வாட்ஸ்ஆப்பில் புதிய அம்சம் : யூட்யூப் வீடியோக்களுக்கான புதிய பின்னணி.!

பயனர்கள் வேறொரு சாட்டிற்கு சுவிட்ச் செய்யும்பொழுது இந்த யூட்யூப் பின்னணி அம்சம் இயங்குவதை நிறுத்திக்கொள்ளும்.

|

வாட்ஸ்ஆப் பயன்பாட்டின் சாட் விண்டோவில், நேரடியாக யூடியூப் வீடியோக்களை பயனர்கள் பிளே செய்ய அனுமதிக்கும் புதிய அம்சத்தை வாட்ஸ்ஆப் சோதனை செய்கிறது. வீடியோ பிளேபேக்கிற்கான யூட்யூப் பயன்பாட்டைத் ஓப்பன் செய்ய வேண்டிய அவசியத்தை இந்த அம்சம் அகற்றும்.

வாட்ஸ்ஆப்பில் புதிய அம்சம் : யூட்யூப் வீடியோக்களுக்கான புதிய பின்னணி.

(WABetaInfo) டபுள்யூஏபீட்டாஇன்போ-வின்படி, இந்த அம்சம் பிரத்யேக யூட்யூப் பயன்பாட்டை திறப்பதற்கு பதிலாக ஒரு பிக்சர்-இன்-பிக்சர் (PIP) முறையில் யூட்யூப் வீடியோக்களை பின்னணியில் செயல்படுத்தும், பிப் (PIP) பயன்முறை, பின்ச்-டூ-ஸூம், முழு-திரை பார்வை, பின்னணிகளை மறைக்க மற்றும் செய்திகளைத் தொடர்ந்து படிக்க ஆகிய விருப்பங்களுக்கான செயல்பாடுகளையும் அனுமதிக்கும். மேலும் இந்த அறிக்கை, பயனர்கள் வேறொரு சாட்டிற்கு சுவிட்ச் செய்யும்பொழுது இந்த யூட்யூப் பின்னணி அம்சம் இயங்குவதை நிறுத்திக்கொள்ளும் என்றும் குறிப்பிடுகிறது.

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த சமூக செய்தி சேவை உலகளாவிய ரீதியில் 1.2 மில்லியனுக்கும் மேலான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது மற்றும் இந்தியாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது. இந்த வாட்ஸ்ஆப் சேவை குரல் மற்றும் வீடியோ அழைப்பு ஆதரவுகளை தொடங்கியதில் இருந்து தனது சேவைகளில் பல புதிய அம்சங்களை சேர்த்துகொண்டே வருகிறது. ஸ்னாப் ஸ்டோரீஸ் போன்ற ஒரு அம்சத்தினை அறிமுகம் செய்ததால், மேலும் 175 மில்லியன் பயனர்களை சேர்த்துள்ளதாக வாட்ஸ்ஆப் கூறுகிறது.

வாட்ஸ்ஆப்பில் புதிய அம்சம் : யூட்யூப் வீடியோக்களுக்கான புதிய பின்னணி.

வாட்ஸ்ஆப் ஆனது ஏற்கனவே 2-ஸ்டேப் ஆதென்டிக்கேஷன், பதிவிறக்கம் செய்யும் முன்பே வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்வதற்கான திறன், கிப் பகிர்தல் மற்றும் அதிகரிக்கப்பட்ட மீடியா வரம்பு போன்ற பல அம்சங்களை சேர்த்துள்ளது. மேலும் இந்த சேவை சமீபத்தில், எந்தவொரு கோப்பு வகையையும் பகிர்ந்து கொள்ளும் விருப்பத்தை தனது பயனர்களுக்கு உருட்ட தொடங்கியுள்ளது மற்றும் அனுப்பப்படும் பல எணிக்கையிலான புகைப்படங்களை ஒரு ஆல்பம் போல அனுப்பும் அம்சம் ஒன்றையும் சேர்க்க வாட்ஸ்ஆப் சோதனை செய்து வருகிறது.

இந்த புதிய அம்சங்களைத் தவிர, வாட்ஸ்ஆப் பண பரிமாற்றங்களுக்கான யூபிஐ (UPI)-ஐ ஒருங்கிணைக்கவும் திட்டமிட்டுள்ளது. வழக்கமான வாட்ஸ்ஆப் பீட்டா அம்சங்களைப் போலவே, இந்த புதிய யூட்யூப் அம்சமும் முதலில் ஐஓஎஸ்-இல் சோதிக்கப்பட்டு, ஆதரவளிக்கப்படுகிறது. இப்போது இந்த அம்சம் ஐபோன் 6 மற்றும் அதற்கு மேலான சாதனங்களை ஆதரிக்கிறது. விரைவில் இதர வாட்ஸ்ஆப் பிளாட்பார்ம்களுக்கும் உருட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
WhatsApp testing new playback feature for YouTube videos. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X