மக்களை குழப்பும் வாட்ஸ்ஆப் மூன்று டிக் விவகாரம்.! உண்மை என்ன?

|

வாட்ஸ்ஆப் செயலி பொறுத்தவரை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக இந்த செயலி மூலம் செய்திகள், தகவல்கள் போன்றவற்றை மிக எளிமையாக பகிர்ந்து கொள்ளலாம். ஆனாலும் மற்ற தளங்களை போன்றே வாட்ஸ்ஆப் செயலியிலும் போலி மற்றும் தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுவது அதிகரித்து வருகிறது என்றே கூறலாம்.

அரசாங்கம் பயனர் குறுந்தகவல்களை கண்காணிக்க

வாட்ஸ்ஆப் செயலியில் மேற்கொள்ளப்படும் புதிய மாற்றங்களின் படி அரசாங்கம் பயனர் குறுந்தகவல்களை கண்காணிக்க இருப்பதாக தகவல் வேகமாக பரவுகிறது.

மூன்று புளூ டிக்கள்

அதன்படி வேகமாக பரவும் குறுந்தகவல்களில் பயனர் அனுப்பும் குறுந்தகவல்களுக்கு மூன்று புளூ டிக்கள் வரும் பட்சத்தில்அதனை அரசு நிறுவனம் கண்காணித்து இருக்கும் என்று கூறப்பட்டது. மேலும் இரண்டு புளூ டிக் மற்றும் ஒரு சிவப்பு நிற டிக் வரும் பட்சத்தில் அரசு நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இத்துடன் இந்த தகவலை மற்றவர்களுக்கும்தெரியப்படுத்த இதனை வேகமாக பகிரக்கோருகிறது.

பள்ளிக்கூடமாக மாறிய whatsapp: வீட்டுப்பாடம் முடிச்சாச்சா?- படிப்பு முக்கியம் பாஸ்!பள்ளிக்கூடமாக மாறிய whatsapp: வீட்டுப்பாடம் முடிச்சாச்சா?- படிப்பு முக்கியம் பாஸ்!

இதனை பிஐபி தனது

ஆனால் உண்மை என்னவென்றால், வைரலாகும் இந்த குறுந்தகவல் முற்றிலும் போலி என அரசு நிறுவனமானபிஐபி (Press Information Bureau) தெரிவித்துள்ளது. இதனை பிஐபி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்ட்டில் தெரிவித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்குமுன்னதாக இதேபோன்ற குறுந்தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு இருந்தது, முந்தைய வைரல் பதிவுகளில் பி.பி.சி செய்தி நிறுவனத்தின் செய்தி தொகுப்பு போன்ற படமும் சேரக்கப்பட்டு இருந்தது, ஆனால் தற்சமயம் இதே தகவலினை பிஜபி வெளியிட்டு இருப்பதாக கூறி பகிரப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து பிஜபி விளக்கம் கூறியுள்ளது.

வாட்ஸ்ஆப் செயலியில்

வாட்ஸ்ஆப் செயலியில் புதிய டிக் பற்றிய விவரங்கள் அந்நிறுவன வலைதளத்தில் அப்டேட் செய்யப்படவில்லை, வலைதளத்தில் தற்சமயம் அப்டேட் செயயப்படவில்லை, வலைதளத்தில் தற்சமயம் இருப்பது போன்று இரண்டு புளூ டிக் பற்றிய விவரங்களே இடம்பெற்றிருக்கின்றன.

Google அதிரடி அறிவிப்பு - அடுத்த இரண்டு மாதத்திற்கு 'இது' இலவசம்! புகுந்து விளையாடுங்க.!Google அதிரடி அறிவிப்பு - அடுத்த இரண்டு மாதத்திற்கு 'இது' இலவசம்! புகுந்து விளையாடுங்க.!

ஏற்கனவே வாட்ஸ்ஆப்

அன்மையில் வாட்ஸ்ஆப் செயலியில் ஒரே சமயத்தில் ஒரு சாட்டிற்கு மட்டுமே குறுந்தகவலை ஃபார்வேர்டு செய் வழி வகுக்கும் புதிய வசதியை வாட்ஸ்ஆப் அமலாக்கியது. ஏற்கனவே வாட்ஸ்ஆப் செயலியில் ஒரே சமயத்தில் ஐந்து பேருக்கு குறுந்தகவலை ஃபார்வேர்டு செய்வதற்கான வசதி வழங்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வாட்ஸ்ஆப் நிறுவனம் அன்மையில் கொண்டுவந்த இந்த குறைவான ஃபார்வேர்டு வசதி உலகம் முழுவதும் பரவும் போலி செய்திகளை முடக்க உதவும்.

Best Mobiles in India

English summary
WhatsApp Three Red Tick Message is Fake Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X