Home
Apps

எனக்கும் அவனுக்கும் தான் போட்டியே.. Telegram-ஐ தொடர்ந்து WhatsApp எடுத்த அதிரடி முடிவு!

உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம், தனது உரையாடல் சேவையை மேம்படுத்த புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் மொழிகள் பல்வேறு வகையில் பரிணாமம் அடைந்துவிட்டன. வட்டார மொழிகளின் வார்த்தைகள் அனைத்தும் ஆங்கில எழுத்துகளுக்குள் அடங்கி விட்டன.

தமிழும் - ஆங்கிலமும் கலந்து தங்கிலிஷ் அல்லது தங்கிலம் என்று உருவெடுத்துள்ளது. நம்மில் பலரும் வாட்ஸ்அப், பேஸ்புக் (Facebook) போன்ற தகவல் பரிமாற்ற செயலிகளில் தங்கிலிஷ் உரையாடலையே பயன்படுத்தி வருகிறோம். இந்த உரையாடலும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பரிணாமம் அடைந்து வருகிறது. நமது வார்த்தைகளும் பிக்டோகிராம் (Pictogram) பார்மெட்டுக்கு மாறி வருகிறது. ஒரு வார்த்தைக்கான அர்த்தத்தை குறிக்கும் உருவ விளக்கப்படமே பிக்டோகிராம் எனப்படுகிறது.

Telegram-ஐ தொடர்ந்து WhatsApp எடுத்த அதிரடி முடிவு!

இந்த பிக்டோகிராம் எம்மோஜிகளாக உலகம் முழுவதும் பரவலாகி வருகிறது. ஒரு உரையாடலின்போதோ, ஒருவரது கமெண்டுகளுக்கு பதிலளிக்கும்போதோ மனதில் தோன்றும் வார்த்தைகளை எழுத்துகளாக டைப் செய்யாமல், அந்த வார்த்தைக்கான அர்த்தங்களை பிரதிபலிக்கும் உருவங்களை அனுப்புவதே எம்மோஜிகளின் மொத்த சாராம்சம். இவை பயனர்களிடையே ஆர்வத்தை தூண்டுவதால், தகவல் பரிமாற்ற செயலி நிறுவனங்களும் எம்மோஜிகள் பயன்பாட்டில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

அவ்வப்போது புதுப்புது அப்டேட்களையும் கொண்டு வருகின்றன. அந்த வகையில், வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு அனிமேட்டட் எமோஜிகள் வசதியை கொடுக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, வாட்ஸ்அப்பில் உள்ள ஸ்மைலிகள் (Smiley) மற்றும் பிற பிக்டோகிராம்களை போலல்லாமல் அனிமேஷனுடன் கூடிய பிக்டோகிராம்களாக இந்த புதிய எமோஜிகள் உருவாக்கப்பட உள்ளன.

இந்த எம்மோஜிகளை லோட்டி அனிமேஷன் லைப்ரரி (Lottie Animation Library) மூலம் உருவாக்க திட்டமிட்டுள்ளது வாட்ஸ்அப் நிறுவனம். முன்னதாக, டெலிகிராம் (Telegram) செயலியின் 2023ஆம் ஆண்டின் முதல் அப்டேட்டில், அனிமேஷன் செய்யப்பட்ட எமோஜிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அதில், பயனர்களின் புகைப்படங்களையும் அனிமேட்டட் செய்துகொள்ளும் வசதி வழங்கப்பட்டது. இது டெலிகிராம் பயனர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதன் போட்டி நிறுவனமாக கருதப்படும் வாட்ஸ்அப்பும், அனிமேஷன் செய்யப்பட்ட எமோஜிகள் வசதியின் மீது தனது கவனத்தை திருப்பியுள்ளது.

குறிப்பாக, டெலிகிராமில் உள்ளது போலவே பயனர்களின் புகைப்படங்களையும் அனிமேட்டட் எமோஜிகளாக செய்து கொள்ளும் வசதியையும் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்கட்டமாக வாட்ஸ்அப் பீட்டா (WhatsApp Beta) பயனர்களுக்கு அனிமேட்டட் எமோஜிகள் வசதி வழங்க வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து வாட்ஸ்அப் பீட்டா இன்ஃபோ (wabetainfo) இணையதளத்தில் செய்தி வெளியாகி இருக்கிறது. அதில், வாட்ஸ்அப் செயலியில் உரையாடல் சேவையை மேம்படுத்துவதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம்.

ஆகவே, எங்கள் பயனாளர்களுக்கு என பிரத்யேகமாக அனிமேட்டட் செய்யப்பட்ட எமோஜி வதியை வழங்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த எமோஜிகள் எங்களது பயனர்களை வெகுவாக கவரும் வண்ணம் இருக்கும். அதே வேளையில், இவை வாட்ஸ்அப் மூலம் நேரடியாக வழங்கப்பட உள்ளதால், அப்டேட் செய்துவிட்டாலே எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தி உடன் ஏற்கனவே வாட்ஸ்அப்பில் உள்ள பார்ட்டியிங் பேஸ் (Partying face) ஸ்மைலியின் பிக்டோகிராம், அனிமேட்டட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது. இந்த பார்ட்டியிங் பேஸ் எமோஜி தொப்பி மற்றும் பீப்பீயுடன் இருக்கும். இதனை மகிழ்ச்சியான செய்திகளுக்கு நம்மில் பலர் வாட்ஸ்அப்பில் பயன்படுத்தியிருப்போம்.

Best Mobiles in India

English summary
whatsapp to develop own animated emoji for users
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X