்ற செயலிகளுடன் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பகிர்ந்து கொள்ள மை ஸ்டேட்டஸ் பகுதியில் ஷேர் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.

ஷேர் ஆப்ஷன் மறையும் போது, மற்றொரு டேப் திறக்கும்.
பழைய ஸ்டேட்டசை பகிர்ந்து கொள்ள, ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டில் மை ஸ்டேட்டஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

இனி ஸ்டேட்டஸ் அப்டேட்டில் இருக்கும் ஐகானை க்ளிக் செய்து பின், அதனை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
அடுத்து ஷேர் ஆப்ஷன் திறக்கும், இதில் நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய ஸ்டேட்டஸ் அப்டேட்டை தேர்வு செய்ய வேண்டும்.

Best Mobiles in India

English summary
whatsapp-to-get-quick-edit-media-shortcut-soon-ios-android : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X