Home
Apps

ககக போ.. WhatsApp-ல் புது ப்ரீசெட் ஃபில்டர்ஸ்.. மொத்தமா மாறுது.. என்னது?

டெக்ஸ்ட் மெசேஜ்களுக்கான வியூ-ஒன்ஸ் ஆப்ஷன் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து, தற்போது - வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் சாட்களை ஒழுங்கமைக்கும் (Organize) விதத்தை விரிவுபடுத்தும் நோக்கத்தின் கீழ், வாட்ஸ்அப் நிறுவனமானது புதிய சாட் லிஸ்ட்ஸ்-ஐ (Chat Lists) சோதனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது.

டபுள்யூஏபீட்டாஇன்ஃபோ (WABetaInfo) வழியாக கிடைத்துள்ள விவரங்களின்படி, புதிய சாட் லிஸ்டஸ்-ன் கீழ் வரும் ப்ரீசெட் பில்டர்கள் (Preset Filters) ஆனது பயனர்கள் தங்கள் சாட்களை எளிதாக அணுகுவதற்காக, அவைகளை பிரத்யேக சாட் லிஸ்ட்களில் வரிசைப்படுத்த அனுமதிக்கும். இந்த அப்டேட், சாட்ஸ் டேப்பின் (Chats tab) கட்டமைப்பை செம்மைப்படுத்துவதன் மூலம் நேவிகேஷனை இன்னும் எளிமைப்படுத்தும். மேலும் இது சாட்ஸ் டேப்பில் சாட் லிஸ்ட்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், அவற்றை ஒழுங்கமைக்கவும் வாட்ஸ்அப் பயனர்களை அனுமதிக்கிறது.

ககக போ.. WhatsApp-ல் புது ப்ரீசெட் ஃபில்டர்ஸ்.. மொத்தமா மாறுது!

இந்த புதிய அம்சம் - ஐஓஎஸ்-க்கான வாட்ஸ்அப் 26.21.74 அப்டேட்டில் காணப்பட்டுள்ளது. இந்த அம்சம், சாட்ஸ் (Chats) டேப்பின் மேலே எந்த சாட் லிஸ்ட்களை காண்பிக்க வேண்டும் என்பதை தேர்வுசெய்ய பயனர்களை அனுமதிக்கிறது. இரண்டாம் நிலை சாட் லிஸ்ட்கள் "மோர்" (More) எனப்படும் ஒரு தனிப்பிரிவில் கிடைக்கும்.

பயனர்கள் இந்த செக்ஷனை திறந்தவுடன், சாட்ஸ் டேப்பின் மேலே பின் செய்யப்படாத அனைத்து அசாட் லிஸ்ட்களையும் அவர்களால் பார்க்க முடியும். இதன் விளைவாக, பயனர்கள் வாட்ஸ்அப் இன்டர்பேஸை க்ளீன் ஆக வைத்திருக்க முடியும், கூடவே அவர்கள் பயன்படுத்தும் பில்டர்களையும் விரைவாக அணுக முடியும்.

சாட் லிஸ்ட்களை இன்னும் மேம்படுத்த, சாட்களை அதிக நெகிழ்வுத்தன்மையுடன் நிர்வகிக்க, புதிய ப்ரீசெட் பில்டர்களும் வாட்ஸ்அப்பில் சேர்க்கப்பட்டு வருகிறது. டெஸ்ட்ஃப்ளைட்டில் கிடைக்கும், ஐஓஎஸ் 26.22.10.70-க்கான சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டா அப்டேட்டில் இதை கண்டதாக டபுள்யூஏபீட்டாஇன்ஃபோ கூறுகிறது. இது ஆர்கைவ், லாக்டு மற்றும் தேர்ட் பார்ட்டி சாட்களுக்கான புதிய ப்ரீசெட் பில்டர்களில் வாட்ஸ்அப் செயல்படுவதை குறிக்கிறது.

சாட் லிஸ்ட்ஸ்-க்கான புதிய ப்ரீசெட் பில்டர்களை அறிமுகப்படுத்தும் அம்சம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது. இதன் பொருள், அவை இன்னும் பார்வைக்கு தெரியவில்லை, மேலும் இந்த கட்டத்தில் பீட்டா டெஸ்டர்களுக்கும் கூட கிடைக்காது. மேலும் இதன் வெளியீட்டிற்கான அதிகாரப்பூர்வ காலக்கெடுவையும் வாட்ஸ்அப் இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும், இந்த புதிய ப்ரீசெட் பில்டர்கள், ஸ்டாண்டர்ட் வெர்ஷனில் வெளியிடுவதற்கு முன்பு, எதிர்கால அப்டேட்டில் பீட்டா டெஸ்டர்களுக்கு கிடைக்கும்.

புது வியூ ஒன்ஸ் ஆப்ஷன்: வாட்ஸ்அப்பில் தற்போதைக்கு 'வியூ-ஒன்' ஆப்ஷனின் கீழ் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆடியோ மெசேஜ்களை மட்டுமே அனுப்ப முடிகிறது. ஒரு போட்டோ அல்லது வீடியோவை ஷேர் செய்யும் முன்னர் அல்லது ஆடியோ மெசேஜை அனுப்பும் முன்னர், 1 வடிவில் உள்ள ஐகானை க்ளிக் செய்தால், பெறுனரால் அதை ஒருமுறை மட்டுமே பார்க்க அல்லது கேட்க முடியும். இந்த அம்சம் விரைவில் டெக்ஸ்ட் மெசேஜ்களுக்கும் வருகிறது.

டபுள்யூஏபீட்டாஇன்ஃபோ (WABetaInfo) வழியாக கிடைத்து உள்ள இந்த தகவல் உண்மையாக இருந்தால், வாட்ஸ்அப் நிறுவனம் ஆனது மெசேஜ் அனுப்புபவருக்கு கூடுதல் கட்டுப்பாட்டையும், மற்றவர்கள் தங்கள் மெசேஜ்களை எவ்வாறு பார்க்கிறார்கள் மற்றும் சேமிக்கிறார்கள் என்பது குறித்த ப்ரைவஸியையும் வழங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் ஆண்ட்ராய்டுக்கான லேட்டஸ்ட் வாட்ஸ்அப் பீட்டா 2.26.22.7 அப்டேட்டில் இந்த அப்டேட்டை கண்டறிந்த டபுள்யூஏபீட்டாஇன்ஃபோ-வின் கூற்றுப்படி, இந்த அம்சம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது. இது பகிரப்பட்ட மெசேஜ்களை சேமிப்பது, ஃபார்வர்டு செய்வது, பதிவு செய்வது அல்லது ஸ்கிரீன்ஷாட் எடுப்பது போன்றவற்றை தடுக்கும்.

Best Mobiles in India

English summary
WhatsApp testing new chat lists new preset filters for archived locked third party chats in iOS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X